ரமழான் கால உணவுகளும், சமூகப் பிணைப்பும்: TikTok மூலம் புதிய அனுபவத்தை வழங்கும் ‘Level Bite’ அப்துல் அஸீஸ்

Share

Share

Share

Share

இலங்கையில் ரமழான் மாதம் என்பது வெறும் மத ரீதியான கடமை மட்டுமல்ல, அது பிரதிபலிப்பு, நன்றியுணர்வு மற்றும் மனிதநேயத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது. இந்த புனித மாதத்தில் உணவு என்பது ஒரு உலகளாவிய மொழியாக அமைந்து, முஸ்லிம் சமூகத்தை மட்டுமன்றி அனைத்து இன மக்களையும், நண்பர்களையும், அண்டை வீட்டார்களையும் ஒன்றிணைக்கும் ஒரு பாலமாக மாறுகிறது.

ஆடம்பரமான இஃப்தார் விருந்துகள் முதல் வீதியோரக் கடைகளில் பகிரப்படும் கஞ்சி வரை, ரமழான் கால உணவு என்பது மதம் மற்றும் சமூக எல்லைகளைக் கடந்து மக்களை உரையாடவும், இணையவும் அழைப்பு விடுக்கிறது. இவ்வாறானதொரு சூழலில், டிஜிட்டல் தளங்கள் ஊடாக உணவின் சுவையையும் அதன் பின்னாலுள்ள கதைகளையும் பகிர்ந்து, ஒரு புதிய சமூகத்தையே உருவாக்கி வருகிறார் TikTok பிரபலம் அப்துல் அஸீஸ்.

அவரது ‘லெவல் பைட்’ (Level Bite) எனும் TikTok பக்கம் வெறும் வணிக நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டதல்ல. அது அவரது தேடல் மற்றும் ஆர்வத்தின் வெளிப்பாடாகும். ஆரம்ப காலங்களில் சாதாரண உணவுப் பக்கங்களைப் போலவே தட்டில் உள்ள உணவு, அதன் அலங்காரம், சுவை மற்றும் விலை ஆகியவற்றில் மாத்திரம் கவனம் செலுத்திய அவர், விரைவில் உணவின் சுவையைத் தாண்டி அதனைப் பரிமாறும் கைகள் மற்றும் அதனைச் சுற்றி நிலவும் சூழல் ஆகியவற்றின் மீது தனது பார்வையைத் திருப்பினார். மேசையில் நிலவும் சிரிப்பொலி, பணியாளர்களின் உபசரிப்பு மற்றும் அந்த இடத்தின் இதமான சூழல் என அனைத்தும் அவரது கவனத்தை ஈர்த்தன. இதன் விளைவாக, ‘லெவல் பைட்’ என்பது வெறும் விமர்சனத் தளமாக அல்லாமல், ஒரு முழுமையான அனுபவத்தைப் பகிரும் ஒரு கதை சொல்லும் களமாக மாறியது.

ரமழான் காலத்தில் அப்துல் அஸீஸின் பொறுப்பு இன்னும் அதிகரிக்கிறது. நீண்ட நேர நோன்பிற்குப் பிறகு அருந்தும் முதல் துளி நீர் எவ்வளவு புனிதமானதோ, அதேபோல குடும்பங்கள் வெறும் உணவிற்காக மட்டுமன்றி, நிம்மதியாக அமர்ந்து நேரத்தைச் செலவிடுவதற்கான இடங்களையே தேடுகின்றனர். இந்தத் தேடலை எளிதாக்கும் வகையில், அஸீஸ் தனது உள்ளடக்கத்தை வடிவமைக்கிறார். இப்தார் விருந்துகள், குடும்பங்களுக்கு ஏற்ற மலிவு விலை சலுகைகள் மற்றும் ரமழானுக்காக மாத்திரம் திறக்கப்படும் பிரத்தியேக உணவகங்கள் என அனைத்தையும் அவர் தனது காணொளிகள் மூலம் அறிமுகப்படுத்துகிறார். நள்ளிரவைத் தாண்டி அதிகாலை வரை உரையாடல்கள் தொடரும் சஹர் இடங்களையும் அவர் தேடிச் சென்று பதிவிடுகிறார். வெறும் உணவுகளைப் காட்சிப்படுத்துவதை விட, நண்பர்களின் ஒன்றுகூடல் மற்றும் பகிர்ந்துகொள்ளப்படும் உணவில் உள்ள நன்றியுணர்வு போன்ற அந்த மாதத்தின் ஆன்மாவை அவர் படம்பிடிக்கிறார்.

இந்த வெற்றியில் TikTok தளம் அவருக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. படைப்பாளிகளுக்கு சமமான வாய்ப்பை வழங்கும் இத்தளத்தில், பின்தொடர்வோர் (followers) எண்ணிக்கையைப் பாராது, ஒரு சிறந்த காணொளி பலரையும் சென்றடைகிறது. TikTok இன் ஆக்கபூர்வமான கருவிகள் மூலம், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுடன் தொடர்புகொள்ள அவருக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. இது ஒரு வழித் தொடர்பாடலாக இல்லாமல், ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த இடங்களைப் பரிந்துரைப்பதும், நண்பர்களைக் Tag செய்வதும் என ஒரு நேரடி உரையாடல் தளமாக மாறியுள்ளது. அப்துல் அஸீஸின் கூற்றுப்படி, TikTok உள்ளடக்கத்தை உரையாடலாகவும், உரையாடலை ஒரு சமூகமாகவும் மாற்றுகிறது.

ரமழான் மாதத்தில் TikTok தளத்தின் தாக்கம் இன்னும் அதிகமாவதை அவர் உணர்கிறார். மக்கள் வெறும் பொழுதுபோக்கிற்காக அன்றி, குடும்பத்துடன் செல்வதற்கான சரியான இடங்களையும், விசேட சலுகைகளையும் தேடியே இத்தளத்தைப் பயன்படுத்துகின்றனர்.

ரமழான் என்பது வெறும் உணவைப் பற்றியது மட்டுமல்ல, அது ஒற்றுமை மற்றும் பகிர்தலைப் பற்றியது. தனது உள்ளடக்கமானது மக்களின் தேடலை எளிதாக்குவதுடன், நம்பகமானதாகவும் இருக்க வேண்டும் என்பதே அஸீஸின் விருப்பமாகும். இறுதியில் ஒரு வேளை உணவின் விலை அல்லது அளவை விட, யாருடன் அமர்ந்து உணவை உண்டோம் மற்றும் அந்த தருணத்தின் இதமான நினைவுகளுமே நீண்ட காலம் மக்கள் மனதில் நிலைத்திருக்கும்.

‘லெவல் பைட்’ குழுவினரைப் பொறுத்தவரை ரமழான் என்பது வெறும் பருவகால உள்ளடக்கத்திற்கான ஒரு வாய்ப்பு மட்டுமல்ல. அது மக்களைச் சரியான இடங்களுக்கு வழிநடத்தி, அர்த்தமுள்ள பிணைப்புகள் ஒரு சிறு வாய் உணவில் இருந்தே தொடங்குகின்றன என்பதை உலகிற்கு நினைவூட்டும் ஒரு உன்னதமான காலமாகும். இதன் மூலம் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள மறைந்திருக்கும் உணவகங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதுடன், சமூகங்களை ஒன்றிணைக்கும் பணியையும் அஸீஸ் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.

TikTok වේදිකාව තුලින් ලොවක් මවිත...
Vision AI தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய...
JEWELS 2026 සඳහා එක්වන ලෙස...
පොත් ප්‍රදර්ශනයට ගිහින් හොඳම පොත්...
CFW Couture + Trousseau 2026...
Softlogic Life Achieves ISO/IEC 27001:2022...
Solutions Ground Disrupts Sri Lanka’s...
2026 ஸ்ரீலங்கா AI வாரத்தில் 18...
Softlogic Life Achieves ISO/IEC 27001:2022...
Solutions Ground Disrupts Sri Lanka’s...
2026 ஸ்ரீலங்கா AI வாரத்தில் 18...
இசை, நீர் விளையாட்டுக்களுடன் பாணந்துறையை அதிரவைக்க...