இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தை வலுப்படுத்த புதிய AI உட்கட்டமைப்பு வசதிகளை அறிமுகம் செய்தது Huawei

Share

Share

Share

Share

இலங்கையின் முன்னணி நிறுவனங்களின் முதன்மை செயல்பாட்டு அதிகாரிகள் (COOs), முதன்மை தகவல் அதிகாரிகள் (CIOs), தொழில்நுட்ப அதிகாரிகள் (CTOs) மற்றும் டிஜிட்டல் மாற்றத்திற்கான தீர்மானம் எடுப்பவர்களை ஒன்றிணைத்து ‘2026 Huawei இன்டெலிஜென்ட் ஐடி உச்சிமாநாடு’ (Huawei Intelligent IT Summit) அண்மையில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த மாநாட்டின் போது, எதிர்கால செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்கு மிகவும் பொருத்தமான டிஜிட்டல் உட்கட்டமைப்பை எவ்வாறு உருவாக்குவது என்பதில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையில் Huawei நிறுவனத்தால் நடத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு தொடர்பான முதன்மையான உச்சிமாநாடாகத் திகழும் இதன் மூலம், செயற்கை நுண்ணறிவு (AI), கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் தரவு சார்ந்த தொழில்நுட்பங்கள் எவ்வாறு நிறுவன தகவல் தொழில்நுட்பத்தின் தன்மையை மாற்றுகின்றன மற்றும் தொழில்துறை வளர்ச்சியை விரைவுபடுத்துகின்றன என்பது குறித்த கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு தகவல் மற்றும் தொடர்புத் தொழில்நுட்ப சமூகத்திற்கு ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்தது.
இதன்போது எதிர்காலத்திற்குப் பொருத்தமான 3 உட்கட்டமைப்பு தீர்வுகள் (infrastructure solutions) அறிமுகப்படுத்தப்பட்டன. செயற்கை நுண்ணறிவு கணக்கீடு (AI computing), உயர் செயல்திறன் கொண்ட தரவு வழங்கல் மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் தளங்களுக்கான அதிக தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய தீர்வாக ‘ஓஷன்ஸ்டோர் டொராடோ’ (OceanStor Dorado) அமைப்பைக் குறிப்பிடலாம். நவீன தரவுச் சேமிப்பு அமைப்பான இது, வங்கிச் செயல்பாடுகள், தரவு சேகரிப்பு மற்றும் முதன்மையான டிஜிட்டல் சேவைகள் போன்ற மிக முக்கியமான வணிக நடவடிக்கைகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் அதிவேகச் செயல்பாடு, அதிக நம்பகத்தன்மை மற்றும் சிறந்த தரவு மேலாண்மை ஆகியவற்றின் மூலம் நிறுவனச் செயல்பாடுகளை மிகவும் திறமையாகவும், உறுதியாகவும் முன்னெடுத்துச் செல்ல இது உதவுகிறது.

இந்த உச்சிமாநாட்டின் போது ‘OceanStor A800’ அமைப்பையும் காட்சிப்படுத்த Huawei நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது. இது செயற்கை நுண்ணறிவு பணிகள் மற்றும் பாரிய அளவிலான தரவுச் சூழல்களுக்காகவே உருவாக்கப்பட்ட உயர் செயல்திறன் கொண்ட தரவுச் சேமிப்புத் தளமாகும். இதன் மூலம் வணிக நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மிகப்பெரிய அளவிலான தரவுகளைத் திறம்பட நிர்வகிக்கவும், செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைப் பயிற்றுவிக்கவும் மற்றும் உயர் தரவுப் பகுப்பாய்வுப் பணிகளுக்கான ஆதரவைப் பெறவும் வாய்ப்பு கிடைக்கிறது.

மேலும், இங்கு Huawei நிறுவனம் ‘அட்லஸ் இன்டெலிஜென்ட் கம்ப்யூட்டிங்’ (Atlas Intelligent Computing) தளத்தையும் அறிமுகப்படுத்தியது. பொதுவாகச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்குத் தேவையான ஒரு முக்கிய அடிப்படையாக இந்த ‘அட்லஸ் இன்டெலிஜென்ட் கம்ப்யூட்டிங்’ தளத்தைக் குறிப்பிடலாம். நிறுவனங்களின் பணிகளுக்காகச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும் போது, அது தொடர்பான மாதிரிகளை உருவாக்கவும், அவற்றைப் பயிற்றுவிக்கவும் மற்றும் பல்வேறு துறைகளில் நுண்ணறிவுமிக்க பயன்பாடுகளைச் செயல்படுத்தவும் தேவையான உயர் கணினித் திறனை இந்தத் தளம் வழங்குகிறது.

இந்நிகழ்வில் Huawei Sri Lanka-வின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷாங் ஜின்ஸே (Zhang Jinze) கருத்து தெரிவிக்கையில், “உலகின் நவீன தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை இந்நாட்டுச் சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கு ஹூவாய் ஸ்ரீலங்கா நிறுவனம் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. உலகின் சிறந்த தொழில்நுட்பங்களை இலங்கைக்கு வழங்க முடிவது குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எமது கூட்டு முயற்சியின் ஊடாக மிகவும் வலுவான தொழில்நுட்பக் கட்டமைப்பைக் கட்டியெழுப்ப முடியும் என நாங்கள் நம்புகிறோம். தொழில்துறைகள், வணிக நிறுவனங்கள், தொழில்நுட்பக் கூட்டாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் என நாம் அனைவரும் இணைந்து செயல்படுவதன் மூலம், பொருளாதார வளர்ச்சிக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் ஆதரவளிக்கும் வலுவான டிஜிட்டல் கட்டமைப்பொன்றை உருவாக்க முடியும்.” எனக் குறிப்பிட்டார்.

முன்னணி தகவல் தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்ற ஒரு விசேட கலந்துரையாடலும் இங்கு இடம்பெற்றது. நிறுவனங்களின் டிஜிட்டல் மாற்றம், உட்கட்டமைப்பு நவீனமயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு இலங்கை நிறுவனங்களின் தயார்நிலை குறித்து அவர்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக, மேம்படுத்தக்கூடிய உட்கட்டமைப்பு, செலவு மேலாண்மை மற்றும் நம்பகமான தொழில்நுட்பத் தொடர்புகளின் அவசியம் குறித்த வாய்ப்புகளும் சவால்களும் விவாதிக்கப்பட்டன.

இலங்கை தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்துறைகளை நோக்கி நகர்ந்து வரும் விதம், இங்கு முன்வைக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் விவாதங்கள் மூலம் தெளிவாகப் புலப்பட்டது. வங்கித் துறை, தொலைத்தொடர்பு, கல்வி மற்றும் அரச துறைகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை வேகமாகப் பயன்படுத்தி வருவதால், உயர் செயல்திறன் கொண்ட கணினி அமைப்புகள் மற்றும் தரவு உட்கட்டமைப்புகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் மிகவும் முக்கியமானவை. இதன் மூலம் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 2026 உச்சிமாநாட்டின் ஊடாக நவீன வணிகத் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், இந்நாட்டின் உருமாற்றமடைந்து வரும் டிஜிட்டல் பயணத்திற்கு ஆதரவளிப்பதற்கான தனது திறனை Huawei நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன், இத்துறையிலான ஒத்துழைப்பு மற்றும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பக் கட்டமைப்பிற்குள் அறிவுப் பகிர்வை மேம்படுத்துவதற்கான வாய்ப்பும் இதன் மூலம் கிடைத்துள்ளது.

Hope Is Just a Scroll...
Hope Is Just a Scroll...
Samsung Sri Lanka 2026 අලෙවි...
වාහන සඳහා මූල්‍ය පහසුකම් සැලසීමට...
ඔබ අප කෙරෙහි තැබූ විශ්වාසය...
Dear Besties, Your Long-Weekend Plans...
රක්ෂණ ක්ෂේත්‍රයේ ශක්තිය, සහයෝගීතාව සහ...
උතුරු පළාතේ ආ¾ථික ව¾ධනයට උරදෙමින්...
Dear Besties, Your Long-Weekend Plans...
රක්ෂණ ක්ෂේත්‍රයේ ශක්තිය, සහයෝගීතාව සහ...
උතුරු පළාතේ ආ¾ථික ව¾ධනයට උරදෙමින්...
விற்பனை மற்றும் பங்களிப்பில் சிறந்து விளங்கிய...