ஐரோப்பிய சந்தைகளுக்காக Emil Frey உடன் மூலோபாய கூட்டணியை உருவாக்கியுள்ள TVS Motor Company

Share

Share

Share

Share

இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனத் துறையில் செயல்படும் ஒரு முன்னணி உலகளாவிய வாகன உற்பத்தியாளரான TVS Motor Company, ஐரோப்பிய சந்தையில் நுழைவதாக அண்மையில் அறிவித்துள்ளது. 100 ஆண்டு பழமைவாய்ந்த நிறுவனம் மற்றும் வாகன விநியோகத்தில் முன்னணி பெயர் என்று கருதப்படும் Emil Frey உடன் இறக்குமதி மற்றும் விநியோக ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

Emil Freyஇன் விரிவான விநியோக வலையமைப்பு மற்றும் ஐரோப்பாவில் ஆழமான சந்தை நுண்ணறிவு ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் TVS Motor Companyற்கான உலகளாவிய விரிவாக்கத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியை இந்தக் கூட்டாண்மை குறிக்கிறது. புத்தாக்கம் மற்றும் தரத்திற்கான அர்ப்பணிப்புக்காக அறியப்பட்ட TVS Morot Company, ஐரோப்பிய வாடிக்கையாளர்களுக்கு உயர் செயல்திறன் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட இரு சக்கர வாகனங்களை வழங்க உள்ளது.

TVS Motor Companyயும் Emil Frey பொறுப்புமிக்க மற்றும் நிலையான போக்குவரத்துக்கு அர்ப்பணித்துள்ளன, மேலும் சிறந்த வாடிக்கையாளர் சேவை மற்றும் திருப்தியை வழங்குவதில் அதிக கவனம் செலுத்துகின்றன. TVS Motor Companyஇன் அதிநவீன மற்றும் முன்னோடித் தீர்வுகளை வழங்குவதில் கவனம் செலுத்துவதுடன், உள்ளூர் வாடிக்கையாளர்களைப் புரிந்து கொள்ளும் Emil Freyன் ஆழ்ந்த திறன் மற்றும் அவர்களின் வளர்ந்து வரும் தேவைகள் ஆகியவை இந்த கூட்டாண்மைக்கான தனித்துவமான DNA ஐ உருவாக்க உதவியது, இது ஐரோப்பாவில் TVS Motor இன் விரிவாக்கத்திற்கு வலுவான அடித்தளமாக அமையும்.

Emil Frey ஐரோப்பாவில் உள்ள மிகப்பெரிய ஆட்டோமொபைல் இறக்குமதியாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களில் ஒன்றாகும், இது பிராந்தியம் முழுவதும் பல முன்னணி வாகன பிராண்டுகளுக்கு சேவை செய்கிறது. இந்த கூட்டாண்மையின் ஒரு பகுதியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் TVS தயாரிப்புகளை விநியோகம் செய்யும் பொறுப்பை Emil Frey குழுமம் எடுத்துக்கொள்வது, அவற்றின் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் சேவை நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துகிறது. ஐரோப்பாவில் கிடைக்கும் TVS தயாரிப்புகளில் TVS Jupiter 125, TVS NTORQ, TVS Raider, TVS iQube S, TVS X, TVS Ronin, TVS Apache RR 310 மற்றும் TVS Apache RTR 310 ஆகியவை அடங்கும்.

TVS Motor தயாரிப்புகள் ஏற்கனவே 80+ நாடுகளில் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவின் புவியியல் பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. முதல் அரையாண்டு (H1 FY 2023) அறிக்கையின் படி நிறுவனத்தின் வணிகத்தில் சுமார் 25% ஏற்றுமதிகள் உள்ளன – இது நிறுவனத்தின் உயர்தர, தொழில்நுட்ப ரீதியாக உயர்ந்த சலுகைகள் மற்றும் அதன் R&D திறன் ஆகியவற்றின் ஒப்புதலாகும்.

TVS Mortor Companyஇன் முகாமைத்துவப் பணிப்பாளர் Sudarshan Venu, ஐரோப்பாவில் நுழைவதாக அறிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “Emil Frey உடனான இந்த மூலோபாய கூட்டணி, நமது உலகளாவிய விரிவாக்க உத்தியில் ஒரு முக்கியமான படியாகும். ஐரோப்பா எங்களுக்கு ஒரு முக்கிய சந்தையாக இருக்கும், மேலும் இந்த கூட்டாண்மை மூலம், எங்கள் அதிநவீன தயாரிப்புகளை ஐரோப்பிய வாடிக்கையாளர்களுக்கு நெருக்கமாக கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். Emil Frey போன்ற ஒரு கூட்டாளரைக் கொண்டிருப்பதில், இரண்டு நூற்றாண்டு பழமையான, பரம்பரை நிறுவனங்கள் ஒன்றிணைந்துள்ளன, இவை இரண்டும் பொறுப்பான மற்றும் நிலையான இயக்கம் மற்றும் வாடிக்கையாளர் சேவையின் பகிரப்பட்ட மதிப்புகளால் இயக்கப்படுகின்றன. ஒன்றாக, ஐரோப்பாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கும் இரு சக்கர வாகன ஆர்வலர்களுக்கும் சேவை செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் மற்றும் வெற்றிகரமான கூட்டாண்மையை எதிர்நோக்குகிறோம்.” என தெரிவித்தார்.

Emil Frey குழுமத்தின் பணிப்பாளர் Lorenz Frey-Hilti கூறுகையில், “மொபிலிட்டி துறையில் எங்களது இரண்டு மதிப்புமிக்க பாரம்பரிய நிறுவனங்களுக்கிடையில் வலுவான மற்றும் விசுவாசமான கூட்டாண்மையை உருவாக்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். ஒன்றாக, நாம் பாரம்பரியத்தை புதுமையுடன் இணைக்கிறோம். TVS Motor Company ஐரோப்பிய சந்தையில் எங்கள் நிபுணத்துவத்தை நம்பி, எங்கள் விநியோக வலையமைப்பைப் பயன்படுத்தி தங்களது சிறந்த தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு வருவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். எங்கள் இரு நிறுவனங்களும் ஒன்றையொன்று முழுமையாக பூர்த்தி செய்கின்றன, மேலும் இந்த கூட்டாண்மை வளர்ச்சியடைவதை நான் எதிர்நோக்குகிறேன்.” என தெரிவித்தார்.

 

இலங்கையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பாடங்களை...
ஆடைத் துறை சார்ந்த பெண்களின் நல்வாழ்வு...
HNB Finance இன் “வளர்ச்சிக்கான முன்னேற்றத்தின்”...
இலங்கையில் நீரிழிவை கட்டுப்படுத்துவதில் பங்களிப்பு வழங்குவதற்காக...
இலங்கையின் சுகாதார சேவையில் பத்தாண்டுகால அர்ப்பணிப்புடன்...
கொழும்பில் தரையிறங்கும் JETSTAR ASIA
10 ஆண்டுகால கூட்டாண்மையின் அடையாளத்தைக் குறிக்கும்...
தேசிய மக்கள் சக்தியின் மகத்தான வெற்றி...
கொழும்பில் தரையிறங்கும் JETSTAR ASIA
10 ஆண்டுகால கூட்டாண்மையின் அடையாளத்தைக் குறிக்கும்...
தேசிய மக்கள் சக்தியின் மகத்தான வெற்றி...
9 மாதங்களில் 22 பில்லியன் GWPஐ...