பெருமையுடன் நிமிர்ந்து நிற்கும் தேசம், ஆடுகள வெற்றியாளர்களை கௌரவிக்கும் MAS

Share

Share

Share

Share

இலங்கையின் தேசிய மெய்வாண்மை அமைப்பான Sri Lanka Athletics (SLAA). அதற்கு ஆடை அணிகலன் வழங்கி அனுசரணை தரும் Bodyline நிறுவனம். சமீபத்தில் சீனாவின் ஹாங்ஸூவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்று தேசத்திற்கு பெருமை சேர்த்த மெய்வாண்மை வீர வீராங்கனைகளை Bodyline நிறுவனம் வரவேற்று கௌரவித்துள்ளது. இந்த வரவேற்பு நிகழ்ச்சி 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 16ஆம் திகதி Bodyline இன் ஹொரணை தொழிற்சாலையில் இடம்பெற்றது. இந்தப் போட்டியாளர்கள் பயிற்சியின் போதும், போட்டியின் போதும் அணிந்திருந்த ஆடைகளை Bodyline நிறுவனமே வழங்கியிருந்தது.

Bodyline ஆனது; SLAA உடன் கடந்த இரண்டு வருடங்களாக கைகோர்த்து இயங்குகின்றது. இந்நிறுவனம் இலங்கையின் திறமை வாய்ந்த மெய்வாண்மை போட்டியாளர்களுக்கு உலக தரத்திலான விளையாட்டு ஆடைகளை வழங்கி, தமது உயர்ந்தபட்ச ஆற்றல்களை அடையவும் தடகளத்தில் இலகுவாகவும், சௌகர்யமாகவும் திறமைகளை வெளிப்படுத்த உதவி செய்து, அவர்களுடன் சேர்ந்து உழைக்கிறது. இலங்கையின் மெய்வாண்மை போட்டியாளர்கள் 2022ஆம் ஆண்டு தொடக்கம் Bodyline உடன் இணைந்து செயற்பட்டு வருகிறார்கள். ‘Runner to runner’ என்று அறியப்படும் முன்முயற்சியின் கீழ், பரிசோதனை மற்றும் அத்தாட்சிப்படுத்தல் நடைமுறையில் பங்கேற்று வருகிறார்கள். இதன்மூலம், போட்டியாளர்களின் செயலாற்றல் தகவல்களும், பின்னூட்டங்களும் பெறப்பட்டு, ஓட்ட போட்டியாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய புதுமையான தீர்வுகளை உருவாக்க பயன்படுத்தப்படுகின்றன.

Bodyline நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் வணிக அபிவிருத்தி பணிப்பாளர் டில்ஷான் மொஹம்மட் கருத்து வெளியிடுகையில், ‘இலங்கை போட்டியாளர்கள் சீனாவில் வெளிப்படுத்திய திறமை, Bodyline ஐச் சேர்நத ஒட்டுமொத்த குழுவிற்கும் கிடைத்த பரிசாகும். எமது மெய்வாண்மை போட்டியாளர்கள் எமது ஆடைகளை அணிந்து, களத்தில் திறமைகளை வெளிப்படுத்தியதைக் காண்பதில், தொழிற்சாலைகளில் அயராது வேலை செய்பவர்கள் தொடக்கம் ஆடைகளை வடிவமைப்பதில் ஈடுபடுவோர் வரை எமது குழுவினருக்கு மிகவும் பெருமை. 2024ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் வரை இவர்களுக்கு உதவி செய்வோம். அதில் ஆனந்தம் அடைகிறோம்’, என்றார்.

Bodyline இன் தயாரிப்புகள் போட்டியாளரின் உடலுடன் பின்னிப் பிணையக்கூடிய வகையிலும், உடல் வடிவமைப்புடன் ஏற்றாற்போலவும் நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டவை. இந்தத் தயாரிப்புக்கள் எடை குறைந்தவையாகவும், ஈரலிப்பை உறிஞ்சுபவையாகவும் இருப்பதால், இவற்றை அணியும் போட்டியாளர்கள் சௌகரியத்துடனும், வியர்வை பற்றிய கவலை இல்லாமலும் சர்வதேச போட்டிகளில் தமது திறமை வெளிப்பாட்டின் மீது முழுக் கவனத்தையும் செலுத்த முடியும்.

‘ஓட்டப் பந்தயங்களில் புரட்சியை ஏற்படுத்துவதில் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பானது, தொழில்நுட்பமும், போட்டியாளர்களின் சிந்தனைகளும், நுகர்வோர் ஒத்துழைப்பும் ஒன்றிணைந்ததாகும். இலங்கையின் விளையாட்டுத் துறையில் ஆற்றல் நிறைந்திருப்பதை நாம் காண்கிறோம். எமது தேசிய அணிகளுக்கு உதவி செய்து வலுவூட்ட திடசங்கற்பம் பூண்டிருக்கிறோம். எனவே, என்ற கோட்பாட்டை தொடர்ந்து முன்னெடுக்கிறோம்,’ என்றார், டில்ஷான். 2022ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையின் பராலிம்பிக் அணிக்கும் ஆடை அனுசரணையாளராக திகழ்வதில் MAS பெருமை அடைகிறது.

MASஐப் பற்றி

தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடையுற்பத்தி மற்றும் ஆடையுற்பத்தி தொழில்நுட்பக் கம்பனியாகத் திகழும் MAS Holdings ஆனது, ஆடை மற்றும் துணி உற்பத்தியில் வடிவமைப்பு முதற்கொண்டு விநியோகம் வரையிலான தீர்வு வழங்கும் அமைப்புக்களில் ஆகக்கூடுதலான அங்கீகாரம் பெற்றதாகும். இவ்வமைப்பு 100,000இற்கு மேற்பட்டவர்கள் உள்ளடங்கிய சமுதாயத்தின் இல்லமென்ற ரீதியில், இன்று, உலகம் முழுவதும் நவநாகரீகத்தின் பிரதான மையங்களில் வடிவமைப்பு நிலையங்களை ஸ்தாபித்து 17 நாடுகளில் இயங்கி வருகிறது. துடிப்பானதும், மாறிக் கொண்டே இருப்பதுமான தொழில் துறையின் கிராக்கிக்கு ஈடுகொடுத்து, அணிகலன் தொழில்நுட்பம், மகளிர்க்கான தொழல்நுட்பம், புதிய தொழில்முயற்சிகள், புடவை உற்பத்தி பேட்டைகள் போன்ற துறைகளை உள்ளடக்கக்கூடிய வகையில், MAS இன் செயற்பாடுகள் விஸ்தாரம் அடைந்துள்ளன.

கடந்த 30 ஆண்டு காலமாக இயங்கி வரும் MAS ஆனது நெறிமுறைகளை மதித்து, நிலைபேறாக வேலை செய்யக்கூடிய பின்புலத்தை உருவாக்குவதிலும், சமூக அபிவிருத்தி மற்றும் மகளிர் வலுவூட்டலில் அயராது பாடுபட்டு வருவதற்காகவும் உலக அங்கீகாரத்தை பெற்றுள்ளது. புதுமையான உற்பத்திகள் மற்றும் வடிவமைப்பில் எதிர்பார்ப்புக்களை தவறாமல் பூர்த்தி செய்யக்கூடியதாக, உற்பத்திச் சிறப்பும், கலைத்திறனும் MASஐ துறைசார்ந்த முன்னணி நிறுவனமாக உலக வரைபடத்தில் முத்திரை பதிக்கச் செய்துள்ளன. இன்று, ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலான கம்பனியின் முயற்சிகள், உற்பத்தி, வாழ்வு, பூமிக் கிரகம் ஆகிய மூன்று துறைகளில் கவனம் செலுத்தி, நிலைபேறான மாற்றத்தை உருவாக்கும் திடசங்கற்பத்தை உள்ளடக்கிய MAS இன் ‘மாற்றத்திற்கான திட்டத்தில்’ எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இந்த முன்முயற்சிகள் ஊடாக, சகல பணியாளர்களையும் மாற்றத்தின் முகவர்களாக மாறுவதற்கு தூண்டுதல் அளித்து, கனவுகளை நிறைவேறச் செய்து, எமது பூமிக் கிரகத்தில் வாழும் உயிர்களது வலைப்பின்னலை செழுமையாக்க வேண்டும் என்பது MAS இன் இலக்காகும்.

 

 

உலகளாவிய விரிவாக்கத்தைத் தொடரும் HBO MAX,...
HBO Max continues global expansion,...
Rockland Group Commemorates 101 Years...
City of Dreams Sri Lanka-வின்”Signature...
அரசின் ஆதரவுடன் STEM Feed திட்டத்தை...
ජනකාන්ත බොලිවුඩ් රංගන ශිල්පී අර්ජුන්...
ශ්‍රී ලංකාවේ ආහාර පිළිබඳ රස...
AHRP, Sentiva, and Altrium sign...
ජනකාන්ත බොලිවුඩ් රංගන ශිල්පී අර්ජුන්...
ශ්‍රී ලංකාවේ ආහාර පිළිබඳ රස...
AHRP, Sentiva, and Altrium sign...
Evolution Auto மற்றும் Ather Energy...