உலகளாவிய இணையப் பாதுகாப்பு சேவை வழங்குநரான Kaspersky, ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளுக்கான தனது வருடாந்த இணையப் பாதுகாப்பு வார இறுதி அமர்வை 2024 ஆகஸ்ட் 4 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை இலங்கையில் நடத்தியது.
இணையப் பாதுகாப்பு தொடர்பான முன்னேற்றங்கள் மற்றும் இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் சமீபத்திய பாதுகாப்பு சவால்களை முகங்கொடுப்பது குறித்த விழிப்புணர்வை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
இதில் உலகின் முன்னணி இணையப் பாதுகாப்பு நிபுணர்கள், ஊடகவியலாளர்கள், முன்னணி தொழில்துறை நிர்வாகிகள் மற்றும் பிற தொழில்வல்லுநர்கள் எதிர்கொள்ளும் கடும் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் AI இன் பிரபலத்தால் ஏற்படக்கூடிய சவால்கள் குறித்த ஆழமான பகுப்பாய்வை Kaspersky இன் இணையப் பாதுகாப்பு வல்லுநர்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.
குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், Ransomware போன்ற இணைய தாக்குதல்கள் மேலும் சிக்கலாகவும், நுணுக்கமாகவும் மாறிவருகின்றன. இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, Kaspersky நிறுவனத்தின் வல்லுநர்கள் உலகின் முன்னணி இணையப் பாதுகாப்பு நிபுணர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும், முக்கிய தொழில்துறைகளில் இருந்து வந்த தலைமை அதிகாரிகளுக்கும் (CTOs) விரிவான பகுப்பாய்வுகளையும் தகவல்களையும் வழங்கினர். மேலும், தற்போதைய அச்சுறுத்தல்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு பரவுவதால் ஏற்படக்கூடிய சவால்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இந்த ஆண்டுக்கான ஆசிய பசுபிக் நாடுகளுக்கான சைபர் பாதுகாப்பு வார இறுதி அமர்வை இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையும் விசேட அம்சமாகும். சர்வதேச அரங்கில் இலங்கையின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதையும், இணையப் பாதுகாப்புத் துறையில் இலங்கை முக்கிய பங்கு வகிக்கத் தொடங்கியுள்ளதையும் எடுத்துக்காட்டுகிறது. இதன் மூலம், இலங்கையில் வளர்ந்து வரும் நிலைமையை மதிப்பிடுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்த Kaspersky, அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், நடுத்தர மற்றும் பெரிய அளவிலான நிறுவனங்கள் மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனங்களுக்கு இணையப் பாதுகாப்பு சேவைகளை வழங்கும் பணியை எடுத்துக்காட்டுகிறது.
இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய Kaspersky இன் ஆசிய பசிபிக் பிராந்தியத்துக்கான முகாமைத்துவப் பணிப்பாளர் அட்ரியன் ஹியா, இணையப் பாதுகாப்பு சேவை வழங்குநர்களும் அவர்கள் சேவை வழங்கும் நிறுவனங்களும் இனையப் பாதுகாப்பு முறைகளை எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என்பதையும், அவர்கள் செயல்படும் பிராந்தியங்களின் சட்ட நிலைமைகள் குறித்து அறிந்திருக்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார். பல நிறுவனங்களுக்கு AI இன்றியமையாத ஒரு காரணியாகும். பெரிய அளவிலான தரவுகளை செயலாக்கும் திறன் இருந்தாலும், AI உடன் இணைக்கப்படும்போது, அந்த பங்குதாரர்கள் தரவுகளின் இணக்கத்தன்மை பற்றி புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நிறுவனம் செயல்படும் பகுதியில் நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும். மேலும், இரகசிய தரவுகள் தொடர்பாக AI எவ்வாறு செயல்படுகிறது மற்றும் எந்த தரவுகளை அணுக முடியும் என்பது குறித்த கொள்கைகளை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த Kaspersky நிறுவனத்தின் உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு குழுவின் (GReAT) பணிப்பாரான இகோர் குஸ்னெட்சோவ், உலகளவில் நடைபெறும் மிகவும் அரிதான இணையக் குற்றம் Ransomware ஆகும். குற்றவாளிகள் இதை ஒரு வணிக மாதிரியாக (RaaS – Ransomware as a Service) இயக்குகின்றனர். இந்த தாக்குதல்கள் பெரும்பாலும் பாதிக்கப்படக்கூடிய பொதுவான பயன்பாடுகளை சுரண்டுதல், ஆபத்துக்குள்ளான மற்றும் வலுக்கட்டாயமாக உடைக்கப்பட்ட கடவுச்சொற்கள் மூலம் நுழைதல் ஆகிய இரண்டு வழிகளில் நடைபெறுகின்றன என தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் அதிக இயல்பான ஒலியுடன் கூடிய மின்னஞ்சல்களை உருவாக்குதல், ஃபிஷிங் தாக்குதல்கள், கடவுச்சொல் உருவாக்கம், malware குறியீடுகளுக்கு உதவுதல் மற்றும் கடவுச்சொல் தாக்குதல்களை மேற்கொள்வதன் மூலம் சமூகப் பொறியியல் தாக்குதல்களை அதிகரிக்கும் திறன் கொண்ட சைபர் குற்றங்களில் AI பயன்பாடு அதிகரித்து வருவது பற்றியும் விவாதிக்கப்பட்டது.
வெறுப்பூட்டும் தாக்குதல்களையும், வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களையும் அடையாளம் காண Kaspersky, AI -ஐப் பயன்படுத்துகிறது. குறிப்பாக, 2024ஆம் ஆண்டில் மட்டும் நாளாந்தம் 411,000 தனித்துவமான மென்பொருள் மாதிரிகளை Kaspersky கண்டறிந்தது. மேலும் 2023 இல், ஒரு நாளைக்கு 403,000 க்கும் மேற்பட்ட மாதிரிகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
விநியோகச் சங்கிலி தாக்குதல்கள் மருத்துவமனைகள், வங்கிகள், விமான சேவைகள் மற்றும் பிற முக்கியமான உள்கட்டமைப்புகளுக்கு எவ்வாறு சேதப்படுத்தும் என்பது இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்ட மிக முக்கியமான விடயங்களில் ஒன்றாகும். Kaspersky GReAT-இன் இணையப் பாதுகாப்பு நிபுணர் இது குறித்து மாநாட்டில் கருத்து தெரிவித்தார்.
இது குறித்த மேலதிக விபரங்களை Kaspersky இலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.