பல்வேறு பொய்யான பிரசாரங்களுக்கு மத்தியில் நவலோக மருத்துவமனை தனது நிதி ஸ்திரத்தன்மையை அதன் பங்குதாரர்கள் உட்பட இலங்கை சமூகத்திற்கு தெளிவுபடுத்துகிறது

Share

Share

Share

Share

இலங்கையின் முன்னோடி மற்றும் மிகப்பெரிய தனியார் மருத்துவமனை சங்கிலியான New Nawaloka Medical Center (Pvt) Ltd ஐ ஹட்டன் நேஷனல் வங்கியால் பரேட் சட்டத்தின் கீழ் கையகப்படுத்துவதைத் தடைசெய்யும் இடைக்காலத் தடை உத்தரவை பெப்ரவரி 28, 2024 அன்று, மேன்முறையீட்டு நீதிமன்றம், வழங்கியது.

நவலோக்க மருத்துவமனை குழுமத்தின் நிதி ஸ்திரத்தன்மை தொடர்பில் பல்வேறு தரப்பினரால் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட பொய்ப் பிரசாரங்கள் தொடர்பில் மருத்துவமனை குழுமத்தின் உயர்மட்ட நிர்வாகத்தின் கவனம் திரும்பியுள்ளது. மருத்துவமனை குழுமத்தின் நிதி ஸ்திரத்தன்மை குறித்த ஆதாரமற்ற கூற்றுக்களை தாம் முற்றாக நிராகரிப்பதாகவும், இலங்கையின் முன்னோடி மற்றும் முன்னணி தனியார் மருத்துவமனை குழுவாக, இலங்கை மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களின் நல்வாழ்வுக்கான அதன் உன்னத தேசிய பணியை தொடர்வதே அதன் முக்கிய நோக்கமாகும் என்றும் நவலோக்க மருத்துவமனை குழு தெரிவித்துள்ளது.

கடந்த 39 வருடங்களில் நவலோக்க மருத்துவமனை குழுமம் இலங்கை வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் நம்பகமான தனியார் மருத்துவமனை வர்த்தக நாமமாக மாற முடிந்தது. நவலோக்க மருத்துவமனை குழுமத்தால் சர்வதேச தரத்திலான சிகிச்சை வசதிகள் மற்றும் மிகவும் சிக்கலான சிகிச்சை முறைகளை இலங்கைக்கு அறிமுகப்படுத்த முடிந்தது.

நவலோக்க மருத்துவமனை குழுமத்திற்கு எதிராக சில தரப்பினர் ஆதாரமற்ற பொய்யான கூற்றுக்களை தொடர்ந்து பரப்பி வருகின்ற போதிலும், நவலோக்க மருத்துவமனைகள் குழுமம் அதன் நிதி ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஏற்கனவே முன்னெடுத்துள்ளதாக அதன் பங்குதாரர்களுக்கு அறிவித்துள்ளதாக நவலோக்க மருத்துவமனை குழு மேலும் தெரிவித்துள்ளது. எனவே, நவலோக்க மருத்துவமனை குழுமம் தனது நிதிக் கடப்பாடுகளை உரிய முறையில் நிறைவேற்றி மருத்துவமனை குழுவின் செயற்பாடுகளை எவ்வித இடையூறும் இன்றி நடத்தும் திறனைக் கொண்டுள்ளது என மேலும் வலியுறுத்துகிறது.

எனவே, பங்குதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உட்பட இலங்கை சமூகம் நவலோக்க மருத்துவமனை குழுமத்தின் மீது தற்போதுள்ள நம்பிக்கையைப் பேணுவதுடன் நவலோக்க மருத்துவமனையுடன் தொடர்ந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

உலகளாவிய விரிவாக்கத்தைத் தொடரும் HBO MAX,...
HBO Max continues global expansion,...
Rockland Group Commemorates 101 Years...
City of Dreams Sri Lanka-வின்”Signature...
அரசின் ஆதரவுடன் STEM Feed திட்டத்தை...
ජනකාන්ත බොලිවුඩ් රංගන ශිල්පී අර්ජුන්...
ශ්‍රී ලංකාවේ ආහාර පිළිබඳ රස...
AHRP, Sentiva, and Altrium sign...
ජනකාන්ත බොලිවුඩ් රංගන ශිල්පී අර්ජුන්...
ශ්‍රී ලංකාවේ ආහාර පිළිබඳ රස...
AHRP, Sentiva, and Altrium sign...
Evolution Auto மற்றும் Ather Energy...