இந்த பண்டிகைக் காலத்தில் தனது கார்ட் உரிமையாளர்களுக்கு அசாதாரண தள்ளுபடிகளுடன் சிறப்பான வரவேற்புகளை வழங்கும் HNB

Share

Share

Share

Share

வணிக கூட்டாளர்கள் 300 பேரிடமிருந்து 70% வரை தள்ளுபடிகள் மற்றும் வட்டி இல்லாத எளிய தவணை திட்டங்களுடன் சிறப்புப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பை வழங்குகிறது

இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான HNB PLC, வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, அதன் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் உரிமையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள், எளிய தவணை திட்டங்கள் மற்றும் கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லும் வாய்ப்பை வழங்கியுள்ளது. 2025 ஏப்ரல் மாதம் முழுவதும் நடைமுறையில் இருக்கும் இந்த விளம்பர மேம்பாட்டு திட்டத்தின் கீழ், HNB கார்ட் உரிமையாளர்களுக்கு 70% வரை அசாதாரண தள்ளுபடிகள், வட்டி இல்லாத தவணை செலுத்தும் வசதிகள் மற்றும் விசேஷ பரிசுகளை வெல்லும் வாய்ப்புகள் கிடைக்கின்றன.

பல்பொருள் அங்காடி, பிராண்டட் ஆடை விற்பனையாளர்கள், இலத்திரனியல் உபகரண விற்பனை நிலையங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிலையங்கள், உணவகங்கள், சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு சேவைகள், சுகாதார சேவைகள் மற்றும் சூரிய சக்தி தீர்வுகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட வணிக கூட்டாளர்களுடன் இணைந்து, இந்த பண்டிகைக் காலத்தில் HNB தனது வாடிக்கையாளர்களுக்கு அசாதாரண சேமிப்பு வாய்ப்புகளுடன் சிறப்பான சலுகைகளை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது. வாரத்தின் ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு நிமிடமும் செயல்படும் இந்த சலுகைகளை அனுபவித்து, பண்டிகைக் காலத்தில் விரும்பியபடி ஷாப்பிங் அனுபவத்தை HNB கார்ட் உரிமையாளர்கள் இப்போது அனுபவிக்கலாம்.

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அன்றாட பயன்பாட்டு பொருட்களை வாடிக்கையாளர்கள் எளிதாக பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில், HNB பரந்த அளவிலான வணிகர்களுடன் கைகோர்த்துள்ளது. தங்களுக்கு விருப்பமான ஆடை-ஆபரணங்கள், பாதணிகள், இலத்திரனியல் சாதனங்கள், வீட்டு உபகரணங்கள், சூரிய சக்தி தீர்வுகள், தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் வசதி பொருட்களை வாங்கும் போது கணிசமான தொகையை சேமிக்கும் வாய்ப்பு HNB கார்ட் உரிமையாளர்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கிறது. மேலும், கீல்ஸ், காகில்ஸ் ஃபுட் சிட்டி, ஆர்பிகோ சூப்பர் சென்டர், குளோமார்க், ஸ்பார் மற்றும் லாஃப் உள்ளிட்ட சூப்பர் மார்க்கெட்டுகளில் விசேஷ தள்ளுபடிகளைப் பெற்று, இந்த பண்டிகைக் காலத்திற்கான அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைக்கலாம்.

மேலும், வாடிக்கையாளர்களின் அன்றாட செலவுகளை மேலும் எளிதாக்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட நுகர்வோர் பொருட்கள் விற்பனையாளர்களுடன் இணைந்து 48 மாதங்கள் வரை வட்டி இல்லாத தவணை திட்டங்களை வழங்க தயாராக உள்ளோம். இலத்திரனியல் சாதனங்கள், வீட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு 3, 6, 12, 24 மற்றும் 36 மாதங்கள் வரை நெகிழ்வான தவணை செலுத்தும் வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சலுகைகள் மூலம் உங்கள் செலவுகளை சிறப்பாக நிர்வகித்து, வீட்டிற்கு தேவையான குளிர்சாதன பெட்டிகள், சலவை இயந்திரங்கள், Air Conditions மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை வாங்கும் வாய்ப்பை HNB உங்களுக்கு வழங்குகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த HNBஇன் கார்ட் வணிகப் பிரிவின் பிரதானி திருமதி கௌதமி நிரஞ்சனி, ‘கார்ட் உரிமையாளர்களுக்கு தொடர்ச்சியாக சிறப்பு மதிப்பை வழங்குவதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் நாங்கள், இந்த புத்தாண்டு காலத்திலும் அவர்களுக்கு அந்த மதிப்பை வழங்க முனைந்துள்ளோம். அசாதாரண தள்ளுபடிகள், வட்டியில்லா தவணை முறைகள் மற்றும் கவர்ச்சிகரமான பரிசுகள் மூலம் இந்த காலகட்டத்தில் சிறந்தவற்றை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க நாங்கள் ஆர்வமாக உள்ளோம். இது ஒரு தொடக்கம் மட்டுமே, மேலும் பல நன்மைகளை எதிர்காலத்தில் அவர்களுக்கு வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்’ என்று கூறினார்.”

HNBஇன் புத்தாண்டு சலுகைகள் ஷாப்பிங்கில் மட்டுமல்ல, ஹோட்டலில் தங்குதல், உணவு-பானங்கள் மற்றும் பயணம் போன்ற அனைத்து நிகழ்வுகளிலும் பெரும் நன்மைகளை வழங்குகின்றன. இலங்கை முழுவதும் பரவியுள்ள முன்னணி ஹோட்டல்கள், உல்லாச விடுதிகள் மற்றும் உணவகங்களில் விசேஷ தள்ளுபடிகள் மற்றும் பரிசுகளைப் பெற்று, HNB கார்ட் உரிமையாளர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை சுவையான உணவு அனுபவங்களுடன் மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம். மேலும், விசா கட்டணம், விடுமுறை தொகுப்புகள் மற்றும் பயணச் செலவுகளுக்கு 24 மாதங்கள் வரை வட்டி இல்லாத தவணை திட்டங்கள் வழங்கப்படுவதால், இந்த பண்டிகைக் காலத்தில் பயணங்களை திட்டமிடும் HNB கார்ட் உரிமையாளர்களும் இந்த நன்மைகளை அனுபவிக்க முடியும்.

நிலையான தன்மைக்காக தொடர்ந்து அர்ப்பணிக்கப்பட்டுள்ள HNB, இந்த பண்டிகைக் காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சூரிய சக்தி தீர்வுகளுக்காக 60 மாதங்கள் வரை வட்டி இல்லாத தவணை திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களில் (renewable energy) முதலீடு செய்ய வாடிக்கையாளர்களை ஊக்குவிப்பதுடன், அவர்களின் மின்சார கட்டணத்தைக் குறைத்து பசுமை எதிர்காலத்தை (green future) உருவாக்குவதற்கான நோக்கத்தைக் கொண்டுள்ளது. நிலையான நிதித் தீர்வுகளை (sustainable financial solutions) மேம்படுத்துதல் மற்றும் நீண்டகால சேமிப்பு வாய்ப்புகள் வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களை அதிகாரப்பூர்வமாக்கும் இந்த முயற்சி, HNB இன் தொடர்ச்சியான முயற்சிகளின் மற்றொரு படியாகக் கருதப்படுகிறது.

மேலும, பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியை மேலும் உயர்த்தும் விதமாக, எல்லா செலவுகளும் அடங்கிய சிங்கப்பூர் பயணத்தை வெல்லும் வாய்ப்பை HNB கார்ட் உரிமையாளர்களுக்கு வழங்கியுள்ளது. மார்ச் 31 வரையான காலப்பகுதிக்குள் தகுதியான பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்கள் தானாகவே இந்த விசேஷ சீட்டிழுப்பில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். இதில் வெற்றி பெறும் அதிர்ஷ்டசாலிக்கு ஒரு சிறந்த ஹோட்டலில் 4 நாட்கள், 3 இரவுகள் தங்குவதற்கான வசதிகள் உட்பட அனைத்து செலவுகளும் அடங்கிய சிங்கப்பூர் சுற்றுலா பயணம் பரிசாக வழங்கப்படும். இந்த பண்டிகை காலத்தில் நீங்கள் பெறக்கூடிய சிறந்த பரிசு இதுவாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை!

කොකා-කෝලා, ශ්‍රී ලංකාවේ සෑම විශේෂ...
Sampath Bank Becomes the First...
Fortude partners with Ettos to...
සුව සේවා සඳහා ප්‍රවේශය වැඩිදියුණු...
Galaxy F06 மற்றும் F16 5G...
2025 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு...
HNB ශ්‍රී ලංකාව පුරා කුඩා...
Healthguard Distribution සිය ඖෂධ පරාසය...
2025 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு...
HNB ශ්‍රී ලංකාව පුරා කුඩා...
Healthguard Distribution සිය ඖෂධ පරාසය...
Hachajah puts Sri Lanka on...