உணவுத் தொழில் வல்லுநர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வை நடத்திய HNB

Share

Share

Share

Share

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, உணவுப் பாதுகாப்பு தரங்களை உயர்த்துவதற்கும் ஏற்றுமதி துறையை வலுப்படுத்துவதற்குமான குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, உணவு தொழில் வல்லுநர்களுக்கான Preventive Controls தகுதி பெற்ற தனிநபர் (PCQI) பயிற்சிப் பாடநெறியை முடித்த பங்கேற்பாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வை அண்மையில் நடத்தியது.

HNB வழங்கும் சான்றிதழ் அளிக்கும் நிகழ்வு, ஒழுங்குமுறைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமன்றி இலங்கையின் ஏற்றுமதி நற்பெயரை உயர்த்துவதற்கும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இலங்கையின் தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்துடன் (NCE) இணைந்து நடத்தப்பட்ட இந்த சிறப்புப் பயிற்சித் திட்டம், உணவுத் துறையில் Preventive Controls நடைமுறைப்படுத்தத் தேவையான நிபுணத்துவத்துடன் தனிநபர்களை தயார்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. சான்றிதழானது ஒரு ஒழுங்குமுறைத் தேவை மட்டுமல்ல, உணவு ஏற்றுமதியில் தரம் மற்றும் பாதுகாப்புக்கான இலங்கையின் அர்ப்பணிப்புக்கான சான்றாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

HNB மற்றும் NCE இடையேயான இந்த ஒத்துழைப்பு, இலங்கை பொருளாதாரத்தை ஆதரிப்பதற்கான அவர்களின் உறுதியை பிரதிபலிக்கிறது. குறிப்பாக ஏற்றுமதித் துறையில் இயங்கும் வணிகங்களின் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு HNB உறுதிபூண்டுள்ளது. NCE, இலங்கையில் ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்கும் பிரத்தியேக ஒரு அமைப்பாக செயற்படுவதுடன், HNB இல் ஒரு இயற்கையான கூட்டாளியைக் கண்டறிந்து, அவர்களின் விரிவான நிதித் தயாரிப்புகள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்ற சேவைகளை வழங்குகிறது.

“ஏற்றுமதி துறையில் வணிகங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் உறுதியாக உள்ள ஒரு வங்கி என்ற வகையில், வெளிநாட்டு நாணயத்தை ஈட்டுவதற்கு மட்டுமல்லாமல், நாட்டின் மனித வளர்ச்சி திறனை வளர்ப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை உணர்ந்துள்ளோம். இலங்கையின் உற்பத்திகள் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரத்திற்கேற்ப உற்பத்தி செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளதால், நாட்டின் மனித அபிவிருத்தி திறனை வளர்ப்பதில் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன.” என HNB மொத்த வங்கிக் குழுமத்தின் பிரதிப் பொது முகாமையாளர் தமித் பல்லேவத்த, பெறுமதி சேர்ப்பதிலும் தரத்தை மேம்படுத்துவதிலும் சான்றிதழ்களின் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டினார்.

உலகளாவிய சான்றிதழில் தர சான்றிதழின் இன்றியமையாத பங்கு குறித்து கருத்து தெரிவித்த NCE தலைவர் ஜயந்த கருணாரத்ன, “சர்வதேச சந்தைகளில் இலங்கையை ஒரு வலிமைமிக்க ஒரு நாடாக நிலைநிறுத்துவதற்கும், ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக மாறுவதற்கான நமது தூரநோக்கு பார்வைக்கு பங்களிப்பதற்கும் சான்றிதழ்கள் முக்கியம்.” என தெரிவித்தார்.

HNB மற்றும் NCE இடையேயான கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தி, சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் செயலாளர் நாயகமுமான ஷிஹாம் மரிக்கார், சர்வதேச வர்த்தகத்தில் வளர்ந்து வரும் போக்கை பிரதிபலிக்கும் வகையில், மொத்த ஏற்றுமதியை விட மதிப்பு கூட்டலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

அமெரிக்காவின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் ஒரு முக்கியப் பகுதியான உணவுப் பாதுகாப்பு நவீனமயமாக்கல் சட்டத்தின் (FSMA) கீழ் அதன் பொருத்தம் காரணமாக PCQI பயிற்சி நெறி முக்கியத்துவம் பெற்றுள்ளது. உணவு உற்பத்தி, பதப்படுத்துதல் மற்றும் கையாளுதல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள சில பணியாளர்கள் அமெரிக்க சந்தைக்கான உணவுப் பொருட்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக PCQI சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் என்று இந்த சட்டம் வலியுறுத்துகிறது.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திற்கு (FDA) இணங்கி அமெரிக்க சந்தைக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

nVentures Emerges as Sri Lanka’s...
Sri Lanka’s Textile and Apparel...
Sunshine Holdings reports 11.6% YoY...
C Rugby තරඟාවලියට සියල්ල සූදානම්...
நிலையான வணிகத்தை வலுப்படுத்த, ஐரோப்பிய ஒன்றியத்தின்...
இலங்கையின் ஜவுளி மற்றும் ஆடைத் துறையானது...
மீளவும் C Rugby சுற்றுத்தொடர்! கோலாகலத்திற்கு...
Bring home Samsung’s 32-inch HD...
இலங்கையின் ஜவுளி மற்றும் ஆடைத் துறையானது...
மீளவும் C Rugby சுற்றுத்தொடர்! கோலாகலத்திற்கு...
Bring home Samsung’s 32-inch HD...
HNB Finance இன் “திரியென் தியுனுவட்ட...