உண்மையான உள்ளடக்கத்தையும், AI உள்ளடக்கத்தையும் அடையாளம் காண TikTok இனால் புதிய அம்சங்கள் அறிமுகம்

Share

Share

Share

Share

செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் உள்ளடக்கங்கள் குறித்த முழு வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் TikTok புதிய அம்சங்களை அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் AI உள்ளடக்கங்களை எளிதாக கண்டறியலாம், தங்கள் For You பக்கத்தில் இதுபோன்ற உள்ளடக்கங்கள் எவ்வளவு காட்டப்பட வேண்டும் என்பதை கட்டுப்படுத்தலாம், மேலும் AI தொழில்நுட்பத்தை பொறுப்புடன் கையாள்வது பற்றிய விழிப்புணர்வும் பெறலாம உலகம் முழுவதும் AI மூலம் தயாரிக்கப்படும் உள்ளடக்கங்கள் வேகமாக பெருகி வரும் இந்த காலகட்டத்தில், படைப்பாற்றலையும் பாதுகாப்பையும் சமநிலையில் வைத்து பயனர்களுக்கு முழு கட்டுப்பாட்டை வழங்குவதில் TikTok முன்னணி நிறுவனமாக செயல்பட விரும்புகிறது.

இந்த திட்டத்தின் படி, எதிர்வரும் வாரங்களில் TikTok தனது ‘Manage Topics’ அமைப்புகளில் ஒரு புதிய AI உள்ளடக்க கட்டுப்பாடு வசதியை சோதனை முறையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. தற்போது பயனர்கள் தங்களுக்கு பிடித்த தலைப்புகளின் அடிப்படையில் உள்ளடக்கங்களின் அளவை சரிசெய்வது போல், இனி AI மூலம் உருவாக்கப்படும் உள்ளடக்கங்களின் அளவையும் கட்டுப்படுத்த முடியும்.

இது உள்ளடக்கத்தை முற்றிலும் நீக்கும் வசதி அல்ல, மாறாக ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்திற்கேற்ப அனுபவத்தை தனிப்பயனாக்கிக் கொள்ளும் கருவி. AI படைப்புகள் அல்லது கல்வி சார்ந்த உள்ளடக்கங்களை விரும்புபவர்கள் அதிகமாகவும், விரும்பாதவர்கள் குறைவாகவும் பார்க்கும் வகையில் அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம். இந்த தேர்வு சுதந்திரம் மூலம் பயனர்கள் தங்கள் எதிர்பார்ப்புகளுக்கும் விழுமியங்களுக்கும் ஏற்ற உள்ளடக்கங்களை தாங்களே தீர்மானிக்க முடியும் என்பதே TikTok-இன் நோக்கம்.

TikTok, செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் வீடியோக்களை அடையாளப்படுத்தும் முறையை மேலும் வலுப்படுத்தி வருகிறது. தற்போது உள்ளடக்க உருவாக்குநர்கள் யதார்த்தமான AI உள்ளடக்கங்களை கட்டாயமாக வெளிப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை இந்த தளம் விதித்துள்ளது. இதற்காக மூன்று வழிமுறைகளை TikTok பின்பற்றுகிறது: படைப்பாளிகளின் நேரடி அறிவிப்புகள், நிறுவனத்தின் சொந்த கண்டறிதல் தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச தொழில்துறை தரநிலைகள். இவற்றில் C2PA Content Credentials என்ற தொழில்துறை தரநிலை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த தொழில்நுட்பம் ஒவ்வொரு டிஜிட்டல் கோப்பிலும் அதன் தோற்றுவாய் தகவல்களை உட்பொதிக்கிறது. இதன் மூலம் C2PA தரநிலையை ஆதரிக்கும் எந்த தளமும் அந்த உள்ளடக்கம் எப்போது, எவ்வாறு உருவாக்கப்பட்டது அல்லது திருத்தப்பட்டது என்பதை துல்லியமாக கண்டறிய முடியும். இந்த அமைப்புகளின் உதவியுடன் TikTok இதுவரை 1.3 பில்லியனுக்கும் அதிகமான வீடியோக்களில் AI குறியீடுகளை வெற்றிகரமாக இணைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பகத்தன்மையை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், TikTok தனது கருவிகள் மூலம் உருவாக்கப்படும் AI உள்ளடக்கங்கள் மற்றும் C2PA சான்றிதழ்களுடன் பதிவேற்றப்படும் உள்ளடக்கங்களில் “invisible watermark” பதிக்க தொடங்கவுள்ளது. இது தளத்தால் மட்டுமே படிக்கக்கூடிய ஒரு மறைமுக சிக்னலாகும். இது பார்வையாளர்களுக்கு புலப்படாத வகையில் ஊடகத்தின் உள்ளே உட்பொதிக்கப்படுகிறது. வீடியோக்கள் மீண்டும் பதிவேற்றப்படும்போது அல்லது திருத்தப்படும்போது வெளிப்படையான லேபிள்கள் அல்லது metadata நீக்கப்பட்டாலும், TikTok தனது சரிபார்ப்பு அமைப்புகள் மூலம் இந்த watermark-ஐ கண்டறிந்து படிக்க முடியும் என்பது இதன் சிறப்பு. கண்ணுக்குத் தெரியாத முறையில் பதிக்கப்படுவதால், தவறான நோக்கம் கொண்டவர்கள் வெளிப்படையான குறியீடுகளை விட இதை நீக்குவது அல்லது மாற்றுவது மிகவும் கடினம். இதன் மூலம் TikTok உள்ளடக்கங்களின் திருத்தங்கள் மற்றும் மாற்றங்கள் குறித்த தகவல்களை தொடர்ந்து பராமரிக்கவும், மீண்டும் பதிவேற்றங்களின் போதும் துல்லியமான அமலாக்கத்தையும் பயனர் தகவலையும் வழங்கவும் உதவுகிறது.

TikTok அறிவித்துள்ள இப்புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள், நிறுவனம் நம்பகமான AI தொழில்நுட்பத்தில் மேற்கொண்டு வரும் விரிவான முதலீடுகளின் தொடர்ச்சியாகும். மக்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்த உதவும் கருவிகள் முதல், தளத்தில் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதிப்படுத்தும் AI அமைப்புகள் வரை பல்வேறு பகுதிகளில் TikTok செயல்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் நிலையில், மேலும், செயற்கை ஊடகங்களை பொறுப்புடன் கையாளும் முறைகளை வளர்க்க மற்ற தொழில்துறை நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் நிலையில், TikTok தொடர்ச்சியான தகவல் புதுப்பிப்புகளை பகிர்ந்து கொள்ளும் என்று தெரிவித்துள்ளது.

The Global STEM Surge: Sri...
අධ්‍යාපන ඩිජිටල්කරණයේ පරිවර්තනීය අනාගතය
2025இல் இலங்கையர்களால் TikTok-இல் அதிகம் தேடப்பட்ட...
Healthguard Distribution achieves ISO 9001:2015...
The fifth pillar of STEM:...
பாதுகாப்பான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல்...
ශ්‍රී ලංකාවේ තේ කර්මාන්තය මධ්‍ය...
Golden Valleysஇல் இருந்து பசுமை எதிர்காலம்...
பாதுகாப்பான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல்...
ශ්‍රී ලංකාවේ තේ කර්මාන්තය මධ්‍ය...
Golden Valleysஇல் இருந்து பசுமை எதிர்காலம்...
2025 “CMA விரிவாக்கப்பட்ட வருடாந்திர அறிக்கை...