நிலையான தொழில்துறை மாற்றத்தை நோக்கி இரண்டாம் கட்டத்தை நிறைவு செய்துள்ளது MAS Project Photon

Share

Share

Share

Share

MAS Holdings நிறுவனம், கூரை மீது பொருத்தப்பட்ட Photovoltaic (PV) சூரிய சக்தி திட்டமான Project Photon இன் இரண்டாவது கட்டத்தை நிறைவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம், MAS Holdings நிறுவனத்தை இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் முன்னோடியாக மாற்றியுள்ளது, இது இலங்கையின் மிகப்பெரிய கூரை மீது பொருத்தப்பட்ட சூரிய சக்தி உற்பத்தியாளராகவும், வழங்குநராகவும் ஆக்கியுள்ளது.

Project Photon க்கு முன்னர், MAS Holdings நிறுவனம் பல்வேறு இடங்களில் சிதறிக் கிடந்த 1.7 MW சூரிய சக்தி திறனை மட்டுமே கொண்டிருந்தது. புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதற்கான குழுமத்தின் உறுதிப்பாட்டின் கீழ், Project Photon தொடங்கப்பட்டது, 18 இடங்களில் 16 MW சூரிய சக்தி சேர்க்கப்பட்டது. இப்போது, இரண்டாம் கட்டத்தின் நிறைவுடன், கூடுதலாக 6 MW, MAS இன் மொத்த சூரிய உற்பத்தி திறனை 23.7 MW ஆக அதிகரித்துள்ளது. சூரிய சக்தி உற்பத்திக்கான முந்தைய தேசிய சாதனையை முறியடித்து, MAS இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிலப்பரப்பை மாற்றி அமைக்கும் நிறுவனமாக தனது நிலையை உறுதிப்படுத்துகிறது.

இந்த மாபெரும் திட்டத்தின் பிரமாண்டத்தை சரியாக புரிந்து கொள்ள, MAS வசதிகளில் சுமார் 67,000 Solar Panelகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த சூரிய சக்தி திறன் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 18,000 தொன் கார்பன் டை ஆக்சைடை (CO2) சேமிக்கிறது மற்றும் 10 கிரிக்கெட் மைதானங்களுக்கு சமமான பரப்பளவையும் அல்லது சுமார் 34,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் திறனையும் கொண்டுள்ளது.

மேலும், Project Photon சூரிய உற்பத்தி கூரை வாடகைகளுக்கான தேசிய அளவுகோலையும் நிறுவியுள்ளது, இது தற்போது நாட்டில் உள்ள பெரும்பாலான கூரையில் பொருத்தும் சூரிய சக்தி முதலீட்டாளர்களால் மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

12.7 மில்லியன் அமெரிக்க டொலர் ஆரம்ப முதலீட்டில், கட்டம் I இன் செயல்பாடானது, தேசிய அளவில் முன்னோடியில்லாத வகையில், முழு நாட்டிலும் பல தளத் திட்டத்தை உருவாக்கியது. MAS போன்ற ஒரு ஆடை நிறுவனத்திற்கு இது அங்கீகரிக்கப்படாத பிரதேசமாகும். கட்டம் II உடன், MAS மொத்த முதலீடு 16 மில்லியன் அமெரிக்க டொலர்கள். இன்று, Project Photon பெருமையுடன் அதன் சொந்த அனுபவம் வாய்ந்த சோலார் பொறியியளாளர் குழுக்களைக் கொண்டுள்ளது, அவை உலகில் எங்கும் எந்த அளவிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களை எடுக்க முடியும்.

கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான MAS Holdings நிறுவனத்தின் அர்ப்பணிப்பு, அதன் பரந்த நிலைத்தன்மை நடவடிக்கை, MAS Change திட்டத்தின் ஒரு பகுதியாகும். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி மற்றும் சேமிப்பு தீர்வுகளில் மேலும் முதலீடு செய்யும் உறுதிப்பாட்டைக் குறிக்கும் இது, நிலையான உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக அவற்றின் நிலையை உறுதிப்படுத்துகிறது.

Photon Phase IIக்கான சமீபத்திய Solar Installation, இலங்கையின் முதலாவது தனியார் ஏற்றுமதி செயலாக்க மண்டலமான Thulhiriyaவில் உள்ள 165 ஏக்கர் MAS Fabric Park (MFP) இல் நிறுவப்பட்டது. 7MW ஆக விரிவடைந்து, இது ஒரே CEB கணக்கின் கீழ் இலங்கையின் மிகப்பெரிய கூரை மீது பொருத்தப்பட்டதாகும். இந்த திட்டம் Parkஇன் மின் தேவையை சுமார் 20% குறைக்க உதவுகிறது. 12,000 பேருக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கியுள்ளது இந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்துறை Park, வளாகத்தில் உள்ள 10 ஏக்கர் Analog Forest மற்றும் கழிவு மீள்சுழற்சி ஆலைகள் உள்ளிட்ட அதன் சுற்றுச்சூழல் நடைமுறைகளுக்கு பெயர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Project Photon இலங்கைக்கு ஒரு முக்கியமான கட்டத்தில் செயன்முறை படுத்தப்பட்டுள்ளது, இது தற்போது எரிபொருட்களை அதிகம் சார்ந்துள்ளதால் பொருளாதார மற்றும் எரிசக்தி நெருக்கடியை அனுபவித்து வருகிறது. Project Photon போன்ற முதலீடுகளுடன், தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை உற்பத்தியாளரான MAS, ஆடை மற்றும் ஜவுளித் துறை, நாடு மற்றும் உலகை நேர்மறையாக பாதிக்கும் வகையில் தனது அறிவியல் அடிப்படையிலான இலக்குகள் (SBTi) முயற்சிகளை அடையும் இலக்கில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

MAS தொடர்பில்

30 ஆண்டுகளுக்கும் மேலான செயல்பாடுகளில், MAS அதன் நெறிமுறை மற்றும் நிலையான பணிச்சூழலுக்காகவும், சமூக மேம்பாடு மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் நிறுவனத்தின் அயராத முயற்சிகளுக்காகவும் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. தயாரிப்பு சிறப்பும் கைவினைத்திறனும் உலக வரைபடத்தில் MAS ஐ ஒரு தொழிற்துறை தலைவராக நிலைநிறுத்தியுள்ளது, இது புத்தாக்கமான உற்பத்தி மற்றும் வடிவமைப்பில் தோல்வியற்ற விநியோகத்தை வெளிப்படுத்துகிறது. இன்று, நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான நிறுவனத்தின் முயற்சிகள் மாற்றத்திற்கான MAS திட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன, இது தயாரிப்புகள், உயிர்கள் மற்றும் கிரகம் ஆகிய மூன்று பகுதிகளின் கீழ் நிலையான மாற்றத்தை உருவாக்குவதற்கான அர்ப்பணிப்பாகும்.

 

Jungle Kitchen, with roots in...
TikTok Strengthens Measures to Combat...
ලංකා වැවිලිකරුවන්ගේ සංගමයේ 170 වැනි...
170ஆவது ஆண்டு நிறைவு வரலாற்றை தனது...
வணிக விசா பிரச்சினை குறித்து அவசர...
වින්දනීය අත්දැකීමක් එක් කරමින් Coke...
ව්‍යාපාරික වීසා ගැටළුව සම්බන්ධයෙන් කඩිනම්...
නවතම රූපවාහිනී අත්දැකීමක් ඇස් අභියසට...
වින්දනීය අත්දැකීමක් එක් කරමින් Coke...
ව්‍යාපාරික වීසා ගැටළුව සම්බන්ධයෙන් කඩිනම්...
නවතම රූපවාහිනී අත්දැකීමක් ඇස් අභියසට...
Planters’ Association of Ceylon Celebrates...