இலங்கையின் MSMEக்கள் மீதான பல நெருக்கடிகளின் தாக்கம் குறித்து புத்தாக்கமான அறிக்கையை வெளியிட்ட ILO

Share

Share

Share

Share

“இலங்கையின் நுண் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் (MSMEs) மீதான பல நெருக்கடிகளின் தாக்கம்” தொடர்பான முதன்மை அறிக்கையொன்றை சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் (International Labour Organization – ILO) நவம்பர் 7, 2023 அன்று வெளியிடவுள்ளது. இந்த அறிக்கை ILO மற்றும் NielsenIQ ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்ட விரிவான பகுப்பாய்வின் ஒரு அம்சமாகும், இதில் 10 மாவட்டங்களில் 550 க்கும் மேற்பட்ட MSMEs-களிடம் நடாத்தப்பட்ட கணக்கெடுப்புகளும் அரச பிரதிநிதிகள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளுடன் துறை சார்ந்த நேர்காணல்களும் அடங்கும்.

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் MSMEகள் மீதான தாக்கத்தை பகுப்பாய்வு செய்வதன் மூலம், இந்த விரிவான மற்றும் சரியான நேரத்தில் புத்தாக்கமான ஆய்வு செய்தல், தொழிலாளர் சந்தை மீட்சி மற்றும் மாற்றத்திற்கான உத்திகளை வடிவமைப்பதற்கான ஒரு முக்கிய வளமாக செயல்படுதல், கொள்கை ஆதரவு குறித்து உட்பார்வைகளை வழங்குதல், துறையின் செயல்திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதாகும்.

இலங்கையின் வேலைவாய்ப்பு மீட்சி மற்றும் எதிர்கால பொருளாதார வளர்ச்சியில் கணிசமான பகுதி MSMEs-களின் செயல்திறனைப் பொறுத்துள்ளது. இந்த புத்தாக்கங்கள் இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் மறுசீரமைப்பின் மையப்பகுதியாக வேலைவாய்ப்பு உருவாக்கத்துடன் MSMEs-களின் மீட்சியையும் அவற்றின் வளர்ச்சியையும் ஆதரிக்கும் கொள்கைகள் மற்றும் உத்திகளை உருவாக்கும் செயல்முறையைத் தெரிவிக்க உதவும் என்று நம்புகிறோம்என ILO இலங்கை மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கான பணிப்பாளர் சிம்ரின் சிங் தெரிவித்தார்.

அறிக்கையின் முக்கிய கண்டுபிடிப்புகளில் ஒன்று, COVID-19 பெருந்தொற்றிலிருந்து மீண்டெழுந்த MSMEகளில் சுமார் 80 சதவீதத்தின் வணிகச் செயல்பாடுகளை கடுமையாக பாதித்தது, அதே நேரத்தில் 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியானது கணக்கெடுக்கப்பட்டவர்களில் 89 சதவீதத்தை பாதித்தது, குறிப்பாக சுற்றுலா, உற்பத்தி, கட்டுமானம், போக்குவரத்து மற்றும் சேமிப்பு, மொத்த மற்றும் சில்லறை வணிகம், மற்றும் பிற சேவைகள் துறைகளில் இது வியாபித்திருந்தது.. மேலும், MSME வளர்ச்சியை ஆதரிக்க அர்ப்பணிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து பெரும்பாலான MSMEகளுக்கு ஆதரவும் கிடைக்கவில்லை என்றும், அதற்கு பதிலாக தாங்களாகவே போராடினர் அல்லது தங்களது தொழிலை மூடினார்கள் என்றும் கண்டறியப்பட்டது.

மேலும், இத்தகைய மீண்டெழுந்த MSMEகள், வணிகச் செயல்பாடுகளுக்காக டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் மற்றும் தொழிலாளர்களின் வசதிகளின் அடிப்படையில் தங்கள் செயல்பாடுகளை சரிசெய்தல் போன்ற நெகிழ்வான வழிமுறைகளை ஏற்றுக்கொண்டது. மேலும், இந்த ஆய்வு தொழில்முனைவு நோக்குநிலை, தொழில்நுட்பம் சார்புடைய, காரணி மாற்றீடு, கழிவுகளைக் குறைத்தல் மற்றும் புதிய சந்தைகளைக் கண்டறிதல் ஆகியவற்றை முதன்மை மீள் உறுதித் திறன் காரணிகளாகக் கண்டறிந்துள்ளது.

இந்த அறிக்கையானது மாற்றத்திற்கான பரந்த பரிந்துரைகளையும் வழங்குகிறது, இலங்கையின் வேலைவாய்ப்பு மீட்சியில் பரந்த தாக்கத்தை ஏற்படுத்தும் MSME வளர்ச்சியை எளிதாக்குவதற்கான 12 முக்கிய நடவடிக்கை பகுதிகளை முன்னிலைப்படுத்துகிறது, மேலும் இவை முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் சாதகமான பொருளாதார சூழலை உருவாக்குதல், பொருளாதாரக் கொள்கை சீர்திருத்தங்களுடன் தொடர்புடைய தொழிலாளர் சந்தை விளைவுகளை கண்காணித்தல், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு சந்தை வாய்ப்புக்களை அதிகரிக்கும் அதே வேளையில் ஆற்றல் மற்றும் பயன்பாட்டு செலவுகளை கட்டுப்படுத்த நிறுவன சீர்திருத்தங்களை செயல்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

இந்த அறிக்கையானது கொள்கை வகுப்பாளர்கள், வணிகத் தலைவர்கள் மற்றும் இலங்கையின் MSMEs-களின் எதிர்காலம் குறித்து கரிசனையுடைய பங்குதாரர்களுக்கு மிகவும் மதிப்புமிக்க வளமாகும். இது இந்த முக்கிய வணிகங்கள் எதிர்கொள்ளும் சவால்களின் விரிவான கண்ணோட்டத்தை வழங்குவதோடு அவற்றின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதற்கும் தேவையான ஒத்துழைப்பு வழிமுறைகள் குறித்து முக்கிய நுணுக்க விபரங்களை வழங்குகிறது.

“ILO இலங்கையின் தொழிலாளர் சந்தை மீட்சி மற்றும் மாற்றத்திற்கான பாதையை ஆதரிப்பதில் உறுதியாக உள்ளது, மேலும் இந்த அறிக்கையானது அந்த திசையில் முக்கியமான படியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்என சிம்ரின் சிங் மேலும் தெரிவித்sதார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் ஒத்துழைப்பு...
Sunlight’s ‘Manudamin Wadiyamak’ Campaign Inspires...
TikTok ஏற்பாட்டில் இலங்கையில் நடைபெற்ற சிறு...
HNB Finance wins Silver at...
සොෆ්ට්ලොජික් ලයිෆ් රුපියල් බිලියන 14.5ක...
TikTok Shares Election Integrity Measures...
සුව දිවිය පදනම සහ McKinsey...
TikTok ශ්‍රී ලංකාවේ සුළු හා...
TikTok Shares Election Integrity Measures...
සුව දිවිය පදනම සහ McKinsey...
TikTok ශ්‍රී ලංකාවේ සුළු හා...
ஆறு மாதங்களில் 16.2 பில்லியன் ரூபா...