இலங்கையின் முதல் ATM வணிகம் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியை வெற்றிகரமாக நிறைவுசெய்த KAL

Share

Share

Share

Share

இலங்கையில் அதிகரித்து வரும் முன்னணி உலகளாவிய தானியங்கி டெல்லர் இயந்திர (ATM) மற்றும் மென்பொருள் வழங்குநரான KAL, புத்தாக்கத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு தனித்துவமான கண்காட்சியை சமீபத்தில் கொழும்பில் நடத்தியது. தொழில்துறை வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்காக நடத்தப்பட்ட இந்த நிகழ்வில், நாட்டின் வங்கிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கடந்த நவம்பர் மாதத்தில் சினமன் லைஃப் ஹோட்டலில் நடைபெற்ற இந்த சிறப்பு கண்காட்சி, ATM கண்டுபிடிப்புகள் பயிற்சிப் பட்டறை மற்றும் வணிக அமர்வுகளைக் கொண்டிருந்தது, இலங்கையின் வங்கித் துறைக்கு ஏற்ப பொருத்தப்பட்ட விவாதங்களையும் இதில் நடத்தியது. இந்த விவாதங்கள் டிஜிட்டல் மாற்றம், மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு மற்றும் நவீனமயமாக்கப்பட்ட சுய-சேவை பரிவர்த்தனைகளைப் பற்றிய விவாதங்களை உள்ளடக்கியது.

இது தொடர்பாக தனது கருத்தை தெரிவித்த KAL நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. அரவிந்த அத்துகோரல, “இலங்கையில் தானியங்கி டெல்லர் இயந்திரங்களின் (ATM) நிலைத்தன்மை மற்றும் பணப்பரிமாற்ற பாதுகாப்பைப் புத்தாக்கப்படுத்துவதற்கான பரந்த நோக்கு KAL நிறுவனத்திற்கு உள்ளது. அதற்காக அடுத்த ஆண்டில் கொழும்பில் ஒரு அலுவலகத்தை திறக்க முதலீடு செய்துள்ளோம்.

தானியங்கி டெல்லர் இயந்திரத் தொழில்துறையின் எதிர்காலம் குறித்த விரிவான விவாதங்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், இலங்கையின் வங்கி மற்றும் தொழில்நுட்பத் துறையின் திறனை மதிப்பீடு செய்வதற்காக Flix11 நிறுவனத்துடன் இணைந்து இந்த சிறப்புக் கண்காட்சியை நடத்த முயன்றோம்.” என்று கூறினார்.

இலங்கைக்கான ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகர் திரு. ஆண்ட்ரூ பேட்ரிக், நிதி அணுகல், தானியங்கி டெல்லர் இயந்திரங்களின் (ATM) முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமுதாயத்தில் பணத்தின் ஆயுட்காலம் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டு, இந்த நிகழ்வில் தொடக்க உரையை ஆற்றினார்.

திரு. அரவிந்த அவர்கள், வங்கிகளின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுடன் ஒரு நிபுணர் கலந்துரையாடலை நடத்தினார். இந்தக் கலந்துரையாடலில், தானியங்கி டெல்லர் இயந்திர (ATM) போக்குகள், சவால்கள் மற்றும் வாய்ப்புகள் மற்றும் இலங்கை சந்தையின் நுணுக்கங்களை ஆய்வு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. பணத்தின் பயன்பாடு, இணைப்பில்லாத ஒருங்கிணைப்பு மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட வாடிக்கையாளர் அனுபவங்கள் போன்ற தலைப்புகளும் இந்த அமர்வில் இடம்பெற்றன.

பங்கேற்ற பிரதிநிதிகளுக்கு, தானியங்கி டெல்லர் இயந்திரங்கள் (ATM), வாடிக்கையாளர் டெல்லர் இயந்திரங்கள் (RTM) மற்றும் விற்பனைப் புள்ளி (POS) கருவிகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் மென்பொருட்களின் நேரடி செயல்மு விளக்கங்களைக் காணும் வாய்ப்பும் கிடைத்தது.

இந்த சிறப்புக் கண்காட்சியின் மூலம், KAL தொழில்துறை ஒத்துழைப்புக்கு பங்களிப்பதன் மூலம், விரிவான தீர்வுகளை வழங்குவதன் மூலம் மற்றும் டிஜிட்டல் மாற்றத்தை ஊக்குவிப்பதன் மூலம் இலங்கையின் தானியங்கி டெல்லர் இயந்திர மற்றும் வங்கி நிபுணர்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கையில் தனது இருப்பை மேலும் வலுப்படுத்தி முதலீடுகளை அதிகரித்து வரும் KAL, நாட்டின் தானியங்கி டெல்லர் இயந்திரங்களை நவீனமயமாக்குவதற்கும் சுய-சேவை கண்டுபிடிப்புகளை வழிநடத்துவதற்கும் வங்கிகளுக்குத் தேவையான ஆதரவை வழங்கும் முன்னணிச் சேவையாக இருக்கும்.

KAL தொடர்பில்
1989 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட KAL ATM மென்பொருள், சவுதி அரேபியா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் சேவைகளை வழங்கும் ஒரு முன்னணி உலகளாவிய மென்பொருள் நிறுவனமாகும். அனைத்து தானியங்கி டெல்லர் இயந்திரங்களுக்கும் (ATM) மற்றும் சிக்கல்களைக் கொண்ட தானியங்கி டெல்லர் இயந்திர வலையமைப்புகளுக்கும் தீர்வுகளை வழங்கும் திறன் கொண்ட இந்த நிறுவனம், ஒவ்வொரு டெல்லர் இயந்திரத்தின் கட்டுப்பாட்டையும் வங்கிகளுக்கு வழங்குகிறது. இது செலவைக் குறைத்தல், செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் போட்டித்திறனை அதிகரிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
மேலதிக தகவல்களுக்கு www.kal.com என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிக்கவும்.

පාම් තෙල් විරෝධය, විශ්වාස සහ...
2026 ආධුනික වයස් කාණ්ඩ පිහිනුම්...
இலங்கையின் எதிர்காலத்தை நோக்கி களம் அமைக்கும்...
இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம் Rebuilding...
කොකා-කෝලා පදනම සහ සේවාලංකා පදනම...
Advice Lab Unveils New 13,000+...
du Signs Three-Year Agreement with...
2025 වසරේ දෙසැම්බර් මාසයේ දී...
Advice Lab Unveils New 13,000+...
du Signs Three-Year Agreement with...
2025 වසරේ දෙසැම්බර් මාසයේ දී...
2025 டிசம்பரில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி...