பசுமையான எதிர்காலத்திற்காக அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து முன்னோக்கிச் செல்லும் Coca-Cola மற்றும் Elephant House

Share

Share

Share

Share

பேண்தகைமையை நோக்கிய பயணத்தில் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கும் வகையில், மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் மீள்சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் சேகரிப்பை மேம்படுத்துவதற்காக Coca-Cola Beverages Sri Lanka (CCCBSL) மற்றும் Ceylon Cold Stores Elephant House (EH) ஆகியவை கைகோர்த்துள்ளன. உலக மீள்சுழற்சி தினம் மற்றும் பூஜ்ஜிய கழிவுகள் சர்வதேச தினம் (International Day of Zero Waste) ஆகியவற்றுக்கு சமாந்திரமாக இந்த முயற்சி ஆரம்பிக்கப்பட்டதுடன், CCBSL மற்றும் EH ஆகியவை நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு மற்றும் மீள்சுழற்சி மூலம் பசுமையான எதிர்காலத்தை உறுதி செய்வதில் முன்னணியில் உள்ளன.
CCBSL “EH” ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சமூக தொழில் முனைவோர் திட்டமான “Plasticcycle” மற்றும் Eco ஆகியவை வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் (RDA) இணைந்து மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் 16 மீள்சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் சேகரிப்பு மையங்களை நிறுவுகியுள்ளன. மீரிகம அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபை அலுவலகத்தில் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அதிவேக வீதி செயற்பாடுகள் பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் மேலதிக பணிப்பாளர் அனுர கெஹெலல்ல கலந்து கொண்டார்.

RDA இன் ஒப்புதல் மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையில், மீரிகம, நாகலகமுவ, தம்பொக்க, குருநாகல் மற்றும் யக்கபிட்டிய ஆகிய இடங்களில் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் வெளியேறும் இடங்களில் இந்த மீள்சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. அவர்களின் மீள்சுழற்சி பங்குதாரர்களான Eco Spindles, கழிவுகளை சேகரித்து, ஜவுளி, துடைப்பங்கள் மற்றும் தூரிகைகள் மற்றும் தையல் நூல்கள் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் நார்களாக மாற்றும், அவை உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் விற்கப்படுகின்றன. நாட்டில் மீள்சுழற்சி செய்யக்கூடிய கழிவுகளை நிர்வகிப்பதற்கு இது ஒரு நேர்மறையான அணுகுமுறையாகும் என்பதுடன் ஒவ்வொரு பானம் தயாரிக்கும் நிறுவனமும் அந்த செயல்பாட்டில் செல்வாக்கு மிக்க பங்கு வகிக்கிறது. EH மற்றும் Plasticcycle இதற்கு முன்னர் RDA உடன் இணைந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் PET சேகரிப்பு நிலையங்களை அமைப்பதற்கு வேலை செய்திருந்ததுடன் CCBSL ஆனது அதே வேலைத்திட்டத்தை கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையிலும் நடைமுறைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Coca-Cola Beverages Sri Lanka இன் பொது விவகாரங்கள், தொடர்பாடல்கள் மற்றும் பேண்தகைமை பணிப்பாளர் திருமதி தாமரி சேனாநாயக்க, “உள்ளூர் மற்றும் உலகளாவிய ரீதியில் கழிவுகளை சேகரித்தல் மற்றும் மீள்சுழற்சி செய்வது பற்றி அதிகம் பேசப்படுகிறது. ஆனால், அதைச் செயல்படுத்துவதற்கான தகுந்த தொழில்நுட்ப ஆதரவும் கூட்டு நடவடிக்கையும் பல தொழில்களில் குறைவாகவே உள்ளது. CCBSL மற்றும் EH எங்கள் வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு ஒரு பொதுவான காரணத்திற்காக ஒன்றிணைந்ததில் நான் பெருமைப்படுகிறேன். இத்திட்டத்தின் மூலம் நாடு தனது சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார வளத்தை மீட்டெடுக்க முடியும் என்று நான் நம்புகிறேன்” என தெரிவித்தார்.
CCBSL “Give Back Life” திட்டத்தின் கீழ், கழிவுகள் அற்ற சூழலை வலியுறுத்தும், இலங்கை முழுவதும் 500க்கும் மேற்பட்ட PET பிளாஸ்டிக் சேகரிப்பு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன, அவற்றில் 21 மையங்கள் 5000 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் திறன் கொண்ட பெரிய அளவிலான மையங்களாகும். இலங்கையின் Coca-Cola நிறுவனம் நாட்டிலுள்ள 8 கடற்கரைகள் மற்றும் நீர்நிலைகளை சுத்தப்படுத்தியுள்ளது மற்றும் நாட்டின் பல மாவட்டங்களில் கழிவுகளை முன் பதப்படுத்தும் மையங்களை (MRF) நிறுவியுள்ளது. மீள்சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக்குகளை சேகரிப்பதற்கான CCBSL இன் முயற்சிகள் சிறந்த கார்ப்பரேட் குடிமக்கள் நிலைத்தன்மை விருதுகள் 2022 இல் அங்கீகரிக்கப்பட்டன, மேலும் அவற்றின் கழிவு முன் செயலாக்க வசதி (MRF) சிறந்த பேண்தகைமை திட்ட விருது பிரிவின் கீழ் அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பாரம்பரிய உணவுகளின் சுவையை TikTok...
Kaushala Amarasekara Honoured Among Top...
දකුණු ආසියානු සංචාරක සහ සුඛෝපභෝගී...
City of Dreams Sri Lanka...
MAS Holdings, AICPA සහ CIMA...
City of Dreams Sri Lanka...
டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்கின்ற...
ඩිජිටල් යුගයේ මවක් ලෙස ආදරය,...
City of Dreams Sri Lanka...
டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்கின்ற...
ඩිජිටල් යුගයේ මවක් ලෙස ආදරය,...
ITC Ratnadipa to Launch ‘The...