இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, நாட்டின் முதன் முறையாக அதிவேக நெடுஞ்சாலையில் கார்ட் மூலம் கட்டண செலுத்தும் முறையை அறிமுகப்படுத்துவதற்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) உடன் கூட்டு சேர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது. இது Commuter களின் வசதியை மேம்படுத்துவதிலும், தேசிய போக்குவரத்து உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதிலும் ஒரு முக்கியமான முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இந்த முயற்சியின் முன்னோடித் திட்டம் 2025 ஏப்ரல் 11 ஆம் திகதி தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவை மற்றும் கடவத்தை இடமாற்றங்களில் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்த முயற்சி தொடர்பில், ஏப்ரல் 9, 2025 அன்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சில் HNB மற்றும் RDA இடையே உத்தியோகப்பூர்வ ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது. இந்த செயல்முறை மூலம் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த HNB தேர்ந்தெடுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, அதிவேக நெடுஞ்சாலை சாவடிகளில் இப்போது Toll கட்டணத்தை கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்கள் மூலம் நேரடியாக செலுத்த முடியும் — இது முன்பு பணம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்ட முறை மற்றும் குறைவாக பயன்படுத்தப்பட்ட QR-அடிப்படையிலான தீர்வுகளிலிருந்து மாறுபட்டது.
HNBஇன் பாதுகாப்பான கார்ட் ஏற்பு உள்கட்டமைப்பு மூலம் செயல்படுத்தப்பட்ட இந்த அமைப்பு, Visa, Mastercard, American Express (Amex) மற்றும் LankaPay JCB கார்ட்களை ஏற்றுக்கொள்கிறது, இது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் தொடர்ச்சியான கட்டண அனுபவத்தை வழங்குகிறது. முக்கியமாக, இந்த சேவை இலங்கையின் அனைத்து வங்கிகளின் கார்ட் வைத்திருப்பவர்களுக்கும் கிடைக்கும், மேலும் இது அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்புகள் அனைத்திற்கும் அறிமுகப்படுத்தப்படும்.
நிகழ்ச்சியை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட HNBஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான தமித் பல்லேவத்த முதல் உத்தியோகப்பூர்வ கார்ட் பரிவர்த்தனையை மேற்கொண்டார். பொதுமக்களின் அன்றாட பயணங்களை எளிதாக்குவதற்கான வங்கியின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்.
இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில், “தொழில்நுட்பம் அன்றாட கட்டணச் சிக்கல்களை எவ்வாறு விரைவாகவும் சிரமமின்றியும் மேம்படுத்தும் என்பதற்கு இந்த முயற்சி மற்றொரு சிறந்த உதாரணம். பெரும் அளவில், இந்த தொழில்நுட்பம் வீதி போக்குவரத்து நெரிசலைக் குறைத்து அதிக செயல்திறனை அடைய உதவுகிறது. பணமில்லா கொடுப்பனவு முறை, எதிர்காலத்திற்கு தயாராகியுள்ள இலங்கையின் மாற்றத்திற்கும் இது ஆதரவாக உள்ளது.” என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய HNBஇன் சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரமுடைய துணைத் தலைவரும் தலைமை செயற்பாட்டு அதிகாரியுமான சஞ்ஜேய் விஜேமான்ன, “ஒரு டிஜிட்டல், கார்ட்-அடிப்படையிலான Toll அமைப்பை செயல்படுத்துவது, இலங்கைக்குள் பயணத்தை நிகழ்நேரத்தில் மேம்படுத்துவதற்கான ஒரு சக்திவாய்ந்த வாய்ப்பை நமக்கு வழங்குகிறது. பணமில்லா Toll கட்டணம் அறிமுகப்படுத்தியது மேம்படுத்தப்பட்ட கண்காணிப்பு மற்றும் தரவு பகுப்பாய்வு அமைப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்குகிறது. இது இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நிர்வகிப்பை முன்னறிந்து திறம்பட செயல்படுத்த உதவும், மேலும் மிகவும் நம்பகமான போக்குவரத்து வலையமைப்பை உருவாக்கும். RDA உடன் நெருக்கமாக ஒத்துழைத்து, பொது உள்கட்டமைப்பில் செயல்திறன் சிறப்புக்கான புதிய தரநிலையை நாங்கள் நிர்ணயிக்கிறோம்.” என தெரிவித்தார்.
முழுமையான டிஜிட்டல் எதிர்காலத்தை நோக்கி நகரும் நிலையில், இந்த ஒத்துழைப்பு அன்றாட சேவைகளில் புத்தாக்கமான முயற்சிகளை முன்னெடுப்பதில் HNB கொண்டுள்ள உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது. கார்ட்-அடிப்படையிலான Toll கட்டண முறைக்கான இந்த மாற்றம் வாகன ஓட்டுனர்களின் பயண அனுபவத்தை எளிதாக்குவது மட்டுமல்லாமல், இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் ஒரு நவீன, பணமற்ற அடிப்படை வசதிகளுக்கான அடித்தளத்தையும் அமைக்கிறது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சர் கௌரவ பிமல் ரத்னாயக்க இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கையில், “பொதுச் சேவைகளை எளிமையாகவும் அணுகத்தக்க முறையிலும் மாற்றுவதே எங்கள் நோக்கம். அதிவேக நெடுஞ்சாலைகளில் கார்ட் மூலம் கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்த HNB உடன் இணைந்து செயல்படுவது இந்த நேரத்தில் ஒரு அர்த்தமுள்ள படியாகும். இது பயணிகளுக்கான நடைமுறை மேம்பாடு மட்டுமல்ல, டிஜிட்டல் தீர்வுகள் மூலம் உள்கட்டமைப்பை நவீனமயமாக்கும் எங்கள் பரந்த முயற்சியை பிரதிபலிக்கும் ஒரு நடவடிக்கையும் ஆகும்.” என தெரிவித்தார்.
இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலை உள்கட்டமைப்பின் வளர்ச்சியில் இந்தத் தொடக்கம் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைகிறது. பொது பயன்பாடுகள் மற்றும் சேவைகளுக்கான டிஜிட்டல்-முதல் எதிர்காலத்தை நோக்கி நாடு முன்னேறும் இக்கட்டத்தில் இத்திட்டம் வெகுவான முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.