இலங்கை முழுவதும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு சிறிய POS இயந்திரங்களை வழங்குவதன் மூலம் டிஜிட்டல் மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் HNB

Share

Share

Share

Share

இலங்கையின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான HNB, நாடு முழுவதும் உள்ள பல சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு (SMEs) சிறிய POS (Point-of-Sale) சாதனங்களை வழங்கி அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளது. இந்த முயற்சி, சிறு வணிகங்களின் வளர்ச்சிக்கும் டிஜிட்டல் மாற்றத்திற்கான அணுகலுக்கும் உதவுவதன் மூலம் HNB இன் உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

இந்த POS இயந்திரங்கள் சிறிய மற்றும் குறைந்த செலவில் செயல்படும் சாதனங்களாகும், இவை குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்காக (SMEs) வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை வணிகங்களுக்கு கார்ட் மூலம் கொடுக்கல் வாங்கல்களை செயல்படுத்த உதவுகின்றன. மேலும், இந்த POS சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம், வணிக உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கான கொடுப்பனவு செயல்முறையை எளிதாக்கலாம், தினசரி செயல்பாடுகளை மேலும் முறைப்படுத்தி நிர்வகிக்கலாம் மற்றும் இன்று விரைவாக மாறும் சந்தையில் மற்ற வணிகங்களுடன் போட்டியிடுவதற்கு முடியும்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த HNB கார்ட் பிரிவு தலைவரான கௌதமி நிரஞ்சனி, “சிறு வணிகங்களின் வளர்ச்சிக்கு உதவுவது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கியம் என்று HNB நம்புகிறது. இந்த சாதனங்களின் மூலம், சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் டிஜிட்டல் கொடுப்பனவு முறைக்கு மாற்றம் செய்ய முடியும். இது அவர்களின் போட்டித்திறன் மற்றும் நிலைத்திருக்கும் திறனை மேம்படுத்தி, வணிக உலகின் மாற்றங்களை சிறப்பாக சமாளிக்க உதவும். மேலும், பணமில்லா பொருளாதாரத்தை உருவாக்குவதற்கும், உள்நாட்டு தொழில்முனைவோருக்கு வெற்றிபெற உதவுவதற்கும் HNB அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்பதையும் இது வலியுறுத்துகிறது” என கூறினார்.

இந்த திட்டத்தின் நேர்மறையான தாக்கம் ஏற்கனவே சிறு வணிக உரிமையாளர்கள் இந்த POS சாதனங்களைப் பயன்படுத்தும் விதத்தில் தெரிகிறது. ஒரு வணிக உரிமையாளர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில், “HNB இந்த சிறிய POS இயந்திரம் என் வணிகத்தை முற்றிலும் மாற்றியுள்ளது. இப்போது நான் கார்ட் கொடுப்பனவுகளை ஏற்க முடிகிறது, இது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது மற்றும் எனது விற்பனையை அதிகரிக்கவும் உதவியுள்ளது. மேலும், இது மலிவு விலையில் கிடைத்ததுடன் பயன்படுத்தவும் எளிதானது. பெரிய நிறுவனங்களுடன் போட்டியிட இந்த POS இயந்திரம் எனக்கு உதவியுள்ளது. இதுபோன்ற சிறு வணிகங்களுக்கு ஒத்துழைப்பதற்காக HNBக்கு நான் உண்மையிலேயே நன்றி கூறுகிறேன்.” என தெரிவித்தார்.

இந்த வெற்றி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் புதிய முன்மொழிவுகளை முன்வைக்கும் போது HNB முன்னணியில் நிற்கிறது என்பதைக் காட்டுகிறது. சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு டிஜிடல் கொடுப்பனவுகளை செயல்படுத்தும் வசதியை வழங்குவதன் மூலம், HNB இலங்கை முழுவதும் பரவியுள்ள வணிகங்களுக்கு நிலையான வளர்ச்சியை உருவாக்குவதில் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

පාම් තෙල් විරෝධය, විශ්වාස සහ...
2026 ආධුනික වයස් කාණ්ඩ පිහිනුම්...
இலங்கையின் எதிர்காலத்தை நோக்கி களம் அமைக்கும்...
இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம் Rebuilding...
කොකා-කෝලා පදනම සහ සේවාලංකා පදනම...
Advice Lab Unveils New 13,000+...
du Signs Three-Year Agreement with...
2025 වසරේ දෙසැම්බර් මාසයේ දී...
Advice Lab Unveils New 13,000+...
du Signs Three-Year Agreement with...
2025 වසරේ දෙසැම්බර් මාසයේ දී...
2025 டிசம்பரில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி...