கொழும்பில் உள்ள வணிக வளாக சந்தையின்(Shopping mall) எதிர்காலம், முன்னேறி வரும் ராஜகிரிய போன்ற புற நகரப்புறங்களில் புதிய வாய்ப்புகளைத் தேடுவதில் அமைந்துள்ளது

Share

Share

Share

Share

கடந்த சில தசாப்தங்களில், கொழும்பின் நகர்புறத்தில் வணிக வளாக சந்தைகளின் எழுச்சியால் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இக்கட்டிடங்கள் நகரத்தின் வளர்ச்சியையும் வாழ்வுமுறையின் மாற்றத்தையும் காட்டுகின்றன. 1980களில் Liberty Plazaவை தொடக்கமாகக் கொண்டு, One Galle Face, Colombo City Centre மற்றும் Cinnamon Life போன்ற பெரிய வணிக வளாக சந்தைகள் வரை, இவை வாடிக்கையாளர்களின் வாங்கும் முறை, சமூக உறவுகள் மற்றும் பொதுநிலைகளை பயன்படுத்தும் விதத்தை மாற்றியமைத்துள்ளன.

Figure 1: Retail mall supply over the years

Source: RIUNIT (2025)

இவ்வாறான மாற்றங்களானது பொருளாதாரத்திள் பெறும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இவ்வாறான வணிக வளாக சந்தைகளானது நுகர்வோர் மத்தியில் உலக மற்றும் உள்ளூர் தயாரிப்புகளை கவரும் இடமாக இருந்தன, அருகிலுள்ள நிலங்களின் மதிப்பை உயர்த்தின, மற்றும் பயன்படுத்தப்படாத நகர்ப்பகுதிகளை வணிக வலையங்களாக மாற்றியமைத்தன. இது பல வேலை வாய்ப்புக்களை உருவாக்கி, சுற்றுலா வரவையும் பொழுதுபோக்கு செலவையும் அதிகரித்துள்ளது, மேலும் கொழும்பின் ஒட்டுமொத்த பாரம்பரியத்தை ஒரு நவீன தென்கிழக்கு ஆசிய தலைநகராக மேம்படுத்தியுள்ளது.

வணிக வளாக சந்தைகளின் (Shopping malls) சீரற்ற விநியோகம்
கொழும்பின் மையப் பகுதியில் நன்கு வளர்ந்த வணிக வளாக சந்தை மையங்கள் இருந்தாலும், புறநகர்ப் பகுதிகளில் வேறு கதையைச் சொல்கின்றன. வளர்ந்து வரும் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் சொத்து மதிப்புகள் உயர்ந்து வந்தாலும், கொழும்பு 7, 8, குறிப்பாக ராஜகிரிய போன்ற இடங்களில் இன்னும் சரியான வணிக வளாக சந்தை மையங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான வணிக வளாக சந்தைகள் கொழும்பு 2 முதல் 4 வரையான இடங்களில் காணப்படுகின்றன, அவை ஒன்றாக 1.6 மில்லியன் சதுர அடிக்கு மேல் தற்போதைய மற்றும் திட்டமிடப்பட்ட வணிக வளாக சந்தைகளின் இடத்தைக் கொண்டுள்ளன. இதற்கு நேர்மாறாக, கொழும்பு 5 இல் ஒரே ஒரு பெரிய வணிக வளாக சந்தை மட்டுமே காணப்படுகிறது, மேலும் கொழும்பு 8 மற்றும் 10 இல் எதுவும் இல்லை. கொழும்பின் முக்கிய இடமாக திகளப்படும் கொழும்பு 7ல் கூட அதன் முதல் பெரிய வணிக வளாக நிலையத்துக்காக இன்னும் காத்திருக்கிறது (2027 இல் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் ODEL வணிக வளாக சந்தை மைய்யம்).

Figure 2: Existing and upcoming retail malls in Colombo and suburbs

Source: RIUNIT
தேவை அதிகமாக இருக்கும் ஆனால் விநியோகம் குறைவாக இருக்கும் முதலீட்டுச் சந்தைக்குள் நுழைதல்
ராஜகிரிய நகரமானது ஒரு பெரிய மேம்பாட்டைக் காண உள்ள இடமாக தோற்றப்படுகிறது. நகர்ப்புற வேலைகளை திட்டமிடுபவர்கள் இதை ஒரு புத்திசாலித்தனமான மற்றும் சரியான நேரத்தில் செய்யப்பட்ட நடவடிக்கை என்று அழைக்கின்றனர் – ராஜகிரியவின் முதல் சொகுசு வணிக வளாக மைய்யம் இப்போது கட்டுமானத்தில் (under construction) உள்ளது. இத் திட்டம் BOI-யால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான பெய்லி இன்வெஸ்ட்மென்ட்ஸால் (Baili Investments) வழிநடத்தப்படுகிறது, இந்நிறுவனமானது ஆசியாவின் பல்வேறு தொழில்களில் அனுபவமுள்ள ஹாங்காங் முதலீட்டாளரால் ஆதரிக்கப்படுகிறது. இந்த வணிக வளாக மைய்யம் வடிவமைப்பு மற்றும் செயல்பாடுகள் ஹாங்காங், சீனா மற்றும் சிங்கப்பூரிலிருந்து வெற்றிகரமான மாடல்களால் ஈர்க்கப்பட்டு, இலங்கையில் ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்குக்கு ஒரு புதிய தரத்தை அமைக்கும் நோக்கில் இருக்கும்.

பெய்லி இன்வெஸ்ட்மென்ட் (Baili Investments) நிறுவனத்தால் வடிவைக்கப்பட்டு வரும் இந்த வணிக வளாக மைய்யமானது சுமார் 225,000 சதுர அடி பரப்பளவில் மூன்று மாடிக்கட்டிடமாக அமைக்க தீர்மானித்துள்ளது. இதில் ஒரு சினிமா தியேட்டர், பிரபலமான சர்வதேச மற்றும் உள்ளூர் தயாரிப்பு நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு விளையாட்டுப் பகுதிகள் ஆகியவை அடங்கும். ஆனால் இது வெறும் ஷாப்பிங் செய்வதற்கான இடத்தை விட அதிகம் மற்றும் இது ஒரு வசதியான இடத்தில் ஷாப்பிங், உணவு மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை இணைக்கும் ஒரு வாழ்க்கை முறை இடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நகரத்தின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ற ஸ்மார்ட் வடிவமைப்புடன் கூடிய நவீன வணிக வளாக சந்தை அனுபவத்தை உருவாக்குவதே பெய்லி இன்வெஸ்ட்மென்ட் (Baili Investments) நிறுவனத்தின் குறிக்கோளாகும். கட்டப்பட்டு வரும் இந்த வணிக வளாக சந்தை மைய்யமானது பெய்லி இன்வெஸ்ட்மென்ட் (Baili Investments) நிறுவனத்தின் வரவிருக்கும் 1,062 அடுக்குமாடி குடியிருப்பு மேம்பாட்டிற்கு துணைபுரியும் மற்றும் இது அப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை முறை சலுகையை மேம்படுத்தும் என்பதை குறிப்பிடுகிறது.

பெய்லி இன்வெஸ்ட்மென்ட் (Baili Investments) நிறுவனத்தினால் அமைக்கப்பட்டு வரும் இத்திட்டம் இன்னும் கட்டப்பட்டு வந்தாலும், திட்டத்தின் தாக்கம் ஏற்கனவே தோன்ற ஆரம்பித்து உள்ளது. ராஜகிரியவிற்கு இதுபோன்ற ஒரு வளர்ச்சி நீண்ட காலமாக தேவைப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தளத்திலிருந்து 2.5 கி.மீ.க்குள் சுமார் 1,745 சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ளதால், பெய்லி இன்வெஸ்ட்மென்ட் (Baili Investments) நிறுவனத்தால் கட்டப்பட்டு வரும் இந்த வணிக வளாக மைய்யத்தின் அருகிலுள்ள குடியிருப்புக்களில் வசித்து வருபவர்களுக்கு ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்குக்கு செயல்களில் ஈடுபடுவதற்கு எளிதான நுழைவாயிலை வழங்கும் மற்றும் மத்திய கொழும்பிற்குள் போககூடிய தேவையை குறைக்கும் என்பதை குறிப்பிடுகிறது. இவ்வாறான திட்டங்களினால் அடுக்குமாடி குடியிருப்புகளின் மதிப்பு மற்றும் கவர்ச்சியை அதிகரிக்கும்.

இந்த மேம்பாட்டு திட்டத்தினால் சொத்துக்களின் மதிப்புகளை பாரிய அளவில் உயர்த்தும் மற்றும் உள்ளூரில் வசிப்பவர்களின் வசதியை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் நாவல, எத்துல் கோட்டே மற்றும் பொரெல்லா போன்ற அருகிலுள்ள பகுதிகளிலிருந்து பார்வையாளர்களை ஈர்க்கும் என்பதை குறிப்பிடுகிறது.
இதுவரை, பெரும்பாலான வணிகத் திட்டங்கள் மத்திய கொழும்பு பகுதிகளில் கவனம் செலுத்தி வருகின்றன. ஆனால் பெய்லி இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தினால் கட்டப்பட்டு வரும் இந்த வணிக வளாக மைய்யம் ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு உயர்தர வணிக வளாக சந்தை மற்றும் வாழ்க்கை முறை விருப்பங்களின் மாற்றங்களை கொண்டுவருதல், நகர மையத்திற்கு வெளியே வளர்ந்து வரும் மக்கள்தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்தல் ஆகியவற்றை குறிப்பிடுகின்றன. ராஜகிரியவைப் பொறுத்தவரை, இது ஒரு மால் திறப்பு மட்டுமல்ல – இது ஒரு பாரிய மாற்றத்தின் தொடக்கமாகும்.

இலங்கையின் பாரம்பரிய உணவுகளின் சுவையை TikTok...
Kaushala Amarasekara Honoured Among Top...
දකුණු ආසියානු සංචාරක සහ සුඛෝපභෝගී...
City of Dreams Sri Lanka...
MAS Holdings, AICPA සහ CIMA...
City of Dreams Sri Lanka...
டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்கின்ற...
ඩිජිටල් යුගයේ මවක් ලෙස ආදරය,...
City of Dreams Sri Lanka...
டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்கின்ற...
ඩිජිටල් යුගයේ මවක් ලෙස ආදරය,...
ITC Ratnadipa to Launch ‘The...