அபே கெதர அவுருது 2023” டிஜிட்டல் நிகழ்ச்சியை தொடர்ச்சியாக 4வது வருடம் நடத்திய HNB FINANCE

Share

Share

Share

Share

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB FINANCE PLC, தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்திற்கான அறிவு மற்றும் வேடிக்கையான பாரம்பரிய புத்தாண்டு விளையாட்டுகள் மற்றும் பிற புத்தாண்டு அம்சங்களை உள்ளடக்கிய டிஜிட்டல் புத்தாண்டு ஊக்குவிப்பு திட்டத்தை தொடர்ச்சியாக நான்காவது முறையாக நடத்தியது. HNB FINANCE இன் “அபே கெதர அவுருது 2023” டிஜிட்டல் ஊக்குவிப்புத் திட்டத்தில் ஏராளமானோர் இணைந்தனர் மற்றும் HNB FINANCE நிறுவனம் இங்கு ஆரம்பிக்கப்பட்ட புத்தாண்டு டிஜிட்டல் விளையாட்டுகளில் இணைந்து வெற்றிபெற்ற அதிர்ஷ்ட வெற்றியாளர்களுக்கு மதிப்புமிக்க பரிசுகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த மூன்று வருடங்களைப் போலவே, இந்த ஆண்டும் புத்தாண்டு தொடர்பான பல டிஜிட்டல் விளையாட்டுக்கள் HNB FINANCE “அபே கெதர அவுருது 2023” டிஜிட்டல் ஆண்டு மேம்பாட்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இது மரத்தன், தலையனை போட்டி, மிட்டாய் பிடிப்பது, சறுக்கு மரம் ஏறுதல், Tuk Tuk Run மற்றும் பல போட்டிகளைக் கொண்டிருந்தது. மேலும், இந்த டிஜிட்டல் ஆண்டு விளையாட்டு பங்குபற்றியவர்களுக்கு பரிசளிப்பதற்காக பதிவு செய்வதற்கான வாய்ப்பையும் வழங்கியது மற்றும் Download செய்யக்கூடிய ஆண்டு பஞ்சாங்கங்கள் மற்றும் ஆண்டு நற்செய்திகளும் வழங்கப்பட்டன.

HNB FINANCE இன் ‘அபே கெதர அவுருது 2023’ டிஜிட்டல் புத்தாண்டு ஊக்குவிப்புத் திட்டம் குறித்து கருத்து தெரிவித்த HNB FINANCE இன் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி உதார குணசிங்க, “புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தில் அதிக கவனம் செலுத்தும் ஒரு நிதி நிறுவனமாக, நாங்கள் இந்த திட்டத்தை கொரோனா தொற்று காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்த போது 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினோம். அதன் பிறகு, பயனர்களின் வலுவான ஆர்வத்தின் காரணமாக, தொடர்ச்சியாக நான்காவது முறையாக, முந்தைய ஆண்டை விட பல புதிய டிஜிட்டல் அனுபவங்களுடன் எங்களது அபே கெதர அவுருது 2023 டிஜிட்டல் புத்தாட்டு வேலைத் திட்டத்தை வழங்கினோம். HNB FINANCE இன் டிஜிட்டல் புத்தாண்டு 2023 ஊக்குவிப்புத் திட்டம் இந்த பண்டிகை காலத்தின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம், ஏனெனில் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு இலங்கையில் இனம் மற்றும் மதம் பாராமல் அனைவருக்கும் அமைதியையும் மகிழ்ச்சியையும் தருகிறது.” என தெரிவித்தார்.

FitsAir தற்போது வணிக வகுப்பு சேவைகளையும்...
Samsung නවතම 12KG Front Load...
Shaping Tomorrow’s Tech as 99x...
RIUNIT புறநகர் சொத்து சந்தை அறிக்கை:...
සංජීව් හුලුගල්ල මහතා Cinnamon Life...
ශ්‍රී ලාංකේය ඇඟලුම් ක්ෂේත්‍රය තිරසාර...
Bespoke AI சலவைத் தயாரிப்புகளை புதிய...
Samsung Sri Lanka Expands Bespoke...
ශ්‍රී ලාංකේය ඇඟලුම් ක්ෂේත්‍රය තිරසාර...
Bespoke AI சலவைத் தயாரிப்புகளை புதிய...
Samsung Sri Lanka Expands Bespoke...
தனது வணிக விரிவாக்கத்தை மேற்கொள்ளும் முகமாக...