அவசரகால மருத்துவமனை சிகிச்சை சேவைகளை மேலும் விரிவாக்க சுவசெரிய அறக்கட்டளைக்கு இரண்டு புதிய அம்பியூலன்ஸ்களை நன்கொடையாக வழங்கிய HNB

Share

Share

Share

Share

1990 சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவைக்கு உதவும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்ட ‘அம்புலன்ஸை தத்தெடுக்க’ (Adopt an Ambulance) திட்டத்திற்கு பங்களிப்புச் செய்யும் வகையில், ஹட்டன் நேஷனல் வங்கி (HNB) இரண்டு அம்பியூலன்ஸ்களை நன்கொடையாக வழங்கி, சமூக நலனுக்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்த முயற்சியானது நாடு முழுவதும் அவசர மருத்துவ சேவைகளை மேம்படுத்துவதற்கும், இலவச மருத்துவமனைக்கு முந்தைய சிகிச்சை சேவைகளை வழங்குவதன் மூலம் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான அணுகலை அதிகரிப்பதற்கான HNB இன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாகும்.

இந்த அம்பியூலன்ஸ்களை அதிகாரப்பூர்வமாக கையளிப்பதற்காக நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் HNB இன் முகாமைத்துவப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி தமித் பல்லேவத்த, HNB இன் சிரேஷ்ட நிர்வாக துணைத் தலைவர்/தலைமை செயல்பாட்டு அதிகாரி சஞ்சய் விஜேமான்ன, சிரேஷ்ட துணைத் தலைவர் – உத்திசார் பிரியங்கா விஜயரட்ன, நிலைபேறாண்மை வணிக நிர்வாக அதிகாரி ஷானெல் பெரேரா மற்றும் 1990 சுவசெரிய அறக்கட்டளையின் பிரதம நிறைவேற்று அதிகாரி சொஹான் டி சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் HNB இன் முகாமைத்துவப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி தமித் பல்லேவத்த உரையாற்றுகையில், ‘அவசர நிலையில் விரைவான மருத்துவ உதவிகளை வழங்குவதன் மூலம் உயிர்களைக் காப்பாற்ற முடியும். ‘அம்பியூலன்ஸை தத்தெடுக்க’ திட்டத்தின் மூலம் இலங்கையின் அவசர மருத்துவமனை சேவைகளை வலுப்படுத்த பங்களிக்க முடிந்ததில் நாங்கள் பெருமைப்படுகிறோம். நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு உதவுவதற்கும், அவசர சிகிச்சை போன்ற முக்கியமான பொதுச் சேவைகளுக்கு ஆதரவளிப்பதற்குமான எங்களது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இது காட்டுகிறது’ என்றார்.

1990 சுவசெரிய அறக்கட்டளையின் பிரதம நிறைவேற்று அதிகாரி சொஹான் டி சில்வா, HNB வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார், மேலும், இந்த அம்பியூலன்ஸ் சேவைகளை பராமரிப்பதற்கு நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றார்.

‘HNB போன்ற நிறுவனங்களின் ஆதரவு எமது அவசர மருத்துவமனை சேவைகளை மேம்படுத்தவும், விரிவுபடுத்தவும் உதவுகிறது. இந்த நன்கொடைக்கு நன்றி. அனைத்து இலங்கையர்களுக்கும் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பு இலவச மருத்துவ உதவி வழங்க முடியும் என்பதை உறுதிசெய்கிறோம். இந்த இரண்டு புதிய அம்பியூலன்ஸ்கள் விரைவாக நோயாளிகளை சென்றடைவதற்கும், அவசர நிலைகளுக்கு சிறப்பாக பதிலளிப்பதற்கும் எங்களுக்கு உதவும்,’ என்று அவர் மேலும் கூறினார்.

அவசர மருத்துவமனை சிகிச்சை சேவைகளை வழங்குவதற்காக அங்கீகரிக்கப்பட்ட 1990 சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவை, நாடு முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பு விரைவான மற்றும் இலவச அவசர மருத்துவ சிகிச்சை வழங்கி, ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவுகிறது. HNB இன் இந்த நன்கொடையின் மூலம் 1990 சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவை இப்போது மேலும் நோயாளிகளை விரைவாக அடைவதற்கும், அவசர நிலைகளில் விரைவான மற்றும் சிறந்த மருத்துவ சேவையை வழங்கவும் முடியும்.

‘அம்பியூலன்ஸை தத்தெடுக்க’ திட்டத்திற்கு HNB இன் பங்களிப்பு, பொது சுகாதாரம் மற்றும் சுகவாழ்வு மீது கவனம் செலுத்தும் வங்கியின் பரந்த நிறுவன சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதன் மூலம், இலங்கை மக்களுக்கு நீண்டகால நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டங்களுக்கு HNB தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.

Remote Ransomware on the Rise:...
කෘෂි යන්ත්‍රෝපකරණ සඳහා පහසු ලීසිං...
Sampath Bank Launches SL’s First...
அவசரகால மருத்துவமனை சிகிச்சை சேவைகளை மேலும்...
இலங்கைக்கு முதல் முறையாக, அதிவேக நெடுஞ்சாலைகளில்...
Healthguard expands footprint with new...
2025 Softlogic Life විකුණුම් සමුළුවේදී...
Samsung Sri Lanka Launches Exciting...
Healthguard expands footprint with new...
2025 Softlogic Life විකුණුම් සමුළුවේදී...
Samsung Sri Lanka Launches Exciting...
Chevron felicitates female-owned and operated...