சிங்கப்பூரின் மவுண்ட் எலிசபெத்துடன் இணைந்து புரோசுட்டேட் புற்றுநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் Medihelp

Share

Share

Share

Share

இலங்கையின் மிக வேகமாக வளர்ந்து வரும் அடிப்படை சுகாதார சேவை வழங்குனரான Medihelp Hospitals, அண்மையில் புரோசுட்டேட் புற்றுநோய் தடுப்பு மற்றும் கண்டறிதல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது. சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மற்றும் இலங்கையில் உள்ள IHH நோயாளி பராமரிப்பு நிலையத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழிப்புணர்வு கருத்தரங்கு, கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் புதிதாக நிறுவப்பட்ட Medihelp Wellness Centre இல் நடைபெற்றது.

Medihelp வைத்தியசாலையின் தலைவர் லெஸ்லி விஜேசிறிவர்தன, ஆய்வக பணிப்பாளர் சுனந்த விஜேசிறிவர்தன, வைத்திய பணிப்பாளர் டொக்டர் சரித விஜேசிறிவர்தன, நிறைவேற்று பணிப்பாளர் சந்திகா விஜேசிறிவர்தன, பிரதம செயற்பாட்டு அதிகாரி நிஷாந்த ஜயமான்ன உட்பட பல முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையின் பிராந்திய முகாமையாளர் Aliff Bin Arshad மற்றும் IHH நோயாளி பராமரிப்பு நிலையத்தின் இலங்கை அலுவலகத்தின் பணிப்பாளர் Shuvo Hridayesh ஆகியோரும் இதில் இணைந்தனர்.

புரோசுட்டேட் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்ட இந்த கருத்தரங்கு, சிறுநீரக அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீர்ப்பை கோளாறுகளில் நிபுணரான டொக்டர் Chin Chong Min தலைமை தாங்கினார். சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் Novena மருத்துவமனையில் பணிபுரியும் டொக்டர் Chin Chong Min, Laparoscopic, Robotic அறுவை சிகிச்சை போன்ற நவீன முறைகளைப் பயன்படுத்தி புரோசுட்டேட் புற்றுநோய் உள்ளிட்ட சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கு சிகிச்சை அளித்த அனுபவத்தை இந்நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொண்டார். இந்த மாநாட்டில் இந்த புற்று நோய்களை தடுப்பதிலும் கண்டறிவதிலும் ஆர்வமுள்ள பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஆண்கள் மத்தியில் காணப்படும் பொதுவான சுகாதாரப் பிரச்சினையான புரோசுட்டேட் புற்றுநோயைத் தடுப்பதற்கான சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய Medihelp மருத்துவமனைகளின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிஷாந்த ஜயமான்ன, புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான வசதிகளை வழங்குவதற்கு Medihelp மருத்துவமனை அர்ப்பணிப்புடன் இருப்பதாக தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “18 இடங்களில் நிறுவப்பட்டுள்ள எங்களது மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மத்திய நிலையங்கள் மூலம் தினமும் ஏராளமான புற்றுநோய் பரிசோதனைகளை மேற்கொள்ள நாங்கள் பணியாற்றி வருகிறோம். இலங்கையிலுள்ள மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் நாம், Parkway Hospitals சிங்கப்பூர் நாட்டின் அலுவலகத்துடன் இணைந்து இந்த விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்த முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும், சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் Novena மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீர்ப்பை கோளாறுகள் தொடர்பான நிபுணரான டொக்டர் Chin Chong Min, இந்த பொன்னான சந்தர்ப்பத்தில் கலந்துகொள்வதை ஒரு பெரிய கவுரவமாகக் கருத விரும்புகிறோம்.” என்றும் கூறினார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த IHH நோயாளி பராமரிப்பு நிலையத்தின் இலங்கை அலுவலகத்தின் பணிப்பாளர் Shuvo Hridayesh, கருத்தரங்கை ஏற்பாடு செய்தமைக்கு நன்றி தெரிவித்ததுடன், புரோசுட்டேட் புற்றுநோயைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

 

இலங்கையின் பாரம்பரிய உணவுகளின் சுவையை TikTok...
Kaushala Amarasekara Honoured Among Top...
දකුණු ආසියානු සංචාරක සහ සුඛෝපභෝගී...
City of Dreams Sri Lanka...
MAS Holdings, AICPA සහ CIMA...
City of Dreams Sri Lanka...
டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்கின்ற...
ඩිජිටල් යුගයේ මවක් ලෙස ආදරය,...
City of Dreams Sri Lanka...
டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்கின்ற...
ඩිජිටල් යුගයේ මවක් ලෙස ආදරය,...
ITC Ratnadipa to Launch ‘The...