இலங்கையின் சுகாதார சேவையில் பத்தாண்டுகால அர்ப்பணிப்புடன் தனது பத்தாவது ஆண்டு நிறைவு செய்யும் நவலோக்க மெடிகெயார்

Share

Share

Share

Share

இலங்கையின் முன்னணி சுகாதார சேவை வழங்குனரான நவலோக்க மெடிகெயார் நிறுவனம் தனது பெருமைமிக்க 10வது ஆண்டு நிறைவை அண்மையில் கொண்டாடியது. நீர்கொழும்பு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஏழு மாடிகளைக் கொண்ட அதிநவீன நவலோக்க மருத்துவமனையில் இந்த கொண்டாட்டம் நடைபெற்றது. நீர்கொழும்பு மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவதற்காக இந்த வைத்தியசாலை நிலையம் 2014 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கடந்த தசாப்தத்தில், நவலோக்க மெடிகெயார் உயர்மட்ட மருத்துவ நிபுணர்களுடன் இணைந்து நோயாளிகளின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பரந்த அளவிலான சேவைகளை வழங்கி சுகாதாரத் தரத்தை உயர்த்துவதில் பெரும் பங்காற்றியுள்ளது. நோயாளிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு எளிதில் அணுகக்கூடிய இடத்தில் அமைந்துள்ள நவலோக மெடிகேர் மருத்துவமனை, நோயாளி நல்வாழ்வு மற்றும் ஆறுதல் ஆகியவற்றில் குறிப்பிட்ட கவனம் செலுத்தி விதிவிலக்கான பராமரிப்பு சேவைகளை வழங்கும் நம்பகமான சுகாதார மையமாக மாறியுள்ளது.

நவலோக்க மெடிகெயார் மருத்துவமனை குழுமத்தின் பத்தாவது ஆண்டு நிறைவை ஒட்டி சிறப்பு நினைவு முத்திரையும் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் பிரதி தபால் மா அதிபர் மற்றும் தபால் திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர். மேலும் இந்த தினத்தில் நவலோக்க மெடிகெயார் மருத்துவமனை குழுமத்தின் முன்னேற்றத்திற்காக பத்து வருடங்களாக முன்னுதாரணமான பங்களிப்பை வழங்கிய சிரேஷ்ட ஊழியர்களும் கௌரவக்கப்பட்டனர். பத்தாவது ஆண்டு நிறைவை ஒட்டி, நவலோக்க மெடிகெயார் மருத்துவமனை குழுமத்தின் பணிப்பாளர் சபை பல நன்கொடைகள் மற்றும் பல்வேறு நிறுவன சமூகப் பொறுப்புணர்வு திட்டங்களையும் அறிமுகப்படுத்தியது. மிகவும் பெருமையுடன் நடைபெற்ற இந்நிகழ்வு நவலோக்க மருத்துவ சேவை ஊழியர்களின் கலை நிகழ்ச்சிகளாலும் வண்ணமயமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த மருத்துவமனையில் சுமார் 75 உள்நோயாளிகளுக்கு சுகாதார சேவைகளை வழங்கக்கூடிய வசதிகளுடன் கூடிய விஸ்தரிக்கப்பட்ட இடவசதிகளும் உள்ளன. சகல வசதிகளுடன் கூடிய மருத்துவ ஆலோசனை அறைகள் மற்றும் மகப்பேறு மற்றும் குழந்தை நிலையத்தின் ஊடாக நோயாளர்களுக்கு தேவையான சேவைகளை வழங்க உறுதி பூண்டுள்ள நவலோக்க மெடிகெயார், கடந்த தசாப்தத்தில் அந்த சேவைகளின் சிறந்து விளங்குவதன் மூலம் வெற்றிகரமான வளர்ச்சியை எட்டியுள்ளது.

நோயாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான விரிவான சுகாதார சேவைகளுக்கு மேலதிகமாக, மருத்துவ நிபுணத்துவ ஆலோசகர்களைக் கொண்ட அதிநவீன முழுமையான வசதிகளுடன் கூடிய ஆய்வகத்துடன் கூடிய நவலோக்க மெடிகெயார், ஒரு தனிப்பட்ட ஆதரவுடன் ஒவ்வொரு நோயாளியின் ஆறுதல் மற்றும் நல்வாழ்வுக்காக மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் பிரத்யேக குழு செயல்படுகிறது. நோயாளிகளுக்கு துல்லியமான மற்றும் உடனடியான நோயறிதலின் முக்கியத்துவத்தை உணர்ந்து, நவலோக்க மெடிகெயாரின் அதிநவீன ஆய்வுக்கூடம் மற்றும் கதிரியக்கத் துறை நோயாளிகளுக்கு விரிவான ஆதரவை வழங்குகிறது, இது 24 மணி நேரமும் செயல்படுகிறது. பிராந்தியம் முழுவதும் மருத்துவ சேவை ஆய்வக வசதிகளுடன் மேம்பட்ட நோயறிதல் தீர்வுகள் மற்றும் உயர்ந்த சுகாதார சேவைகளை வழங்க உறுதிபூண்டுள்ள நவலோக்க மெடிகெயார், நோயாளிகளுக்கு மிக உயர்ந்த தரமான, வசதியான மற்றும் திறமையான சேவையை வழங்குவதை உறுதிப்படுத்தியுள்ளது.

நவலோக்க மெடிகெயார் (பிரைவேட்) நிறுவனத்தின் தலைவர் திரு. ஹர்ஷித் தர்மதாச, தனது 10வது ஆண்டு விழாவைப் பற்றி கூறுகையில், நீர்கொழும்பு, கம்பஹா, குருநாகல், ஹோமாகம, கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் வென்னப்புவ ஆகிய இடங்களில் நவலோக்க மருத்துவக் காப்பகத்தின் பிரதான ஆய்வுகூடங்கள் அமைந்துள்ளதோடு, இதன் மூலம் மக்களுக்குத் தேவையான சுகாதார சேவைகளை வழங்குவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சுகாதாரத் துறைக்கான எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பைக் குறிக்கும் வகையில் எமது பெருமைமிக்க 10வது ஆண்டு நிறைவைக் கொண்டாட முடிந்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். கடந்த தசாப்தத்தில், ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததன் மூலம் 5,000 பிறப்புகள் மற்றும் 20,000 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக முடித்துள்ளோம். 500க்கும் மேற்பட்ட நிபுணர்களால் வழங்கப்படும் ஆலோசனைச் சேவைகள் மூலம் நம்பகமான சுகாதார சேவை வழங்குனராக அங்கீகரிக்கப்பட்டுள்ள நவலோக்க மெடிகெயார், 3 துணை நிறுவனங்களுடன் நோயாளிகளின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய மேலும் செயல்பட்டு வருகிறது.

நவலோக்க மெடிகெயாரின் மற்றொரு தனித்துவமான சேவையானது கருத்தரிப்பு மையம் ஆகும். நோயாளிகளின் தனியுரிமையைப் பாதுகாத்து இடையூறு இன்றி வினைத்திறனான சேவையை வழங்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த கருத்தரிப்பு மையம், குழந்தைப் பெற்றெடுக்கும் பெற்றோரின் கனவை நிறைவேற்றும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நவலோக்க மருத்துவ காப்பகத்தில் உள்ள அழகு நிலையமும் இங்கு மிகவும் முக்கியமானது. அழகுக் கலையின் மூலம் அழகை அதிகரித்து, நோயாளிகளின் நம்பிக்கையை மேம்படுத்த, ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்ற சேவைகளை வழங்கி வாடிக்கையாளர்களுக்கு இணையற்ற சேவையை வழங்க நவலோக்க மெடிகெயார் நிறுவனம் உழைத்துள்ளது.

கம்பஹா மற்றும் கொழும்பு 07 கிளைகளை நிறுவியமை நவலோக்க மெடிகெயாரின் மற்றுமொரு தனித்துவமான சாதனையாகக் குறிப்பிடலாம். இதன் ஊடாக, நவலோக்க மெடிகெயார் தனது சுகாதார சேவைகளை மேலும் மேம்படுத்தி மக்களுக்கு உயர்தர சுகாதார சேவையை வழங்கும் பொறுப்பை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. நவலோக மெடிகெயார் இலங்கையில் சிறந்த சுகாதார சேவைக்கான புதிய பரிமாணங்களைத் திறந்து, பத்து வருடங்களாக அனைத்து இலங்கையர்களுக்கும் வழங்கப்படும் சேவையை மேலும் முன்னேற்றுவதற்கு தயாராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

2024 TAGS விருது வழங்கும் நிகழ்வில்...
நிலைத்தன்மையை அதிகரிப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்கு...
இலங்கையில் ஜவுளித் தொழில்துறையில் புத்தாக்கம் மற்றும்...
பாணந்துறை நகரில் தனது புதிய கிளையை...
Eva and Sri Lanka Red...
HNB கார்ட் உரிமையாளர்களுக்கான பிரத்தியேக பண்டிகைக்கால...
“மிச்செலின், அதிக மதிப்புள்ள கட்டுமான...
இலங்கையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பாடங்களை...
HNB கார்ட் உரிமையாளர்களுக்கான பிரத்தியேக பண்டிகைக்கால...
“மிச்செலின், அதிக மதிப்புள்ள கட்டுமான...
இலங்கையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பாடங்களை...
ஆடைத் துறை சார்ந்த பெண்களின் நல்வாழ்வு...