இலங்கையின் விவசாய வணிகத்தை வலுப்படுத்த Browns Agruculture உடன் கைகோர்க்கிறது HNB

Share

Share

Share

Share

விவசாயத்துறை தற்போது எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியிலும் அண்மைய முயற்சிகளுக்கு ஏற்ப, இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான HNB, நாட்டின் விவசாய இயந்திரங்களின் முன்னோடியான Brown விவசாயத் துறையுடன் மீண்டும் கைகோர்த்துள்ளது.

இந்த கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவித்த சஞ்சய் விஜேமான்ன, HNB வாடிக்கையாளர் சேவைகள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர வங்கிகளின் பிரதிப் பொது முகாமையாளர், “கடந்த சில வருடங்களாக இலங்கையில் விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இது விவசாயத் தொழில், தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதி சந்தை ஆகியவற்றில் மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலைமையை நன்கு புரிந்து கொண்டு நாட்டை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர எம்மை அர்ப்பணித்தோம். அதன்படி, விவசாயிகளுக்கு பிரீமியம் டிராக்டர்கள் மற்றும் அறுவடை இயந்திரங்களை எளிதாக வாங்குவதற்கு Browns Agriculture உடன் கைகோர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.”

“நாங்கள் வழங்கிய தீர்வுகள் இலங்கையில் விவசாயத் தொழில்துறையில் ஒரு புதிய மறுமலர்ச்சியை உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு பங்களிப்பதில் நாங்கள் எங்கள் பங்கை ஆற்ற உறுதிபூண்டுள்ளோம்.” என தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில், விவசாய இயந்திரங்களின் சேவை, பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு செலவுகளை சந்திப்பது விவசாயிகளுக்கு சவாலாக உள்ளது. HNB மற்றும் Browns Agriculture உடனான இந்த கூட்டிணைவின் கீழ், TAFE இப்போது டிராக்டர் வாங்குதல்களுக்கு 2 வருட (அல்லது 2000 மணிநேரம்) உத்தரவாதத்தை வழங்குகிறது. மேலும், இந்த HNB/Browns லீசிங் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் ஒரு டிராக்டரை வாங்கும் விவசாயிகளுக்கு கூலிக் கட்டணங்கள் இன்றி வீட்டுக்கே வந்து நான்கு தடவை உதிரிப்பாகங்களை சரிபார்க்கும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். HNB வாடிக்கையாளர்கள் அனைத்து டிராக்டர் மாடல்களுக்கும் இலவசப் பதிவைப் பெறலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட டிராக்டர் மாடல்களுக்கு முதல் ஆண்டு காப்புறுதி பிரீமியம் இலவசமாக வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்களுக்கு YANMAR மற்றும் SUMO அறுவடைக் கருவிகளை வாங்கும் போது கூலிக் கட்டணம் இல்லாமல் மூன்று தடவை உதிரிப்பாகங்களை சரிபார்க்கும் சேவையை வாடிக்கையாளரின் வீட்டிற்கேவந்து வழங்குவதுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிகளுக்கு 6 மாத உத்தரவாதமும் வழங்கப்படுகிறது.

“Browns Agriculture பிரிவு, சிறந்த தரமான தயாரிப்புகள், சிறந்த விற்பனைக்குப் பின் சேவைகள் மற்றும் நீண்ட கால உறவுமுறை மூலம் விவசாயிகளின் முதல் தேர்வாக விவசாயிகளின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. இத்தகைய இக்கட்டான நேரத்தில் விவசாயத் துறையை மேம்படுத்துவதற்கு எங்களைப் போன்றே அதே குறிக்கோளுடன் செயல்படும் HNB உடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்த கூட்டாண்மை மூலம், விவசாயிகளுக்கு மதிப்புமிக்க நன்மைகள் மற்றும் அவர்களின் வணிகங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வசதியான லீசிங் தீர்வுகளை வழங்க நாங்கள் எதிர்நோக்குகிறோம்.” என Browns Agriculture மற்றும் கனரக இயந்திரப் பிரிவின் தலைமைச் செயற்பாட்டு அதிகாரி சஞ்சய் நிஷங்க தெரிவித்தார்.

සුපිරි බොලිවුඩ් නළු ෂාරුක් ඛාන්...
99x Empowers Tech Talent Through...
දේශීය සූපවේදී ශාස්ත්‍රය ජාත්‍යන්තර තලයකට...
MasterChef Franchise Makes Landmark Debut...
Tied up in tax: Why...
கொழும்பில் City of Dreams Sri...
இலங்கையின் பாரம்பரிய உணவுகளின் சுவையை TikTok...
Kaushala Amarasekara Honoured Among Top...
கொழும்பில் City of Dreams Sri...
இலங்கையின் பாரம்பரிய உணவுகளின் சுவையை TikTok...
Kaushala Amarasekara Honoured Among Top...
දකුණු ආසියානු සංචාරක සහ සුඛෝපභෝගී...