இலங்கையில் தேயிலை துறையில் சிறந்து விளங்கிய Zesta Tea தனது இருபத்தைந்து வருட பூர்த்தியைக் கொண்டாடுகிறது

Share

Share

Share

Share

சன்ஷைன் கன்ஸ்யூமர் லங்காவின் கீழ் நன்கு அறியப்பட்ட வர்த்தக நாமமான Zesta Tea, நாட்டின் தேனீர் பிரியர்களுக்கு முத்திரையிடப்பட்ட, உயர்தர மற்றும் ஏற்றுமதி செய்யக்கூடிய தேயிலையை அறிமுகப்படுத்திய இலங்கையின் முதல் வர்த்தக நாமம், தரம், சுவை மற்றும் பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில் தனது 25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இலங்கை தேயிலை தொழிலில் நிகரற்ற மேன்மை சமீபத்தில் கொண்டாடப்பட்டது. Zesta பிராண்டின் வரலாற்றில் ஒரு மைல்கல்லைக் குறிக்கும் வகையில் ஜனவரி 17, 2024 அன்று Zesta இன் ஊழியர்கள் மற்றும் Sunshine Holdings இன் சிரேஷ்ட நிர்வாகத்தின் பங்கேற்புடன் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது.

புத்தாக்கம் மற்றும் அதிநவீனத்துடன் உயர்தர தேயிலையை இலங்கை சந்தைக்கு வழங்குவதற்கான நற்பெயருடன், Zesta 1998 ஆம் ஆண்டு முதல் தடவையாக இலங்கையர்களுக்கு 100% Broken Orange Pekoe Fannings (BOPF) தனித்துவமான கலவையை அறிமுகப்படுத்தியது, இது சர்வதேச சந்தைக்கு மாத்திரமே சிறந்த தேநீர் என்ற கருத்திற்கு சவாலை ஏற்படுத்தியது. பாரம்பரிய அணுகுமுறைகளில் இருந்து விலகி, துணிச்சலான புதிய உத்திகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் இதயங்களையும் மனதையும் நெருங்கி வருவதன் மூலம், இலங்கையர்களுக்கு மிக உயர்ந்த தரமான தேயிலையை வழங்குவதில் Zesta இன் வர்த்தக நாம அர்ப்பணிப்பு, அதை பிரபலமான வீட்டுப் பெயராக மாற்றியுள்ளது.

இந்த தனித்துவமான நிகழ்வில் கருத்து தெரிவித்த சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷ்யாம் சதாசிவம் கூறியதாவது: “இருபத்தைந்து ஆண்டுகளின் சிறப்பைக் கொண்டாடும் இந்த வேளையில், இந்த வெற்றிக்கு பங்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 1998 ஆம் ஆண்டு Zesta பிராண்டின் அறிமுகத்திற்கு முன்னோடியாக இருந்த மற்றும் Zesta பிராண்டை புதிய உயரத்திற்கு தொடர்ந்து வழிநடத்திய விஷ் கோவிந்தசாமியின் ஈடு இணையற்ற தலைமைத்துவம் மற்றும் எங்கள் ஆர்வமுள்ள குழு மற்றும் விசுவாசமான வாடிக்கையாளர்களின் தளராத ஆதரவின் காரணமாக இந்த மைல்கல்லை எங்களால் எட்ட முடிந்தது.” என அவர் தெரிவித்தார்.

“தொடர்ச்சியான புத்தாக்கம் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மூலம் இலங்கையில் தேயிலை தொழிற்துறையை மேம்படுத்துவதை இலக்காக கொண்டு Zesta இன் எதிர்காலத்தை எதிர்பார்க்கிறோம். Zesta பிராண்டின் அடுத்த அத்தியாயத்தை மாற்றுவதற்கும், உள்ளூர் மற்றும் சர்வதேச தேயிலை ஆர்வலர்களுக்கு அதிக திருப்தியைக் கொண்டுவருவதற்கும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

Zesta பிராண்ட் கடந்த 25 ஆண்டுகளில் பல குறிப்பிடத்தக்க சாதனைகளை அடைந்துள்ளது. அதன் BOPF இன் விதிவிலக்கான தரத்தை சிறப்பித்துக் காட்டும் வகையில், Zesta அதிக விற்பனையைப் பதிவுசெய்து, பல ஆண்டுகளாக அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க முடிந்தது. மேலும், 2016 ஆம் ஆண்டில், Zesta உலகளாவிய Shangri-La ஹோட்டல் சங்கிலியுடன் கூட்டு சேர்ந்தது மற்றும் 2022 இல், அதன் Wellness Range மற்றும் Zesta Red ஆகியவற்றை அறிமுகப்படுத்துவதன் மூலம் மாறிவரும் நுகர்வோர் ரசனைகளை பூர்த்தி செய்யும் வகையில் அதன் தயாரிப்புகளை விரிவுபடுத்தியது.

இந்த புத்தாக்கங்களின் மூலம் உயர்ந்த தரத்திலான தேயிலை நுகர்வோருக்கு அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான பிராண்டின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறது மற்றும் தொழில்துறை போக்குகளுக்கு முன்னால் இருக்க Zestaவின் திறனையும் அர்ப்பணிப்பையும் நிரூபிக்கிறது. Zesta பிராண்ட் அதன் அடுத்த அத்தியாயத்திற்கு நகரும் போது, தேயிலை கலையை மறுவரையறை செய்வதிலும், உள்ளூர் மற்றும் உலகளாவிய நுகர்வோருக்கு இணையற்ற Zesta அனுபவத்தை வழங்குவதிலும் கவனம் செலுத்தப்படுகிறது.

 

 

Pedro Estateஇல் அமைச்சர் தொண்டமானின் அத்துமீறல்...
වටවල වැවිලි පීඑල්සී නව සභාපති...
TikTok යාවත්කාලීන කරන ලද ප්‍රජා...
ஆசிய சர்வதேச அகாடமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை...
CIC Holdings 2024 මූල්‍ය වර්ෂය...
HNB FINANCE invests in employee...
Evolza Appoints Visionary Leader Thareendra...
MAS Holdings and Ambercycle Partner...
HNB FINANCE invests in employee...
Evolza Appoints Visionary Leader Thareendra...
MAS Holdings and Ambercycle Partner...
உலகளாவிய பெருந்தோட்டத் தொழிலில் உலக முதல்வரான...