இலங்கையின் உயர் கல்வித் துறையின் மேம்பாட்டிற்காக ஐக்கிய இராச்சியத்தின் East Anglia பல்கலைக்கழகமும் Colombo International Campus உம் கைகோர்க்கின்றன

Share

Share

Share

Share

ஐக்கிய இராச்சியத்தின் East Anglia பல்கலைக்கழகமும் Colombo International Campusஉம் (CIC) அண்மையில் ஒரு சிறப்புக் கூட்டாண்மையை ஏற்படுத்திக் கொண்டன. இதன் மூலம் இலங்கை மாணவர்களுக்கு, உயர்தர சர்வதேச அங்கீகாரத்தைக் கொண்ட பிரித்தானியப் பட்டப்படிப்புகளையும் கல்வித் தகுதிகளையும் இந்நாட்டிலேயே பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும்.

இன்றைய நிலையில், ஐக்கிய இராச்சியத்தின் சிறந்த பல்கலைக்கழகங்கள் 30 இற்குள் இடம்பெற்றுள்ள East Anglia பல்கலைக்கழகம், 2026 QS உலகப் பல்கலைக்கழக தரவரிசையின்படி உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் 400 இற்குள்ளும் இடம்பெற்றுள்ளது.

சர்வதேசக் கல்வித் துறையில் 18 ஆண்டுகளாக நம்பகத்தன்மையை நிலைநிறுத்தியுள்ள Campus Direct இன் புதிய அறிமுகமான Colombo International Campus (CIC), ‘மாணவருக்கு முதன்மை’ என்ற கொள்கையை முன்னெடுத்துச் சென்று, உள்ளூர் திறன்களையும் திறமைகளையும் சர்வதேச மட்டத்திற்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அவ்வாறான சர்வதேச மட்ட உயர்கல்வியையும் தொழில் வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு வழங்குவதற்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக, UEA பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயற்படுவதற்காக இந்த CIC கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சிறப்புக் கூட்டாண்மை குறித்து கருத்துத் தெரிவித்த CIC இன் பணிப்பாளர் அம்ரித் வீரசேகர, “UEA இன் உயர் உலகளாவிய தரவரிசைகள் மற்றும் ஆராய்ச்சித் துறையில் அது கொண்டுள்ள திறன்கள் காரணமாக இந்த உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதன் மூலம், உலகத்தரம் வாய்ந்த கல்வியை எளிதாகவும் ஏற்றுக்கொள்ளக் கூடிய விலையிலும் வழங்குவதற்கான எங்களின் அர்ப்பணிப்பு இதன் மூலம் நன்கு பிரதிபலிக்கிறது. அதன் ஊடாக இலங்கை மாணவர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்ற பட்டப்படிப்பைப் பெறுவதற்கும், தற்போதைய வேலைகளில் போட்டித் தன்மையை வெற்றிகொள்ளத் தேவையான நடைமுறைத் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் வாய்ப்பு கிடைக்கிறது” என தெரிவித்தார்.

இந்தக் கூட்டாண்மை மூலம் இலங்கை மாணவர்களுக்கு East Anglia பல்கலைக்கழகத்தின் சர்வதேச தரத்தில் உள்ள பாடத்திட்டங்களுக்கு அமைய பட்டப் படிப்புகள் மற்றும் பட்டபின் படிப்புகளைப் பயிலும் வாய்ப்பு இப்போது ஏற்பட்டுள்ளது. இதன் கீழ் வணிக முகாமைத்துவம், தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் சைபர் பாதுகாப்பு போன்ற துறைகள் பல உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும், கல்வித் தேவைகளுக்கு ஏற்ப வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று (Transfer) கல்வி கற்பதற்கான வாய்ப்பையும் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பதே இதன் சிறப்பம்சமாகும்.

CIC இன் பணிப்பாளர் சுரேஷ் குணசேகர இங்கு கருத்துத் தெரிவிக்கையில், “இந்தக் கூட்டாண்மை இலங்கையின் உயர்கல்வியைப் புதிய பாதைக்கு வழிநடத்தும் முக்கியமான அடியாகச் சுட்டிக்காட்ட முடியும். சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட, ஆராய்ச்சித் துறையில் முன்னணியில் உள்ள பிரித்தானியப் பல்கலைக்கழகத்துடன் இணைவதன் மூலம், எங்கள் மாணவர்களுக்குத் தேவையான சர்வதேச அறிவையும் அனுபவங்களையும் வழங்குவதற்கு எங்களால் முடிந்துள்ளது. இலங்கை மாணவர்களுக்குச் சர்வதேசத் தரங்களுக்கு இணங்கிய தரமான கல்வியை எளிய மற்றும் ஏற்றுக்கொள்ளக் கூடிய விலையில் வழங்குவதே எங்களின் முதன்மை நோக்கமாகும்” என்று தெரிவித்தார்.

ஐக்கிய இராச்சியத்தின் (UK) நோரிச்சில் (Norwich) அமைந்துள்ள East Anglia பல்கலைக்கழகம் (UEA) சிறந்த கற்பித்தல் முறைகள், புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சிக்காக உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகமாகும். 2026 தரவரிசைகளின்படி, இது ஐக்கிய இராச்சியத்தில் 26வது இடத்திலும் (Complete University Guide 2026), உலகில் 156வது இடத்திலும் (Times Higher Education World University Rankings 2026) உள்ளது. மேலும், ஆராய்ச்சியின் தரத்தில் பிரித்தானியாவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் 25 இற்குள் இடம்பெற்றுள்ள இது, நிலைத்தன்மை மற்றும் சமத்துவம் தொடர்பிலும் சர்வதேச மட்டத்தில் உயர் அங்கீகாரத்தைப் பேணி வருகிறது.

ஐக்கிய இராச்சியத்தில் மாணவர்களுக்குக் கிடைக்கும் உயர்கல்வித் தரங்களையும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களையும் அதே வழியில் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இந்தக் கூட்டாண்மை மூலம் இலங்கை மாணவர்களுக்குக் கிடைக்கிறது. மேலும், இதன் காரணமாக வெளிநாடு சென்று கல்வி கற்பதற்காகச் செலவிட வேண்டிய அதிகச் செலவைச் சேமித்துக் கொள்வதற்கும், இலங்கையில் CIC நிறுவனத்தின் மூலம் பட்டப்படிப்பைப் பயில்வதன் மூலம் மிகக் குறைந்த செலவில் சர்வதேச தரத்தில் அங்கீகரிக்கப்பட்ட பட்டத்திற்கான வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்கும் இலங்கை மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த East Anglia பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உபவேந்தர் பேராசிரியர் Steven McGuire, “இலங்கையின் CIC உடன் இணைந்து East Anglia இன் கல்விச் சிறப்பை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சர்வதேச தரத்தில் தரமான மற்றும் ஆராய்ச்சி அடிப்படையிலான கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை உலகெங்கிலும் உள்ள மாணவர்களுக்கு வழங்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். நவீன கற்பித்தல் முறைகள் மற்றும் காலத்திற்கு ஏற்ற பாடத்திட்டங்கள் மூலம் இலங்கை மாணவர்களுக்கு வேலைச் சந்தையை வெற்றிகொள்வதற்குத் தேவையான நடைமுறைப் பயிற்சியையும் இதன் மூலம் வழங்குவதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்தார்.

ஸ்மார்ட் வகுப்பறைகள், உயர்ந்த தகவல் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் ஆய்வகங்கள் என்பதோடு உடற்பயிற்சி மையத்தையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ள Colombo International Campus, நவீன கல்வி நோக்குக்கு அமைய, கல்விக்கே உகந்த சூழலை மாணவர்களுக்கு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. East Anglia பல்கலைக்கழகத்தின் கற்பித்தல் முறைக்கு CIC இன் உட்கட்டமைப்பு வசதிகள் நன்கு பொருந்துகின்றன, அதன் மூலம் எதிர்காலத்திற்கு ஏற்ற பூரணமான கல்வி அனுபவத்தைப் பெற்றுக் கொள்வதற்கும் மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது.

இலங்கையின் உயர்கல்வித் துறையில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் இந்தக் கல்வி நிறுவனங்களுக்கிடையிலான கூட்டாண்மை மூலம், சர்வதேச அங்கீகாரத்துடன், உள்நாட்டிலேயே கல்வி கற்பதன் வசதி காரணமாக வெளிநாடு செல்லாமலேயே இங்கேயே தொழில் வாழ்க்கையைக் கட்டியெழுப்பிக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது. 2027 ஜனவரி மாதத்தில் ஆரம்பமாகத் திட்டமிடப்பட்டுள்ள இதன் முதல் தொகுதிக்கான மாணவர் சேர்க்கை இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பெருந்தோட்டத் துறையின் நிலையான இருப்புக்காக...
கண்கவர் இரவுடன் உண்மையான சுவையை சேர்த்த...
ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி உலகில் புதிய...
TikTok-ஐ ரமழான் உணவு மேசையாக மாற்றிய...
பொருளாதார மற்றும் கட்டமைப்பு அழுத்தங்களுக்கு மத்தியில்...
இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய...
இலங்கையின் உயர் கல்வித் துறையின் மேம்பாட்டிற்காக...
Caltex Abimani Strengthens the Next...
இலங்கையின் பெருந்தோட்டத் துறைக்கான நிகர பூச்சிய...
இலங்கையின் உயர் கல்வித் துறையின் மேம்பாட்டிற்காக...
Caltex Abimani Strengthens the Next...
STEM ක්ෂේත්රයේ අනාගත පරපුරේ කාන්තාවන්...