பாடசாலை மாணவர்களுக்காக ‘Sisu Divi Pahana’ திட்டத்துடன் ஐம்பதாவது ஆண்டைக் கொண்டாடும் Haycarb

Share

Share

Share

Share

Hayleys குடும்பத்தின் துணை நிறுவனமான Haycarb PLC, அதன் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மாதம்பே, படல்கம, வேவல்துவ, களுத்துறை, மஹியங்கனை, பதவிய மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் உள்ள 13 பாடசாலைகளில் 700 மாணவர்களுக்கு போஷாக்கான மதிய உணவை வழங்கும் “சிசு திவி பஹன” திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
உயர் பெறுமதியான செயற்படுத்தப்பட்ட கார்பன் தீர்வுகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான Haycarb, இலங்கை முழுவதும் உள்ள சமூகங்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதன் மூலம் தனது சமூகப் பொறுப்பை நிறைவேற்றுகிறது. இந்த ஆண்டும், Haycarb தனது வணிக நடவடிக்கைகளில் ஒரு மைல்கல்லைக் குறிக்கும் வகையில், தொடர்ச்சியான சமூக சேவை முயற்சிகளுடன் செயல்பட்டு வருகிறது. இதன் முதல் கட்டமாக, பின்தங்கியுள்ள பதிகுகளிலுள்ள பாடசாலைகளுக்கு மதிய உணவு திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“நமது நாட்டின் எதிர்காலம் முழுக்க முழுக்க நம் குழந்தைகளின் வெற்றியைப் பொறுத்தது. ஆனால் வரலாறு காணாத பொருளாதார மந்தநிலைக்கு முகங்கொடுத்துள்ள இலங்கையின் கணிசமான குடும்பங்கள் மூன்று வேளை பிரதான உணவைக் கூட தமது பிள்ளைகளுக்கு வழங்க முடியாத நிலையில் உள்ளனர். இதன் காரணமாக, பலர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்கின்றனர். இந்த நிலை குழந்தைகளின் பாடசாலைப் படிப்பிற்கு பாரிய பாதிப்பு ஏற்படுத்துவதை நாம் அவதானித்தோம்.”
“இந்த கடினமான காலங்களில் எங்கள் சமூகத்திற்கு ஆதரவளிப்பது ஒரு கூட்டுப் பொறுப்பு என்று நாங்கள் நம்புகிறோம். ‘சிசு திவி பஹன’ நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தி, எங்கள் எதிர்கால சந்ததியினரை வளர்ப்பதன் மூலம் எங்கள் நிறுவனத்தின் ஐம்பது ஆண்டுகால செயல்பாட்டு வெற்றியின் பெருமையை முன்னெடுக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.’’ என Haycarb PLCஇன் முகாமைத்துவ பணிப்பாளர் ராஜித காரியவசன் தெரிவித்தார்.
Haycarb Sisu Divi pahana முதலில் Haycarb PLC ஆல் நேரடியாக திரட்டப்பட்டது, அதன் பின்னர் ஊழியர்கள் தங்கள் தன்னார்வ பங்களிப்புடன் அதில் இணைந்தனர். இந்தப் பணத்தை பயன்படுத்தி பாடசாலைகளைச் சுற்றியுள்ளவர்கள் சேர்ந்து அனைத்து உணவுகளையும் தயாரித்து ஒவ்வொரு பாடசாலைக் குழந்தைக்கும் சமமான, ஆரோக்கியமான தினசரி உணவை வழங்குகிறார்கள்.
“எங்கள் மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்கான Haycarbஇன் தீர்மானத்திற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். கடந்த பத்தாண்டுகளாக இங்கு கற்பித்த நான், குறைந்தபட்ச வசதிகளுக்கே சிரமப்படும் குழந்தைகளின் நிலைமையைப் பார்த்திருக்கின்றேன். குறிப்பாக சமீப காலங்களில் நிலவிய கடும் பொருளாதார பின்னடைவால் பலர் காலையில் தேநீர் மட்டும் அருந்திவிட்டு பாடசாலைக்கு வருகிறார்கள். இதனால் இக்குழந்தைகளுக்கு முறையான கல்வியை வழங்குவது எமக்கு சவாலாக உள்ளது. இத்தகைய சூழலில் வாழும் அப்பாவி குழந்தைகளுக்கு உணவை வழங்குவதற்காக Haycarb நிறுவனத்திற்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என கோனவில நலவலன கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.எம். சுமித் ஜயரத்ன தெரிவித்தார்.
இந்த பாடசாலைகள் ஒவ்வொன்றும் உணவின் தரத்தை கண்காணிக்க அவற்றின் தேவை மற்றும் பணியாளர்களின் இருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டன. சுகாதார அமைச்சின் பரிந்துரையின்படி, சமநிலையான உணவின் அடிப்படையில் தினசரி ஊட்டச்சத்து தேவைகளுக்கு ஏற்ப தயாரிக்கப்படும் இந்த உணவின் தரத்திற்கு தினசரி உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.
இந்தத் திட்டம் 2030 ஆம் ஆண்டளவில் இந்த வெளியீட்டின் மூலம் பயனாளிகளின் எண்ணிக்கையை 50% ஆக அதிகரிப்பது உட்பட, சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வகிப்பு (ESG) தரநிலைகளில் முன்னேற்றத்தை அதிகரிப்பதற்கான Hayleys Lifecode இன் பரந்த இலக்குகள் மற்றும் சமூக அர்ப்பணிப்புகளுடன் மேலும் இணைந்துள்ளது.

GSCS International Ltd, with a...
Driving global change: GSCS International...
South Asia’s 1st AI-Based Hospital...
දකුණු ආසියාවේ පළමු කෘතිම බුද්ධිය...
TikTok’s commitment to mental health:...
Hobbies to hustles: how Sithu...
Sampath Bank Partners with Symphony...
MIHCM Asia showcases latest HR...
Hobbies to hustles: how Sithu...
Sampath Bank Partners with Symphony...
MIHCM Asia showcases latest HR...
TikTok Releases Q2 2024 Community...