ஆண்களின் உணர்ச்சிகளுக்கும், மனநலத்திற்கும் குரல் கொடுக்கும் அமந்த அமரசேகர

Share

Share

Share

Share

இன்றைய காலத்தில் மன நலம் பற்றிய விவாதங்கள் வெளிப்படையாக மாறியுள்ளன. எனினும், ஆண்களிடையே இது குறித்த விவாதங்கள் இன்னும் போதுமான அளவு இல்லை. ‘ஆண்மை’ என்ற பெயரில் உணர்வுகளை மறைக்கும் பழக்கம் மாற வேண்டும் என்பதை அமந்த அமரசேகர போன்றோர் வலியுறுத்துகின்றனர். மன நலம் பேணுவது பலவீனம் அல்ல, மாறாக அது மனிதனாக இருப்பதன் முக்கியமான அங்கம் என்பதை அவர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள்.

ஆடை அலங்காரத் துறையில் பிரபலமான ஒரு முன்னோடியாக திகழ்பவர் தான் அமந்த அமரசேகர. ஆண்களுக்கான நவீன ஆடை அலங்கார பாணியில் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரது பணி அதற்கும் அப்பாற்பட்டது. பழைய ஆண்மை கருத்துக்களை மாற்றியமைப்பதிலும், ஆண்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த ஊக்குவிப்பதிலும் அவர் முனைப்புடன் செயல்படுகிறார். TikTok தளத்தைப் பயன்படுத்தி, ஆடை அலங்காரம், வாழ்க்கை முறை மற்றும் மன நல விழிப்புணர்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, முக்கியமான சமூக உரையாடல்களை முன்னெடுத்துச் செல்கிறார்.

அமந்தவின் சமூக ஊடகப் பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டது – அவரது கவனம் ஆடை அலங்காரத்திலிருந்து ஆண்களின் மன நலம் என்ற அவசரமான பிரச்சினைக்கு மாறியது. குறிப்பாக இலங்கையில் ஆண்களால் இடம்பெறும் வன்முறைச் செயல்களின் அதிகரிப்பு அவரை ஆழமாக கவலைக்குள்ளாக்கியது. இதன் பின்னணியில் உள்ள ஆழமான பிரச்சினைகளை பற்றி சிந்திக்கத் தொடங்கினார்.

ஆண்களை குற்றவாளிகளாக முத்திரை குத்துவது எளிது, மேலும் அவர் கூறுகையில், ‘தண்டனை தேவைப்படும் இடத்தில் தண்டனை வழங்கப்பட வேண்டும்.’ ஆனால் அவர்களின் செயல்களுக்கு பின்னால் உள்ள அடிப்படை காரணங்களை மிகச் சிலரே கருத்தில் கொண்டனர் என்பதை அமந்த அமரசேகர உணர்ந்தார்.

‘தவறான பாதையில் சென்றிருக்கக்கூடிய ஒருவருக்கும் எனக்கும் இடையே உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், என் உணர்வுகளைப் பற்றி பேசவும், உதவி நாடவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.’ வித்தியாசம் வளங்களின் கிடைக்கும் தன்மையில் தான் உள்ளது, ஆனால் அதன் விளைவுகள் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவை என்று அவர் கூறுகிறார்.

ஆண்களின் மன நலத்திற்காக குரல் கொடுப்பதற்கான அவரது ஆர்வம் இரண்டு ஆழமான தனிப்பட்ட மற்றும் மாற்றம் தரும் அனுபவங்களால் தூண்டப்பட்டது. முதலாவதாக, உணர்வு பாதிப்புக்குள்ளாகும் தன்மையை ஊக்குவிக்காத காலகட்டத்தில் வளரக்கப்பட்ட தனது தந்தை, தனது மன வேதனையை வெளிப்படுத்த வழியின்றி போராடியதை அமந்த நேரில் கண்டார். மனம் திறந்து பேச இயலாமை ஏற்படுத்திய உணர்வுபூர்வமான காயங்களை அமந்தவால் பின்னர் ஆழமாக புரிந்துகொள்ள முடிந்தது. பின்னர், ஒரு நெருங்கிய நண்பர் தற்கொலை எண்ணங்கள் பற்றி அவரிடம் மனம் திறந்து பேசினார். இந்த கண் திறக்க வைக்கும், இதயத்தை உடைக்கும் தருணம், குறிப்பாக ஆண்களிடையே மன நல பிரச்சினைகள் எவ்வளவு எளிதாக கவனிக்கப்படாமல் போகலாம் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டியது.

இந்த முக்கியமான தருணங்கள் ஒரு தனிப்பட்ட இலக்கை உருவாக்கின. ஆண்கள் மனம் திறந்து பேச, ஆதரவு நாட, மற்றும் முக்கியமாக, நன்றாக இல்லாமல் இருப்பதும் பரவாயில்லை என்பதைப் புரிந்துகொள்ள ஒரு பாதுகாப்பான இடத்தை உருவாக்குவதே அந்த இலக்கு.

அமந்தவின் விழிப்புணர்வு பணியில் TikTok மிகச் சிறந்த கருவிகளில் ஒன்றாக விளங்குகிறது. மெருகூட்டப்பட்ட உள்ளடக்கங்களை மையமாகக் கொண்ட இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்றவற்றிலிருந்து மாறுபட்டு, TikTok இன் இயல்பான அணுகல்தன்மை உண்மையான மற்றும் நேர்மையான உரையாடல்களை ஊக்குவிக்கிறது.

இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், ‘இது மிகவும் இயல்பான தளங்களில் ஒன்று. மன நல விழிப்புணர்வுக்கு TikTok சிறப்பாக செயல்படுகிறது, ஏனெனில் இது மக்களை தேவையான உதவியுடன் இணைக்க உதவுகிறது. பரந்த பார்வையாளர்களுக்கு உள்ளடக்கத்தை அனுப்பும் இதன் திறன், ஆண்களின் மன நலம் குறித்த செய்திகளை, வேறு வழிகளில் இதைப் பற்றி அறிந்திராத மக்களையும் சென்றடையவும் இது உதவுகிறது’ என்று அவர் குறிப்பிட்டார்.

அவரது காணொளிகளைப் பார்த்த பிறகு, பலர் ஆலோசனை, வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு தேடி அவருக்கு செய்திகள் அனுப்பியுள்ளதாக குறிப்பிட்டார். இந்த உடனடி இணைப்பே TikTok ஐ இவ்வளவு சக்திவாய்ந்த தளமாக மாற்றுகிறது. TikTok இல் அவரது வருகை மூலம், ஆண்மை மற்றும் மன நலம் பற்றிய முற்போக்கான கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் தன்மை கொண்ட இளைய தலைமுறையினரை சென்றடைய முடிந்துள்ளது. சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் ஒரு தளமாக, TikTok இதுவரை தங்கள் பிரச்சினைகளை விவாதிக்க வாய்ப்பு கிடைக்காத மக்களுடன் தொடர்பு கொள்ள அவருக்கு உதவுகிறது.

‘TikTok இல் எனது மன நல பயணத்தை பகிர்ந்து கொள்ளத் ஆரம்பித்த போது, இது இவ்வளவு பெரிய அளவில் பரவும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நான் கண்டது, தங்கள் உணர்வுகள், மன அழுத்தம், அல்லது கவலைகள் பற்றி ஒருபோதும் பேச முன்வராத ஆண்களிடமிருந்து வந்த பெரும் எதிர்வினையை. அவர்கள் என்னைத் தொடர்புகொண்டு, தங்கள் கதைகளைப் பகிர்ந்துகொண்டு, உண்மையான, மனதில் உள்ள உணர்வுகளைப் பற்றி யாரோ ஒருவர் பேசுவதைக் காண்பது அவர்களுக்கு எவ்வளவு முக்கியமானது என்று சொல்லி வந்தார்கள்.’ என தெரிவித்தார்.

அமந்த தனது சமூக செயல்பாடுகளின் மூலம், TikTok போன்ற தளங்கள் ஒரு ஆதரவு அமைப்பாக செயல்படலாம் என்று உறுதியாக நம்புகிறார். மனநலத்திற்கான வீடியோக்கள், விவாதங்கள் மற்றும் திறந்த உரையாடல்கள் சில நேரங்களில் ஒருவரின் உயிரைக் காப்பாற்றக்கூடும். ஒருமுறை, மத்திய கிழக்கில் இருந்த ஒரு பார்வையாளர், அவரின் மனநல விழிப்புணர்வு வீடியோவைப் பார்த்த பிறகு, அமந்தவை தொடர்புகொண்டார். அந்த நபர் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டு வந்தார், ஆனால் அந்த வீடியோவின் மூலம் உதவி தேடுவதற்கும் ஆதரவு பெறுவதற்கும் தன்னம்பிக்கை கிடைத்தது. அமந்தவுக்கு, இதுவே அவர் விரும்பும் உண்மையான தாக்கம். மைல்களுக்கு அப்பாலும் மனிதர்களின் வாழ்க்கையை தொட்டுச் செலுத்துவதே அவரது குறிக்கோள்.

සුව සේවා අංශයේ ශක්තිමත් කාර්යසාධනය...
Samsung වෙතින් උසස් තාක්ෂණයෙන් යුත්...
Healthguard Distribution, இலங்கையில் Cipla நிறுவனத்தின்...
Healthguard Distribution, ශ්‍රී ලංකාව තුළ...
සුවිශේෂී පුද්ගල මූල්‍ය ණය පිරිනැමීමට...
ඇඟලුම් අපනයනකරුවන්ගේ 42 වැනි වාර්ෂික...
TikTok භාවිත කරමින් පිරිමින්ගේ මානසික...
සුවිශේෂී පුද්ගල මූල්‍ය ණය පිරිනැමීමට...
ඇඟලුම් අපනයනකරුවන්ගේ 42 වැනි වාර්ෂික...
TikTok භාවිත කරමින් පිරිමින්ගේ මානසික...
සොෆ්ට්ලොජික් ලයිෆ්, 2024 Microsoft Global...