எதிர்கால பசுமைத் தலைவர்களை உருவாக்க கூட்டிணையும் CIC மற்றும் கொழும்பு ஆனந்தா கல்லூரி

Share

Share

Share

Share

  1. இலங்கையின் எதிர்கால பசுமைத் தலைவர்களை உருவாக்குவதற்கு, விவசாயம் சார்ந்த பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான CIC Holdings PLC (CSE: CIC) அண்மையில் கொழும்பு ஆனந்தா கல்லூரியுடன் கூட்டிணைந்துள்ளது. இதற்காக ‘Swastha by Link Natural’ அனுபவ மத்திய நிலையத்தில் CIC நடத்திய நிகழ்வில், கொழும்பு ஆனந்த கல்லூரி அதிபர் டி.எம்.எல்.பி. திஸாநாயக்க, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களின் வீட்டு அறுவடைகளை CIC குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அரோஷன் சேரசிங்க மற்றும் CIC Agri Clusterஇன் முகாமைத்துவப் பணிப்பாளர் வருண மதவனராச்சி ஆகியோரிடம் கையளித்தனர்.

பாடசாலைக்கு Grus Bags, விதைகள் மற்றும் உரங்களை வழங்குவதற்கும், மாணவர்களின் ஆர்வத்தை வளர்ப்பதற்கும், உணவுப் பாதுகாப்பு, புவி வெப்பமடைதலை எதிர்த்துப் போராடுதல் மற்றும் நிலையான பசுமை முயற்சிகளை ஊக்குவித்தல் போன்ற முக்கியப் பிரச்சினைகள் குறித்த அறிவை அவர்களுக்கு வலுவூட்டுவதற்கும் CICக்கு கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பிரதிநிதிகள் நன்றி தெரிவித்தனர். CIC இன் அர்ப்பணிப்பு அதன் வணிக நடவடிக்கைகளின் உடனடி நோக்கத்திற்கு அப்பாற்பட்டது, இது நிலைத்தன்மை மற்றும் நெறிமுறை வணிக நடைமுறைகளின் பரந்த அம்சங்களை உள்ளடக்கிய ஒரு முழுமையான அணுகுமுறையை பிரதிபலிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

உலகளாவிய விரிவாக்கத்தைத் தொடரும் HBO MAX,...
HBO Max continues global expansion,...
Rockland Group Commemorates 101 Years...
City of Dreams Sri Lanka-வின்”Signature...
அரசின் ஆதரவுடன் STEM Feed திட்டத்தை...
ජනකාන්ත බොලිවුඩ් රංගන ශිල්පී අර්ජුන්...
ශ්‍රී ලංකාවේ ආහාර පිළිබඳ රස...
AHRP, Sentiva, and Altrium sign...
ජනකාන්ත බොලිවුඩ් රංගන ශිල්පී අර්ජුන්...
ශ්‍රී ලංකාවේ ආහාර පිළිබඳ රස...
AHRP, Sentiva, and Altrium sign...
Evolution Auto மற்றும் Ather Energy...