இலங்கை இளைஞர்களை அறிவியல், தொழில்முனைவு மற்றும் TikTok மூலம் வலுப்படுத்தும் ‘சஞ்சய எல்விடிகல’

Share

Share

Share

Share

இன்று வரை வெறும் பொழுதுபோக்கு தளமாக பயன்படுத்தப்பட்ட TikTok, தற்போது அறிவைப் பகிர்ந்து கொள்ளும் தளமாக மாறியுள்ளது என்பது இரகசியமல்ல. பொழுதுபோக்குடன் கல்வியை இணைத்து உருவாக்கப்பட்ட ‘EduTok’ அதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். அதன் காரணமாகவே, இத்தகைய உள்ளடக்கங்களை TikTok இல் சேர்க்கும் சிறப்பு படைப்பாளிகள் பலர் உருவாகி வருவதை காண முடிகிறது. அறிவியல், தொழில்முனைவு மற்றும் ‘EduTok’ உள்ளடக்கங்களை உருவாக்கி, இலங்கை இளைஞர்களை அறிவால் வலுப்படுத்த முயற்சிக்கும் சஞ்சய எல்விடிகலவை அத்தகைய படைப்பாளி என குறிப்பிடலாம்.

அறிவியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பாடங்களில் தொழில்நுட்ப அறிவு கொண்ட சஞ்சய, தனது அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முன்னர் பல்வேறு வழிமுறைகளை முயற்சித்தாலும், அதற்கு செலவிடும் நேரமும், உழைப்பும் அவருக்கு பெரும் பிரச்சினையாக இருந்தது. இவை அனைத்திற்கும் சிறந்த தீர்வாக TikTok சமூக ஊடகத் தளம் அமைந்தது. அதன் மூலம் அவர் பகிர்ந்த அறிவை ஆராய பெரும் கூட்டம் அவருடன் இணைந்துள்ளதால், இன்று அது இலங்கை இளைஞர்களிடையே மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பிரபலமான டிஜிட்டல் வணிகமாக மாறியுள்ளது.

இதில் சஞ்சய அதிக கவனம் செலுத்தியது எளிய கருத்தின் மூலம் பார்வையாளர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதற்காகும். குறிப்பாக குறைந்த இணைய இடத்தில் அதிக கருத்துக்களை வழங்குவதற்காக தனது உள்ளடக்கங்களை உருவாக்கிய சஞ்சய, தனது தேவையை சிறப்பாக பூர்த்தி செய்து கொண்டார்.

‘மிக குறுகிய வீடியோ மூலம் அதிக கருத்துக்களை பார்வையாளர்களுக்கு வழங்க விரும்பினேன். எனக்கு அதற்கான பின்னணியை உருவாக்குவதற்கான தேவை இருக்கவில்லை. எனது கையடக்கத் தொலைபேசி மூலம் அதை மிகவும் வெற்றிகரமாக செய்ய முடிந்ததால், எனது கருத்துக்களை இலக்காகக் கொண்ட பயனர்களுக்கு எளிதாக வழங்க முடிந்தது’ என அவர் தெரிவித்தார்.

சஞ்சயவின் TikTok வீடியோக்களின் சிறப்பம்சம் அதன் வடிவமைப்பாகும். விரைவான மற்றும் அதிக தாக்கம் கொண்ட படைப்பின் மூலம் பார்வையாளர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வழங்கப்பட்டுள்ள இந்த படைப்புகளை அதே நடைமுறையில் தொடர்ந்து கொண்டு செல்வது சஞ்சயவின் நோக்கமாகும். அறிவியல் போன்ற சிக்கலான பாடத்தை மிக எளிமையாக இளைஞர்களுக்கு கொண்டு செல்வது சவாலாக இருந்தாலும், அதை மிக எளிதாகவும் படைப்பாற்றலுடனும் அவர்களுக்கு கொண்டு செல்ல சஞ்சயவால் முடிந்துள்ளது.

வெறும் பொழுதுபோக்கு படைப்புகளை வழங்குவதை விட கல்வி முக்கியத்துவம் வாய்ந்த படைப்புகளை வழங்க அர்ப்பணிப்புடன் செயல்படும் சஞ்சய, அதன் மூலம் தனக்கென ஒரு தனித்துவமான பார்வையாளர் சமூகத்தை உருவாக்கி வெற்றி பெற்றுள்ளார். குறிப்பாக மாணவர்கள், தொழில்முறை வல்லுநர்கள் போன்ற புதிய விடயங்களை கற்க ஆர்வம் காட்டுபவர்கள் சஞ்சயவின் படைப்புகளை அதிகளவில் பயன்படுத்த முன்வந்துள்ளனர்.

தனது வெற்றிப் பயணம் தொடர்பில் சஞ்சய கருத்து தெரிவிக்கையில், ‘நான் தொழில்முனைவு அல்லது தொழில்நுட்பம் பற்றிய படைப்புகளை வெளியிடும் போது, பயனர்கள் அவற்றை மிகுந்த ஆர்வத்துடன் பார்க்கிறார்கள். அதேபோல் அவற்றை பின்பற்றும் முறை குறித்து விசாரிக்கிறார்கள். வணிகங்களை உருவாக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள். எனவே TikTok எனது கருத்துக்களை பகிர்வதற்கு மட்டுமல்லாமல் அவர்களை ஊக்குவிக்கவும் வாய்ப்பளித்துள்ளது’ என தெரிவித்தார்.

இன்று சஞ்சய மிகச் சிறிய அளவில் தொடங்கிய படைப்பாக்கம் பெரிய விடயமாக மாறியுள்ளது, எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களை விழிப்புணர்வூட்டவும், பரந்த பார்வையாளர்களை சென்றடையவும் வாய்ப்பளித்துள்ளது. கல்வி நிறுவனத்தின் படைப்பாளராக சஞ்சய தனது வர்த்தகநாமத்தை மேம்படுத்திக் கொள்ளவும் இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. அதனால்தான் தொடர்ந்து தனது திறமைகளை மேம்படுத்திக் கொண்டு படைப்புகளை வழங்க சஞ்சய முயற்சிக்கிறார். தனது முதல் பிரதியை மற்ற படைப்பாளர்கள் நகலெடுக்கக் கூடாது என்று சஞ்சய கூறுகிறார். அப்படி செய்தால் பார்வையாளர்கள் தங்கள் படைப்புகளை பாராட்டுவார்கள் என்று அவர் கூறுகிறார்.

இலங்கையில் அறிவியல் தொடர்பான அர்த்தமுள்ள எதிர்காலத்தை உருவாக்க சஞ்சய செயல்பட்டு வருகிறார். அத்தகைய படைப்பாளர்கள் வுமைவுழம தளத்தில் அதிகம் இல்லாததால் மேலும், பலருக்கு அறிவியல் தொடர்பான வணிகத்தை உருவாக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. இலங்கையில் TikTok இல் அறிவியல் தொடர்பான உள்ளடக்கங்கள் இன்னும் வளர்ச்சியடையாத நிலையில் இருந்தாலும் அது மாறி வருவதாக சஞ்சய கூறுகிறார். கற்க ஆர்வமுள்ளவர்களுக்கு கவர்ச்சிகரமான முறையிலும் அனைவரும் அணுகக்கூடிய வகையிலும் வழங்குவதன் மூலம் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும். TikTok இன் தாக்கம் தொடர்ந்து இருப்பதால் மேலும் பல படைப்பாளர்கள் எதிர்கால தலைமுறையினரை விழிப்புணர்வூட்ட படைப்புகளை வழங்குவார்கள் என்று கூறும் சஞ்சய, இலங்கை இளைஞர்களை விழிப்புணர்வூட்ட தொடர்ந்து தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.

இலங்கை பெருந்தோட்டத் துறையின் ஒளிமயமான எதிர்காலம்
இலங்கையர்களின் புன்னகைக்கு வலுவூட்டும் DENTA வின்...
ඩෙන්ටා, සුන්දර සිනාවක් සහිත අනාගත...
Sunshine Foundation for Good 20...
බැංකුවේ වර්ධනය සහ නව්‍ය ප්‍රවේශයන්...
විද්‍යාව, ව්‍යවසායකත්වය හා TikTok සමඟ...
ශ්‍රී ලාංකේය වැවිලි කර්මාන්තයේ දීප්තිමත්...
සමාජයේ අත් දකින ගැටලු පිළිබඳ...
විද්‍යාව, ව්‍යවසායකත්වය හා TikTok සමඟ...
ශ්‍රී ලාංකේය වැවිලි කර්මාන්තයේ දීප්තිමත්...
සමාජයේ අත් දකින ගැටලු පිළිබඳ...
ශ්‍රී ලංකාව තුළ රෙදිපිළි කර්මාන්තයේ...