ஆசிய சர்வதேச அகாடமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை எட்டியுள்ள HNB FINANCE

Share

Share

Share

Share

இலங்கையின் நிதிச் சேவைகள் துறையில் முன்னணியில் இருக்கும் HNB FINANCE, சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி மற்றும் உயர்கல்வி நிறுவனமான Asian International Academy (AIA) உடன் அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் HNB FINANCE இன் கிளை முகாமைத்துவ மட்ட அதிகாரிகளின் கடன் முகாமைத்துவம் தொடர்பான தொழில்சார் அறிவை அதிகரிப்பதற்கும், அதன் மூலம் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு திறமையான மற்றும் வசதியான சேவையை வழங்குவதற்குமான நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது.

Asian International Academy (AIA) உடனான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தின் கீழ், நாடு முழுவதும் பரந்து விரிந்துள்ள HNB FINANCE கிளை வலையமைப்பின் அனைத்து கிளை முகாமையாளர்களுக்கும் டிப்ளோமா படிப்புகளை படிக்க வாய்ப்பு வழங்கப்படும். அப்போது நிர்வாக மட்டத்தில் இருந்து விற்பனை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வரை அனைவருக்கும் இந்த சந்தர்ப்பம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து HNB FINANCE இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சமிந்த பிரபாத் கருத்து தெரிவிக்கையில், “இந்த நாட்டில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரு நிதி நிறுவனம் என்ற வகையில், அவர்களுக்குத் தேவையான சேவைகளை எளிதாகவும் திறமையாகவும் வழங்க நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். அதை நோக்கிய மற்றொரு முக்கியமான படி, ஆசிய சர்வதேச அகாடமியுடன் (AIA) கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமாகும். இதன் கீழ், எங்கள் கிளை முகாமையாளர்கள் அனைவரையும் நிதிச் சேவைகள் பற்றிய பரிபூரண அறிவைக் கொண்ட அங்கீகரிக்கப்பட்ட தொழில் வல்லுநர்களின் குழுவாக உருவாக்கி அதன் மூலம் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான சேவைகளை மிகவும் திறமையாகவும் வசதியாகவும் வழங்குவோம் என்று நம்புகிறோம். மேலும் இது HNB FINANCEன் எதிர்காலத்திற்கும், மேலும் அனைத்து கிளை முகாமையாளர்களளின் தொழில்முறை எதிர்காலத்திற்கும் சிறந்த முதலீடாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என தெரிவித்தார்.

Asian International Academy இன் தகுதிவாய்ந்த விரிவுரையாளர்களின் தலைமையில் இந்த அனைத்து டிப்ளோமா படிப்புகளையும் முடித்த HNB FINANCE இன் கிளை முகாமையாளர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழை வழங்குவதற்கு இலங்கை கடன் முகாமைத்துவ நிறுவனம் (SLICM) செயற்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாக குறிப்பிடலாம்.

இங்கு உரையாற்றிய AIA குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திரு.ஷனில் ஜயசேகர, “பல்வேறு துறைகளில் உள்ள நிபுணர்களின் தொழில்முறை அறிவை மேம்படுத்துவதற்காக டிப்ளோமா மற்றும் மேம்பட்ட டிப்ளோமா படிப்புகளை நடத்தும் Asian International Academyஇல் டிப்ளமோ படிப்புகளை அறிமுகம் செய்யும் வாய்ப்புக்காக HNB FINANCE உடன் கைகோர்க்க முடிந்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கையின் நிதித்துறைக்கு அங்கீகரிக்கப்பட்ட தொழில்சார் அறிவைக் கொண்ட நிபுணர்களை உருவாக்க இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும், இந்த நாட்டில் நிதிச் சேவைத் துறையின் அங்கீகாரத்தை அதிகரிக்க இது ஒரு காரணமாக இருக்கும், மேலும் இந்த விஷயத்தில் முன்னின்று நடத்திய HNB FINANCEக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என கூறினார்.

தனது வாடிக்கையாளர்களுக்கு சரியான நிதிச் சேவைகளை வழங்குவதற்கான அறிவு மற்றும் திறன்களைக் கொண்ட நிதிச் சேவைத் துறையில் சிறந்த நபர்களை உருவாக்குவதற்குத் தொடர்ந்து அர்ப்பணிக்கப்பட்டுள்ள HNB FINANCE இன் மற்றொரு முன்னோடி படியாகும் மேலும் இது இந்த நாட்டின் நிதிச் சேவைத் துறையின் முன்னேற்றத்திற்கான பெரும் பங்களிப்பாகவும் குறிப்பிடலாம்.

 

සුපිරි බොලිවුඩ් නළු ෂාරුක් ඛාන්...
99x Empowers Tech Talent Through...
දේශීය සූපවේදී ශාස්ත්‍රය ජාත්‍යන්තර තලයකට...
MasterChef Franchise Makes Landmark Debut...
Tied up in tax: Why...
கொழும்பில் City of Dreams Sri...
இலங்கையின் பாரம்பரிய உணவுகளின் சுவையை TikTok...
Kaushala Amarasekara Honoured Among Top...
கொழும்பில் City of Dreams Sri...
இலங்கையின் பாரம்பரிய உணவுகளின் சுவையை TikTok...
Kaushala Amarasekara Honoured Among Top...
දකුණු ආසියානු සංචාරක සහ සුඛෝපභෝගී...