இலங்கை SOS சிறுவர் கிராமங்கள் உடனான பங்காண்மையை வலுப்படுத்தி 80 இளைஞர்களை வலுவூட்டுவதனூடாக தொழிற்பயிற்சிக்கு 3.2 மில்லியன் ரூபாயை HNB முதலீடு செய்கின்றது

Share

Share

Share

Share

05 ஒக்டோபர் 2026, கொழும்பு: ஹற்றன் நஷனல் வங்கி (HNB), இலங்கை SOS சிறுவர் கிராமங்கள் உடனான தனது நீண்டகால பங்காண்மையை மேலும் வலுப்படுத்தியுள்ளதுடன், யாழ்ப்பாணம் மற்றும் மல்பொத்த ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள SOS தொழிற்பயிற்சி நிலையங்களைச் சேர்ந்த 80 இளைஞர்களின் தொழிற்பயிற்சி மற்றும் தொழில்முறை மேம்பாட்டிற்காக 3.2 மில்லியன் ரூபாயை நிதியுதவியாக வழங்க முன்வந்துள்ளது.

உள்ளூர் இளைஞர்கள் வேலைவாய்ப்புகளுக்கும் சுதந்திரமான முதிர்ந்த வாழ்க்கை நிலைகளுக்கும் மாறுவதற்கு தொழிற்கல்வித் திறன்களின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள இலங்கை SOS சிறுவர் கிராமங்கள், நடைமுறைச் சாத்தியமான, வேலைவாய்ப்பை மையமாகக் கொண்ட பயிற்சி, தொழில் மேம்பாடு மற்றும் பணியிடத் தயார்நிலை ஆகியவற்றை வழங்கும் தொழிற்பயிற்சி நிலையங்களை நடத்தி வருகின்றது. இந்த அர்ப்பணிப்பின் தொடர்ச்சியாக, ஹற்றன் நஷனல் வங்கியுடனான இப்பங்காண்மையானது இளைஞர்களுக்கான வாய்ப்புகளை மேலும் வலுப்படுத்துவதுடன், அர்த்தமுள்ள வேலைவாய்ப்புகளைப் பின்தொடரவும், உயரிய நிதிச் சுதந்திரத்தை அடையவும், நிலையான வாழ்வாதாரங்களைக் கட்டியெழுப்பவும் தேவையான திறன்களையும் நம்பிக்கையையும் அவர்களுக்கு வழங்கும்.

இலங்கை SOS சிறுவர் கிராமங்களின் தேசிய பணிப்பாளர் திவாகர் ரட்னதுரை கருத்துத் தெரிவிக்கையில், “இளைஞர்களுக்கு தொழில்நுட்பத் திறன்களுக்கு அப்பால் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குமான பாதைகளை தொழிற்பயிற்சி வழங்குகின்றது. இது வேலைவாய்ப்பு மற்றும் சுதந்திரமான வாழ்க்கையை நோக்கி அர்த்தமுள்ள அடிகளை எடுத்து வைப்பதற்குத் தேவையான நம்பிக்கை, பணியிடத் தயார்நிலை மற்றும் நடைமுறைச் சாத்தியமான திறன்களை அவர்களுக்கு அளிக்கிறது. இளைஞர்கள் வலுவான மற்றும் மிகவும் நிலையான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஏதுவான வாய்ப்புகளை உருவாக்குவதில் HNB இன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும், அவ்வங்கியுடனான எங்களது நீண்டகால பங்காண்மையையும் நாம் பெரிதும் மதிக்கின்றோம்.” என்றார்.
இளைஞர்கள் சுதந்திரமான முதிர்ந்த வாழ்க்கை நிலைக்குத் தேவையான திறன்களையும் தகுதிகளையும் வளர்த்துக் கொள்ளும் போது அவர்களுக்கு ஆதரவளிப்பதில், இலங்கை SOS சிறுவர் கிராமங்கள் வகிக்கும் பரந்த பங்கை இந்த முன்முயற்சி மேலும் வலுப்படுத்துகின்றது.

1981 ஆம் ஆண்டு முதல், இலங்கை SOS சிறுவர் கிராமங்கள், பெற்றோர் அரவணைப்பை இழந்த குழந்தைகளுக்காக நீண்டகால குடும்பச் சூழல் போன்ற பாதுகாப்பையும், குடும்ப வலுவூட்டல் திட்டங்கள் ஊடாக பெற்றோர் அரவணைப்பை இழக்கும் அபாயத்திலுள்ள குழந்தைகளுக்கு ஆதரவையும் வழங்கி வருகின்றது. இன்று, இவ்வமைப்பு ஆறு சிறுவர் கிராமங்கள், 11 இடங்களில் குடும்ப வலுவூட்டல் திட்டங்கள், மற்றும் அனுராதபுரம், மொனராகலை, யாழ்ப்பாணம், மல்பொத்த ஆகிய பகுதிகளில் நான்கு தொழிற்பயிற்சி நிலையங்கள் என்பவற்றை இயக்கி வருகின்றமையோடு, குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு அரவணைப்பு, பாதுகாப்பு மற்றும் அவர்களின் எதிர்காலத்திற்கான திறன்களை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புகளையும் வழங்கி ஆதரவளிக்கின்றது.

இப் பங்காண்மையின் மூலம், HNB யும், இலங்கை SOS சிறுவர் கிராமங்களும் இளைஞர்களின் உயரிய சுதந்திரம், வேலைவாய்ப்புத் திறன் மற்றும் நிலையான வாழ்வாதாரங்களுக்கான அவசியமான திறன் மேம்பாட்டில் முதலீடு செய்வதோடு, வறுமையின் சுழற்சியை உடைத்தெறிவதற்கான திறன்களையும் கட்டியெழுப்புகின்றன.

TikTok மூலம் கொழும்பின் மறைந்திருக்கும் உணவு...
ඩිජිටල් යුගයේ තාරුණ්‍ය ආරක්ෂා කර...
Samsung இன் Dialog Finance Lesi...
Samsung, Dialog Finance හි පහසු...
MAS Recognised for Environmental Leadership...
Peugeot and TotalEnergies 30-Year Global...
கொழும்பு துறைமுகத்தின் கட்டண விதிகளை மாற்றுவதற்கு...
වෘත්තීය කුසලතා වර්ධනය උදෙසා අධ්‍යාපනය...
Peugeot and TotalEnergies 30-Year Global...
கொழும்பு துறைமுகத்தின் கட்டண விதிகளை மாற்றுவதற்கு...
වෘත්තීය කුසලතා වර්ධනය උදෙසා අධ්‍යාපනය...
யாழ்ப்பாணத்தில் ‘பந்தம்’ வாடிக்கையாளர் மற்றும் விநியோகஸ்தர்...