முற்பணங்களில் 224 பில்லியன் ரூபா அதிகரிப்புடன் முதல் அரையாண்டில் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்த HNB

Share

Share

Share

Share

பொருளாதார ஏற்ற இறக்கங்கள் மற்றும் பணவீக்க அழுத்தங்கள் நிறைந்த ஒரு காலப்பகுதியை எதிர்கொண்டு, HNB குழுமம் 2026 ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த ஆறு மாத காலப்பகுதிக்கான வரிக்கு பின்னரான இலாபமாக (PAT) 22.5 பில்லியன் ரூபாயைப் பதிவு செய்துள்ளதுடன், இதே காலப்பகுதியில் வங்கி மாத்திரம் 23.1 பில்லியன் ரூபாய் வரியின் பின்னரான இலாபத்தைப் பதிவு செய்துள்ளது.

இவ்வருடத்தின் முதலாம் அரையாண்டில் முற்பணங்கள் 224 பில்லியன் ரூபாயினாலும், வைப்புகள் 138 பில்லியன் ரூபாயினாலும் அதிகரித்ததன் மூலம் இந்தச் செயல் வடிவம் வலுவான இருப்புநிலைக் குறிப்பு வளர்ச்சியைப் பிரதிபலித்துள்ளதுடன், 1.17% தேறிய மூன்றாம் நிலை விகிதத்துடன் வலுவான சொத்துத் தரத்தையும் பேணியுள்ளது.

வலுவான கடன் வழங்கும் வேகம் மற்றும் கடன்கள் மூலம் கிடைத்த வருவாய் காரணமாக, வங்கியின் நிகர வட்டி வருமானம் (NII) ஆண்டுக்கு ஆண்டு 21% அதிகரித்து 55.2 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. நிதியளிப்புச் செலவு அழுத்தங்களுக்கு மத்தியிலும், நிகர வட்டி வரம்பு (NIM) 4.26%லிருந்து 4.40% ஆக அதிகரித்துள்ளது. இது HNB இன் வலுவான நிதிச் செயல்பாட்டைக் காட்டுகிறது.

வங்கியின் வட்டி சாரா வருமான மார்க்கங்களை மேலும் வலுப்படுத்தும் வகையில், டிஜிட்டல் வங்கிச் செயல்பாடுகளின் அதிகரிப்பு, அட்டை வழியிலான பரிவர்த்தனைகளின் உயர்வு மற்றும் பரிவர்த்தனை வங்கி மற்றும் குத்தகை வணிகங்களின் வலுவான பங்களிப்பு ஆகியவற்றின் காரணமாக, நிகர கட்டணம் மற்றும் கமிஷன் வருமானம் ஆண்டுக்கு ஆண்டு 30% அதிகரித்துள்ளது. நிகர வட்டி வருமானம் மற்றும் வட்டி சாரா வருமானம் ஆகியவற்றின் கூட்டுத் தாக்கத்தால், மொத்த செயல்பாட்டு வருமானம் ஆண்டுக்கு ஆண்டு 27% அதிகரித்து 76.7 பில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது. வெளிநாட்டு நாணய மதிப்பிலான தொழில்நுட்பம் மற்றும் கொடுப்பனவு செயலாக்க செலவுகள் காரணமாக, இக்காலப்பகுதியில் செயல்பாட்டுச் செலவுகள் மிதமாக அதிகரித்த போதிலும், வங்கி விவேகமான செலவு நிர்வாகத்தைப் பேணியுள்ளது. இது ஒட்டுமொத்த இலாபத்தை ஆதரித்துள்ளதுடன், வருடாந்த செலவுக்கும் வருமானத்திற்குமான விகிதத்தை 2025ஆம் ஆண்டிலிருந்த 38.56% உடன் ஒப்பிடுகையில் 34.48% ஆகக் குறைக்க உதவியுள்ளது.

இக்காலப்பகுதியில் வங்கியின் கடன் வழங்கும் கோப்புறையின் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில், 2026ஆம் ஆண்டின் முதலாம் அரையாண்டில் பெறுகைகளுக்கான ஒதுக்கீடு 4.1 பில்லியன் ரூபாயாகக் காணப்பட்டது; இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான ஒதுக்கீடு திரும்பப் பெறப்பட்டமையுடன் ஒப்பிடுகையில் மாறுபட்டதாகும்.

இந்தச் செயல்வடிவம் குறித்து கருத்துத் தெரிவித்த HNB PLC இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. தமித் பல்லேவத்த, “இவ்வருடத்தின் முதல் அரையாண்டில் எமது செயல்வடிவமானது நாம் சீராகச் செயற்பட்டமையையும், எமது வாடிக்கையாளர்கள் HNB மீது கொண்டுள்ள நீடித்த நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. சவாலான செயல்பாட்டுச் சூழலுக்கு மத்தியிலும், வலுவான சொத்துத் தரம் மற்றும் ஆரோக்கியமான மூலதனம் மற்றும் திரவத்தன்மை நிலையைப் பேணி, எமது கடன் மற்றும் வைப்பு இலாகாக்களைத் தொடர்ந்து விரிவுபடுத்தியுள்ளோம். இது வங்கியின் நிதி வலிமையைப் பாதுகாக்கும் அதே வேளையில், எமது வாடிக்கையாளர்களின் இலட்சியங்களுக்கு ஆதரவளிக்க எமக்கு வழியமைத்துள்ளது,” எனக் குறிப்பிட்டார்.

பொறுப்பான நிதித் தீர்வுகளை வழங்குதல், எமது டிஜிட்டல் திறன்களை வலுப்படுத்துதல் மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தைத் தொடர்ச்சியாக மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம், மாறிவரும் சந்தை நிலைமைகளைத் தனிநபர்களும் வணிகங்களும் வெற்றிகரமாக எதிர்கொள்ள உதவுவதில் நாம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம். அதே நேரத்தில், செயல்திறனை அதிகரிக்கவும், நிர்வாகத்தை வலுப்படுத்தவும் மற்றும் வங்கியின் நீண்டகால வளர்ச்சிக்கு வழிவகுக்கவும் எமது பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் நாம் தொடர்ந்து முதலீடு செய்கிறோம். எமது ஊழியர்களின் சிறந்த அர்ப்பணிப்பு இந்த முடிவுகளை அடைவதற்கு முக்கிய காரணியாக அமைந்ததுடன், எமது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான நம்பிக்கை மற்றும் ஆதரவிற்காக எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வருடத்தின் இரண்டாம் அரையாண்டிற்குள் நாம் கால்பதிக்கும் வேளையில், இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் அதேவேளை, எமது மூலோபாய முன்னுரிமைகளைச் செயல்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம். வலுவான இருப்புநிலைக் குறிப்பு மற்றும் தெளிவான நீண்டகால தொலைநோக்குடன், எமது வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் நாம் சேவை செய்யும் சமூகங்களுக்கு நீடித்த மதிப்பை உருவாக்கும் மிகவும் வலிமையான, மீளெழுச்சிமிக்க HNBஐ நாம் தொடர்ந்து கட்டியெழுப்புவோம்.” என தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டின் முதலாம் அரையாண்டில் வங்கியின் மொத்த சொத்துத் தளம் 2.55 டிரில்லியன் ரூபாயைத் தாண்டி இருப்புநிலைக் குறிப்பு வலுவடைந்து, மொத்தக் கடன்கள் 1.7 டிரில்லியன் ரூபாயை எட்டியுள்ளன. குறைந்த செலவு வைப்புரிமை மற்றும் 34% CASA தளத்துடன், வாடிக்கையாளர் வைப்புகள் 2.1 டிரில்லியன் ரூபாயைக் கடந்து, வங்கியின் வணிக வேகம் மற்றும் ஒழுங்குமுறை அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றன.

வங்கியானது தனது எதிர்கால வணிக வளர்ச்சியை ஆதரிப்பதற்கான போதிய திறனை வழங்குவதுடன், ஒழுங்குமுறைத் தேவைகளை விடவும் மிக உயர்வான மட்டத்தைப் பேணி, 15.44% அடுக்கு I மூலதன விகிதம் (Tier I Capital Ratio), 18.18% மொத்த மூலதன விகிதம் மற்றும் 186.69% அனைத்து நாணயங்களுக்குமான திரவத்தன்மை பாதுகாப்பு விகிதத்துடன் வலுவான மூலதன மற்றும் திரவத்தன்மை நிலையைத் தொடர்ந்து பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொழிலாளர் தட்டுப்பாடு காரணமாக இயந்திரங்கள், தரவுகள்...
පුල්ලේ මඩුවෙන් වෛද්‍ය පීඨයට වැවිලි...
The cost of hesitation: lessons...
TikTok strengthens AI transparency and...
රෙදිපිළි හා ඇඟලුම් උපාංග නිෂ්පාදකයින්ගේ...
Deleted Scenes by BBDO Sri...
150 years of rubber: A...
Swisstek strengthens integrated building solutions...
Deleted Scenes by BBDO Sri...
150 years of rubber: A...
Swisstek strengthens integrated building solutions...
පාරිභෝගිකයින්ට සුවිශේෂී ප්‍රතිලාභ රැසක් පිරිනමමින්...