இந்தியாவுக்கான Roaming வசதியை அறிமுகம் செய்யும் Airtel Sri Lanka

Share

Share

Share

Share

இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் தொலைத்தொடர்பு நிறுவனமான எயார்டெல் லங்கா, இலங்கைக்கு நெருக்கமான அண்டை நாடான இந்தியாவிற்கு பயணம் செய்யும் உள்ளூர் எயார்டெல் பாவனையாளர்களுக்கு அதிகமான மதிப்பு மற்றும் சேமிப்புகளை வழங்குவதற்காக எயார்டெல்லின் புதிய இந்தியாவுக்கான Roaming Packகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை முழுவதும், எமது வாடிக்கையாளர்கள் எங்கிருந்தாலும் கட்டுப்பாடற்ற இணைப்பு அனுபவத்தை பெற்றுக் கொள்வதை உறுதிசெய்ய சிறந்த மதிப்பை வழங்குவதில் எயார்டெல் கவனம் செலுத்துகிறது. இந்தியாவிற்கு அடிக்கடி பயணம் செய்யும் எமது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதைக் கவனித்துள்ளோம். எங்கள் எயார்டெல் இந்தியா சர்வதேச Roaming Packகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், நாங்கள் இந்த மதிப்பை எல்லைகளுக்கு அப்பால் கொண்டு சென்றுள்ளோம்.”

“இதன் விளைவாக, எங்கள் வாடிக்கையாளர்கள் இப்போது தங்களது அன்புக்குரியவர்களுடன் இணைந்திருக்க முடியும் மற்றும் வீட்டில் இருப்பது போன்ற அனுபவத்தை தருவதுடன், அது மேலதிக செலவையும் குறைக்கிறது. சந்தையில் மிகவும் மலிவு விலை சர்வதேச Roaming கட்டணத்தை, இந்தியா முழுவதும் எயார்டெல் உலகத் தரம் வாய்ந்த நெட்வொர்க்குடன் இணைப்பதன் ஊடாக, இந்த புதிய இந்திய சர்வதேச Roaming திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு என்றுமில்லாத சர்வதேச Roaming அனுபவத்திற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் – இது இரு நாடுகளுக்கும் சிறந்தது.” என எயார்டெல் லங்காவின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஷிஷ் சந்திரா தெரிவித்தார்.

எயார்டெல் பாவனையாளர்கள், இந்தியாவிற்கு அடிக்கடி செல்லும் பயணிகள், புனித யாத்திரை குழுக்கள், வர்த்தக மற்றும் ஏற்றுமதி சமூகங்கள் மற்றும் இந்திய சுற்றுலா விடுமுறைகளை ஏற்பாடு செய்யும் சுற்றுலா வழிகாட்டிகள் உட்பட பலர், இப்போது எயார்டெல்லின் மலிவு மற்றும் அணுகக்கூடிய இந்திய சர்வதேச Roaming Packageஐப் பயன்படுத்தலாம். இந்தியாவின் மிகவும் பரந்த மற்றும் சிறந்த நெட்வொர்க்குடன், அவர்கள் ‘வீட்டில் இருப்பதைப் போன்ற’ அனுபவத்தை பெறலாம்.

$3 Package $5 Package $15 Package

Duration – 24 Hours Duration – 10 Days Duration – 7 Days

1 GB Data 100MB Data 5 GB Data

Incoming Calls – 30 Minutes Incoming Calls – 30 Minutes Incoming Calls – 120 Minutes

Calls to Sri Lanka – 5 Minutes Calls to Sri Lanka – 15 Minutes Calls to Sri Lanka – 20 Minutes

Calls within India – 30 Minutes Calls within India – 30 Minutes Calls within India – 120 Minutes

10 SMS to Sri Lanka

*Airtel Lanka’s new India Roaming Packs

Recharging செய்த பின்னர் USSD Activation மூலம் Packageஐ எளிதாக செயல்படுத்த முடிவதுடன், மேலும் எயார்டெல் Online Portal, விற்பனை நிலையங்களில் (Over-the-counter -OTC), Recharge.lk போன்ற மின்னணு பணப்பைகள் மற்றும் My Airtel App ஆகியவற்றின் மூலம் எளிதாக செயல்படுத்த முடியும்.

எயார்டெல் லங்கா, இலங்கையில் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான தொழில்நுட்பத்தை மாற்றியமைப்பதில் முன்னணியில் இருந்து வருகிறது. இதன் புதிய 4G Freedom Packsகளை அறிமுகப்படுத்தியது, இது அதன் அனைத்து புதிய 4G நெட்வொர்க்குடன் முழுமையாக பொருந்தி, முற்கட்டணம் செலுத்தும் திட்டங்களுக்கு புதிய அர்த்தத்தை அளித்தது.

இந்தியாவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள எயார்டெல், இந்தியாவில் மிகப்பெரிய ஒருங்கிணைந்த தொலைத்தொடர்பு தீர்வுகள் வழங்குநராகும். இது தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்கிறது, மேலும் இதன் சில்லறை விற்பனை பட்டியலில் High Speed 4G/5G Mobile Broadband, 1 Gbps வரையிலான வேகத்தை உறுதிப்படுத்தும் எயார்டெல் Xstream, Fiber மற்றும் On-demand பொழுதுபோக்கு, இசை மற்றும் வீடியோவை உள்ளடக்கிய Streaming சேவைகள், டிஜிட்டல் பணப்பரிமாணங்கள் மற்றும் நிதி சேவைகள் ஆகியவை அடங்கும். இந்த நிறுவனம் உலகளவில் முதல் மூன்று Mobile operatorsகளில் ஒன்றாகும், மேலும் இதன் நெட்வொர்க் 2 பில்லியனுக்கும் அதிகமான மக்களை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Bharti Airtel Lanka 2009 இல் இலங்கையில் வணிகச் செயல்பாடுகளை ஆரம்பித்தது மற்றும் 1 மில்லியன் வாடிக்கையாளர்களை விரைவில் எட்டியது. எயார்டெல் இலங்கையின் தொழில்நுட்ப புத்தாக்கம் மற்றும் சேவை சிறப்பு ஆகியவற்றின் முன்னுதாரணம் இலங்கை இளைஞர்களிடையே வேகமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இலங்கை முதலீட்டு சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட எயார்டெல் லங்கா, Voice, Data மற்றும் நிறுவன தீர்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய டிஜிட்டல் மொபைல் சேவைகளை வழங்குகிறது, மேலும் தற்போது இலங்கையில் வேகமான 3G மொபைல் நெட்வொர்க் வழங்குநராக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

ජෝන් කීල්ස් සමාගම, කාමර 687කින්...
687 அறைகள் கொண்ட Cinnamon Life...
Kaspersky 2024 இன் முதல் பாதியில்...
Mahindra Ideal Finance හි නව...
Mahindra Ideal Finance appoints Mufaddal...
மஹிந்திரா ஐடியல் ஃபைனான்ஸின் புதிய முகாமைத்துவப்...
HNB, එතෙර කාසියෙන් රට බබලන්නට...
මෙරට වාරි ප්‍රතිසංස්කරණ ඉතිහාසයේ සුවිශේෂී...
மஹிந்திரா ஐடியல் ஃபைனான்ஸின் புதிய முகாமைத்துவப்...
HNB, එතෙර කාසියෙන් රට බබලන්නට...
මෙරට වාරි ප්‍රතිසංස්කරණ ඉතිහාසයේ සුවිශේෂී...
இலங்கையின் சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிக்கும் TikTok