முன்னணி தொழில்துறை தீர்வுகள் வழங்குநரான Hayleys Aventura (Hayleys Aventura) அதன் உலகளாவிய கூட்டாளர் வலைப்பின்னலுடன் முடிவுப் பொருட்கள், மூலப்பொருட்களைக் கையாளுதல் மற்றும் களஞ்சிய தீர்வுகளை வழங்குவதற்கான சேவைகளை மேலும் விரிவாக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இது இலங்கை நிறுவனங்களுக்கு ஒரே இடத்தில் இருந்து உயர்தர களஞ்சிய வசதிகளுக்கான தீர்வுகளை பெற உதவுகிறது.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற நிறுவனங்களான Hyster, Prestar, Goodpack மற்றும் A-Safe போன்றவற்றுடன் வலுவான உறவுகளைப் பயன்படுத்தி, Hayley’s Aventura தற்போது பரந்த அளவிலான தொழில்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த உபகரணங்கள் மற்றும் சேவைகளை வழங்குகிறது.
“இலங்கை தனது ஏற்றுமதி வருமானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டிய நேரத்தில், இலங்கை உற்பத்தியாளர்களின் விநியோகச் சங்கிலிகளில் செயல்திறனை மேம்படுத்துவதற்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றோம், மேலும் அவர்களின் தயாரிப்புகளை சந்தைக்குக் கொண்டுவருவதற்கான திறனை மேலும் வலுப்படுத்துகிறோம். முன்னணி உலகளாவிய பிராண்டுகளுடனான எங்கள் கூட்டாண்மைகளை மேம்படுத்துவதன் மூலம், உயர்தர முடிவுப் பொருட்கள், மூலப்பொருட்களைக் கையாளுதல் மற்றும் களஞ்சிய தீர்வுகளை மிக உயர்ந்த உலகளாவிய தரத்திற்கு மலிவு விலையில் வழங்க முடியும்.” என Hayleys Aventura (Pvt) Ltd. இன் முகாமைத்துவப் பணிப்பாளர் வஸப ஜயசேகர தெரிவித்தார்.
Hyster forklifts மற்றும் டிரக் வாடகைகளை வழங்குவதன் மூலம் தற்போது அனுபவிக்கும் இயக்கச் செலவுகள் மற்றும் செலவுகளைக் குறைக்க விரும்பும் வாடிக்கையாளர்களை நிறுவனம் தற்போது பூர்த்தி செய்ய முடியும். இதற்கிடையில், Hayley’s Aventura மலேசியாவின் Prestar உடனான அதன் சமீபத்திய கூட்டாண்மை மூலம் உயர்தர Rack அமைப்புகளுடன் அதன் களஞ்சிய தீர்வுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
உணவு மற்றும் பானங்கள், நுகர்வுப் பொருட்கள், இரசாயனங்கள், ரப்பர் மற்றும் வாகன உதிரிபாகங்களை தரப்படுத்தப்பட்ட Goodpack IBCs களை (இடைநிலை மொத்த கொள்கலன்கள்) பயன்படுத்தி பாதுகாப்பான மற்றும் செலவு குறைந்த பேக்கேஜிங்கிற்கான புத்தாக்கமான தீர்வுகளை வழங்க, Goodpack சிங்கப்பூருடன் ஹேய்லிஸின் அவென்ச்சுரா கூட்டு சேர்ந்துள்ளது. இந்த மறுபயன்பாட்டு, தொழில்துறை தர உலோக IBCகள் ஏற்றுமதி அல்லது உள்நாட்டு சேமிப்பு அல்லது வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்த முடியும்.
A-Safe, Haley’s Aventura உடன் இணைந்து, அனைத்து தொழில்துறை பணியிடங்களுக்கும் பாலிமர் அடிப்படையிலான Heavy Duty பாதுகாப்பு வேலிகளை தயாரிக்கும் உலகின் முன்னணி நிறுவனமாகும். ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், தொழில்துறை விபத்துகளில் இருந்து முடிந்தவரை பாதுகாப்பை உறுதிசெய்ய தேவையான உபகரணங்களை வழங்கு நடவடிக்கை எடுப்பதாகும்.
முடிவுப் பொருட்கள், மூலப்பொருட்களைக் கையாளுதல் மற்றும் களஞ்சிய தீர்வுகளை வழங்குவதோடு, ஹேய்லிஸ் அவென்ச்சுரா தொழில்துறை தராசு முதல் எடைத் தராசுகள் வரை ஒரே கூரையின் கீழ் உலகளவில் நம்பகமான எடை தீர்வுகளை வழங்குகிறது.
Haley’s Aventura ஆனது எந்தவொரு புகழ்பெற்ற forklift பிராண்டின் சிறப்புப் பழுதுபார்ப்பு, 24 மணி நேர அழைப்பு மையம், நாடு முழுவதும் 9 பிராந்திய சேவை மையங்கள் மற்றும் அவசரகாலச் சேவை மையங்கள் மற்றும் அவசரகாலச் சேவையை வழங்கும் திறன் கொண்ட ஒரு முழு வசதியுடன் கூடிய செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. நிறுவனத்தின் நிபுணர் மற்றும் அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்ய முன் விற்பனை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய ஆலோசனை மற்றும் தொடர்புடைய சேவைகளை வழங்க உறுதிபூண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Hayleys Aventura ஆனது இலங்கையின் மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான Hayleys குழுமத்தின் தொழில்துறை உள்ளீடுகள் மற்றும் ஆற்றல் துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு பல்வகைப்பட்ட மூலோபாய வணிக அலகுகளை உள்ளடக்கியது. பொறியியல் தீர்வுகள், மருத்துவம் மற்றும் பகுப்பாய்வு தீர்வுகள், தொழில்துறை மூலப்பொருட்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகியவை இதில் அடங்கும்.