மெடிகெயார் மருத்துவ நிலையத்துடன் குருநாகலில் சுகாதார சேவைகளை வலுப்படுத்துகிறது நவலோக்க

Share

Share

Share

Share

இலங்கையின் முன்னணி தனியார் சுகாதார சேவை வழங்குநரான நவலோக்க மெடிகெயார் மருத்துவமனை குழுமம், அதன் சர்வதேச மட்ட சுகாதார சேவைகளை தொடர்ந்து விரிவுபடுத்தியுள்ளதுடன், புத்தம் புதிய நவலோக மருத்துவ சேவை நிலையத்தை 2023 மார்ச் 7 அன்று குருநாகல் கொழும்பு வீதியில் இலக்கம் 317 இல் சம்பிரதாயபூர்வமாக திறந்துள்ளது.
நவலோக்க மெடிகெயார் தலைவர் ஹர்ஷித் தர்மதாச மற்றும் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை மற்றும் பணியாளர்கள் மற்றும் நலன் விரும்பிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நவலோக மெடிகேர் நிறுவனத்தின் தலைவர் ஹர்ஷித் தர்மதாச கருத்து தெரிவிக்கையில், “நாடு முழுவதும் சுகாதார சேவைகளின் தரத்தை அதிகரிப்பது எங்களின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும், மேலும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த நவலோக்க மெடிகெயார் நிலையம் இந்த இலக்கை அடைய உதவும். குருநாகல் மாவட்ட மக்கள் இப்போது எங்களின் உயர்தர மருத்துவக சேவைகளை இலகுவாக அனுபவிக்க முடியும் மற்றும் எமது திறமையான மற்றும் தகுதி வாய்ந்த ஊழியர்களிடமிருந்து அதிக அர்ப்பணிப்பு மற்றும் கவனத்துடன் கூடிய சேவையைப் பெற முடியும்.” என தெரிவித்தார்.
அதன் தரம், நிபுணத்துவம் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் ஆகியவற்றிற்கு பெயர் பெற்ற, நவலோக்க குருநாகல் மெடிகெயார் நிலையம் நூற்றுக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளுடன் பல நன்மைகளை வழங்கும், இது பிரதேச மக்களை மேலும் பொருளாதார ரீதியாக வலுப்படுத்தும்.
நவலோக மருத்துவ மனையின் அதிநவீன அவசர சிகிச்சை நிலையமானது குருநாகல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு சர்வதேச தரத்திலான சிகிச்சை வசதிகளை வழங்குவதுடன், ஏனைய மேம்பட்ட வசதிகள் நோயாளிகள் பாதுகாப்பான மற்றும் வசதியான சூழலில் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அனுபவிக்க உதவும்.
இந்தப் புதிய வசதியானது பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டிற்கும் பங்களிக்கும் என்பதால், மருத்துவம் மற்றும் மருத்துவம் அல்லாத துறைகளுக்காக 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்தப் பகுதியிலிருந்து சேவைக்காக இணைத்துக் கொள்ளப்படுவார்கள் ன எதிர்பார்க்கப்படுகிறது. நவலோக்க மெடிகெயார் நிறுவனத்தின் தரத்திற்கமைய ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் பயிற்சிப் பாடசாலை ஒன்று நிறுவப்படுவதுடன், ஊழியர்களுக்கான தங்குமிட வசதிகளும் வழங்கப்படும்.
நவலோக மெடிகெயார் குருநாகல் பிரதேசத்தில் உள்ள வழங்குநர்களிடமிருந்து தனக்குத் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவம் அல்லாத பொருட்களை கொள்வனவு செய்கிறது, இது பிரதேசத்தின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும்.
புதிய மருத்துவ சேவை நிலையத்தில் நோயாளிகளுக்கு வாரத்தின் அனைத்து நாட்களிலும் 24 மணிநேரமும் தாமதமின்றி சிகிச்சை அளிக்கும் வகையில் அதிநவீன வெளிநோயாளர் பிரிவு (OPD) அமைக்கப்பட்டுள்ளது. பல உயர்தர சுகாதார சேவைகள் இங்கு வழங்கப்படுகின்றன, மேலும் மக்கள் இந்த சேவைகளை மலிவு விலையில் பெற முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
இது தேசிய அளவில் 10,000 க்கும் மேற்பட்ட மருத்துவர்களுடன் பணிபுரியும் நவலோக்க கெயார் ஆய்வுகூட வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் 24 மணிநேரமும் செயல்படுகிறது. மருத்துவ தொழில்நுட்பத்தில் சமீபத்திய உலகளாவிய தரத்தைப் பயன்படுத்தி, ஆண்டுக்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மருத்துவ சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு சோதனையும் சர்வதேச தர வரையறைகளுக்கு உட்பட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த புதிய மருத்துவ நிலையம் மிகவும் திறமையான மற்றும் அர்ப்பணிப்புள்ள மருத்துவர்கள், நிபுணர்கள் மற்றும் மருத்துவப் பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்ற சுகாதாரப் பணியாளர்களைக் கொண்டுள்ளது.
சேனலிங் சேவைகள், மருந்தகம், எக்ஸ்ரே மற்றும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேனிங் உள்ளிட்ட கதிரியக்கத் துறை, தாய் மற்றும் குழந்தை மருத்துவ சேவைகள், கருவுறுதல் மையம், மருத்துவ காப்பீட்டு மையத்தின் எண்டோஸ்கோபி பிரிவு போன்ற சிறப்பு சேவை பிரிவுகள் மூலம் சுகாதார பரிசோதனைகள் மிகவும் நம்பகத்தன்மையுடன் செய்யப்படும். இது தவிர VOG ஸ்கேனிங், எக்கோ கார்டியோகிராம், நோய்த்தடுப்பு, உடற்பயிற்சி ECG மற்றும் ECG” EEG” மற்றும் Holter Monitoring போன்ற பல சேவைகள் குருநாகல் நவலோக்க மருத்துவ மனையிலிருந்து மலிவு விலையில் பெற்றுக் கொள்ள முடியும்.

உலகளாவிய விரிவாக்கத்தைத் தொடரும் HBO MAX,...
HBO Max continues global expansion,...
Rockland Group Commemorates 101 Years...
City of Dreams Sri Lanka-வின்”Signature...
அரசின் ஆதரவுடன் STEM Feed திட்டத்தை...
ජනකාන්ත බොලිවුඩ් රංගන ශිල්පී අර්ජුන්...
ශ්‍රී ලංකාවේ ආහාර පිළිබඳ රස...
AHRP, Sentiva, and Altrium sign...
ජනකාන්ත බොලිවුඩ් රංගන ශිල්පී අර්ජුන්...
ශ්‍රී ලංකාවේ ආහාර පිළිබඳ රස...
AHRP, Sentiva, and Altrium sign...
Evolution Auto மற்றும் Ather Energy...