ஃபேர்வே ஹோல்டிங்ஸின் (Fairway Holdings) தலைமை வளர்ச்சி அதிகாரி திருமதி ரஜிதா ஜெயசூர்யாவுடன்பிரத்யேக நேர்காணல்.

Share

Share

Share

Share

நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து மீண்டு வருகிறது. இதன் வெளிப்பாடாக ரியல் எஸ்டேட் துறையும் வளர்ந்து வருவதை காண்கிறோம். மேலும் கட்டுமானத் துறைக்கும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் அதிக பங்களிப்பை அளிக்கிறது. சந்தையின் விநியோகத் தரப்பிலிருந்து பல புதிய கட்டுமானத் திட்டங்கள் இதற்கு வழிகாட்டுகின்றன. இத்துறையில் முன்னணி நாமமான ஃபேர்வே ஹோல்டிங்ஸ் (Fairway Holdings) நிறுவனத்தின் அத்தகையதொரு திட்டத்தின் தலைவரான திருமதி. ரஜிதா ஜயசூரிய அவர்களுடன் உரையாடுவதில் நாம் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

1. நாட்டின் பொருளாதாரம் ஒரு கொந்தளிப்பான காலத்தைத் தாண்டி, தற்போது ஸ்திரமான நிலையை எட்டியுள்ளதாகத் தெரிகிறது. ஒரு வணிகத் தலைவராக, அடுத்த சில ஆண்டுகளில் பொருளாதாரத்தின் போக்கை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

இலங்கை ஒரு இக்கட்டான காலகட்டத்தைக் கடந்து வந்து தற்போது நிலைத்தன்மையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் அடிப்படையில் இனி வரும் காலங்களில், சீர்திருத்தங்கள், வளர்ந்து வரும் முதலீட்டாளர் நம்பிக்கை மற்றும் தனியார் துறையின் வலிமை ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் பொருளாதாரம் சீராக வளரும் என்று நான் நம்புகிறேன். நாட்டின் முக்கிய தொழில் துறைகளில் ஒன்றான சுற்றுலாத்துறை நன்றாக மீண்டு வருகிறது மற்றும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இவற்றினால் சர்வதேச ஆர்வம் புதுப்பிக்கப்படுகிறது. இவை ஒட்டுமொத்தப் பொருளாதார வேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

உலகளாவிய சந்தை ஏற்ற இறக்கங்கள் போன்ற சவால்கள் இன்னும் நீடித்தாலும், அடிப்படை அம்சங்கள் மேம்பட்டு வருகின்றன. இது நீண்டகால முதலீடுகளுக்கான சிறந்த வாய்ப்புகளை உருவாக்குகிறது.

2. ரிசர்ச் இன்டெலிஜென்ஸ் யூனிட் (RIUNIT) அமைப்பின் சமீபத்திய தரவுகளின்படி, கொழும்பு 05 பிராந்தியம் அடுக்குமாடி குடியிருப்பு முதலீடுகளுக்கான சிறந்த இடமாக முன்னிலை பெற்றுள்ளது. கிருலப்பனையில் உங்களது வரவிருக்கும் புதிய திட்டம் குறித்து சில தகவல்களைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

“அமைவிடம், அமைவிடம், அமைவிடம்!” – ரியல் எஸ்டேட் சந்தையில் அமைவிடமே மிக முக்கியமான காரணி. கொழும்பு 05 என்பது கொழும்பின் வணிக மையங்களுடன் சிறந்த போக்குவரத்து இணைப்பைக் கொண்ட ஒரு துடிப்பான மற்றும் மையப்பகுதியாகும்.

எமது புதிய திட்டம், நகரப்புற வசதிகளின் சாரத்தை உள்வாங்கும் அதேவேளை, ஒரு சமூக வாழ்வியலையும் பசுமையான சூழலையும் பேணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உயர்தரத் தரங்களுக்குப் பெயர் பெற்ற ஃபேர்வே நிறுவனத்தின் நீண்டகால நற்பெயருக்கு இணங்க, இத்திட்டம் சிந்தனைமிக்க உட்புற வடிவமைப்புகள், உயர்தர முடிவு வேலைப்பாடுகள் மற்றும் நம்பகமான பொறியியல் தொழில்நுட்பத்துடன் நடைமுறை ரீதியான அன்றாட வாழ்க்கைக்கு முன்னுரிமை அளிக்கும்.

இது உள்ளூர் நிபுணர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஏற்ற நடுத்தர முதல் உயர்தர மேம்பாடாக இருக்கும். தரமான திட்டங்களை வழங்குவதற்கான ஃபேர்வேயின் நீண்டகால உறுதிப்பாட்டை இது தொடர்கிறது.

தற்போது கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, ஆறு தளங்கள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன. இந்தத் தெரிவுநிலையான முன்னேற்றம் கொள்வனவு செய்பவர்களுக்கு அதிக நம்பிக்கையையும் தெளிவையும் வழங்குகிறது.

3. இந்த புதிய குடியிருப்பில் மக்கள் எதிர்பார்க்கக்கூடிய சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகள் யாவை?

இந்தப் புதிய மேம்பாட்டில், குடியிருப்பாளர்கள் பின்வருவனவற்றை எதிர்பார்க்கலாம்

● நவீன வாழ்க்கைக்கான ஸ்மார்ட் ஹோம் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு

● உடற்பயிற்சி கூடம் (Gym), நீச்சல் குளம் (Swimming pool) மற்றும் பொழுதுபோக்கு தளம் போன்ற நடைமுறை வசதிகள்

● ஆற்றலைச் சேமிக்கும் மற்றும் தண்ணீரை மறுசுழற்சி செய்யும் அமைப்புகளுடன் இத்திட்டமானது சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

● மேற்கூரைத் தோட்டங்கள் உள்ளிட்ட பசுமையான இடங்கள்.

4. புலம்பெயர்ந்தோர் சமூகத்துக்கு (Diaspora community) மத்தியில் நம் நாடு ரியல் எஸ்டேட் முதலீட்டு இடமாக அதிக கவனத்தைப் பெற்று வருகிறது. இது உங்கள் திட்டத்திற்கு முக்கியமான ஒரு காரணியாக நினைக்கிறீர்களா?,,

இலங்கை புலம்பெயர்ந்தோர் சமூகம் எப்போதும் ரியல் எஸ்டேட் துறைக்கு ஒரு முக்கியமான பகுதியாக இருந்து வருகின்றனர், ஏனெனில் பலர் இறுதியில் சொந்த மண்ணுக்கே திரும்ப விரும்புகிறார்கள். இது எங்களுக்கு இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாகி வருகிறது.

வெளிநாட்டில் வசிக்கும் பல இலங்கையர்கள் சொத்து முதலீடுகளைச் செய்யும் போது மீண்டும் தமது தாயகத்துடன் இணைய விரும்புகிறார்கள். தரம், வெளிப்படைத்தன்மை மற்றும் சர்வதேச தரத்திலான வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களது எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் எமது திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

5. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு என்னென்ன கட்டண வசதிகள் உள்ளன?

முதலீட்டாளர்கள் ஒரு சொத்தை சொந்தமாக்குவதை எளிதாக்குவதற்கு நெகிழ்வான கட்டண விருப்பங்களை வழங்குகிறோம்:

● கட்டுமானக் காலக்கட்டம் மற்றும் நிலைகளுக்கு ஏற்பப் பிரிக்கப்பட்ட தவணைக் கட்டணத் திட்டங்கள்.

● முன்னணி உள்ளூர் மற்றும் சர்வதேச வங்கிகள் மூலம் நிதி உதவிகளை பெற்று தருதல்.

● வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான பணம் அனுப்பும் வசதிகள்

● முழுமையாக பணம் செலுத்தும் அல்லது பெரிய கொள்முதல்களை முன்கூட்டியே செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக ஆரம்பகால தள்ளுபடிகள் (Early bird discounts).

கட்டுமானக் கட்டத்திலேயே (Construction phase) முதலீடு செய்யும் கொள்வனவாளர்கள் வலுவான மதிப்பு உயர்வின் மூலம் பயனடைவார்கள். எமது ‘ஃபேர்வே லேடிடியூட்’ (Fairway Latitude) திட்டத்தில், கட்டுமானத்தின் போது விலைகள் ஆண்டுக்கு 15% க்கும் அதிகமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது முதலீட்டாளர்களுக்கு ஆரம்ப நிலையிலேயே முதலீடு செய்ய ஒரு கவர்ச்சிகரமான வாய்ப்பாக அமைகிறது.

6. இலங்கையில் அடுக்குமாடி குடியிருப்பு மேம்பாட்டாளர்களில் ஒரு முன்னோடியாக ‘ஃபேர்வே ரெசிடென்சீஸ்’ (Fairway Residencies) மதிக்கப்படுகிறது. இந்த வர்த்தக நாமம் தனது பாரம்பரியத்தை எவ்வாறு முன்னெடுத்துச் செல்கிறது? எதிர்காலத்திற்காக மேலும் திட்டங்கள் உள்ளனவா?

ஃபேர்வே ஹோல்டிங்ஸ் எப்போதும் இலங்கையில் செங்குத்து சொகுசு வாழ்வியலை (Vertical luxury living) அறிமுகப்படுத்திய ஒரு முன்னோடியாகும். இராஜகிரியில் முதன்முதலில் இந்த வாழ்வியலை அறிமுகப்படுத்தியதன் மூலம், நாங்கள் நகரத்தின் தோற்றத்தையே மாற்றியமைத்ததுடன் நவீன நகர்ப்புற வாழ்க்கை முறைக்கு ஒரு புதிய தரத்தையும் அமைத்தோம்.

வடிவமைப்பு, நிலைத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தில் நாங்கள் தொடர்ந்து புதுமைகளை உருவாக்கி வருகிறோம். ஆம், கொழும்பிலும் வளர்ந்து வரும் புறநகர் சந்தைகளிலும் கூடுதல் திட்டங்களை நாங்கள் திட்டமிட்டுள்ளோம். ஏனெனில் தரமான நகர்ப்புற வீடுகளுக்கான தேவை தொடர்ந்து வளரும் என்று நாங்கள் நம்புகிறோம்.

எமது விசுவாசமான வாடிக்கையாளர்கள் ஒரு பெருமையான வாழ்க்கை முறையை வாழ்வதற்கு எப்போதும் “ஃபேர்வே தரமான வீடுகளை” (Fairway Quality Homes) எதிர்பார்க்கலாம்.

7. சுருக்கமாகச் சொன்னால், இன்றைய உலகில் நீங்கள் காணும் மிகச் சிறந்த நேர்மறையான விடயம் மற்றும் எதிர்மறையான விடயம் எது?

நேர்மறை (Positive): மீளெழும் திறன் (Resilience)
எதிர்மறை (Negative): பிளவு (Division)

நன்றி, உங்கள் முயற்சிகள் சிறப்பாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்.

Tesla Model Y කාර් රථයට...
புதிய வாகன மாடல்களுக்கான விரிவான லீசிங்...
MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818...
Prime Group இன் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று...
ஜனசக்தி லைஃப், 2026 வருடாந்த விற்பனை...
ஜனசக்தி பைனான்ஸ் AFBU, இலங்கையில் நெறிமுறையான...
Janashakthi Life කණ්ඩායමේ මානව දයාව...
MullenLowe’s Sampath Karunaratne Awarded Next...
ஜனசக்தி பைனான்ஸ் AFBU, இலங்கையில் நெறிமுறையான...
Janashakthi Life කණ්ඩායමේ මානව දයාව...
MullenLowe’s Sampath Karunaratne Awarded Next...
JAAF reaffirms confidence in long-term...