உலகப் பெருங்கடல் தினத்தை முன்னிட்டு விசேட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாரத்தைக் கொண்டாடும் City of Dreams இன் “The Shoppes”

Share

Share

Share

Share

உலகப் பெருங்கடல் தினத்தை முன்னிட்டு, ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா’ (City of Dreams Sri Lanka) இல் அமைந்துள்ள The Shoppes வணிக வளாகம், பெருங்கடல்களின் அழகு, அற்புதம் மற்றும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கில் விசேட வார இறுதி நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது. ஜூன் மாதத்தில் நடத்தப்படவுள்ள இந்த நெஞ்சைக் கவரும் நிகழ்வில் பங்கேற்குமாறு சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் கடல்சார் ஆர்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முன்னணி கடல்சார் பாதுகாப்பு அமைப்பான ‘தி பேர்ல் புரொடெக்டர்ஸ்’ (The Pearl Protectors) உடன் இணைந்து, 2026 உலகப் பெருங்கடல் தினத்தை முன்னிட்டு ஜூன் 6 மற்றும் 7 ஆகிய திகதிகளில் இந்த விசேட கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன. இதன்போது, கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஊடாடும் பயிற்சிப் பட்டறைகள், நேரடி கலை நிகழ்வுகள் மற்றும் குடும்பங்கள் இணைந்து பங்கேற்கக்கூடிய பல்வேறு சுவாரஸ்யமான சுவாரசியமான அங்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கல்வியையும், பொழுதுபோக்கையும் ஒருங்கே இணைக்கும் இந்த கூட்டு முயற்சியானது, The Shoppes வளாகத்தை வெறும் வணிகத் தலமாக மட்டும் அல்லாமல், குடும்பங்கள் ஒன்றிணைந்து பயனுள்ள நேரத்தைச் செலவிடக்கூடிய ஒரு சமூகக் கூடமாக மாற்றுகின்றது. இது எதிர்கால சந்ததியினரை கடல் பாதுகாப்புப் போராளிகளாக உருவாக்க ஊக்கமளிப்பதாக அமையும்.

இந்த வார இறுதி நிகழ்வின் முக்கிய அம்சமாக ‘ரீஃப் பில்டர்ஸ்’ (Reef Builders) பயிற்சிப்பட்டறை அமையவுள்ளது. இதில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டு அட்டைப் பெட்டிகளைக் (Cardboard) கொண்டு ஜெல்லிமீன்கள், கடலாமைகள், சுறாக்கள் மற்றும் பவளப்பாறை மீன்கள் போன்ற கடல்வாழ் உயிரினங்களை உருவாக்க முடியும். கதை சொல்லல், படைப்பாற்றல் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து இரு வேறு வயதுப் பிரிவினருக்கு ஏற்ப இந்த அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

4 முதல் 9 வயது வரையிலான சிறுவர்களுக்கான ‘டைட் பூல் க்ரூ’ Tide Pool Crew) அமர்வில் கதை சொல்லல்;, உயிரின அட்டைகள் மற்றும் அவர்கள் கைவினைப் பொருட்களாகச் செய்து வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடிய வண்ணமயமான படைப்புகள் இடம்பெறும். 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான ‘டீப் ரீஃப் க்ரூ’ (Deep Reef Crew) அமர்வில், கலந்துரையாடல்கள் மற்றும் ஊடாடும் உருவாக்க நடவடிக்கைகள் மூலம் பெருங்கடல் எதிர்கொள்ளும் சவால்கள், உயிரினப் பாதுகாப்பு மற்றும் கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்புகள் குறித்துப் பங்கேற்பாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

இந்தக் கொண்டாட்டங்களுக்கு மேலும் வண்ணம் சேர்க்கும் வகையில் உலகப் பெருங்கடல் தின ஓவியப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கைகளால் வரையப்பட்ட ஓவியங்கள், டிஜிட்டல் கலைகள் (Digital Art) மற்றும் டிஜிட்டல் படங்கள் மூலம் பங்கேற்பாளர்கள் கடல் மீதான தங்களது அன்பை வெளிப்படுத்தலாம். ‘காயப்பட்டவைகளின் எதிரொலி’ (Echoes of the Wounded) மற்றும் ‘கீழிருந்து ஒரு பார்வை’ (The View from Below) போன்ற கருப்பொருள்களின் கீழ், கடல்வாழ் உயிரினங்களின் அழகு மற்றும் அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த ஓவியப் போட்டி அமையும். இதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளதுடன், படைப்புகளைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி மே 31 உடன் நிறைவுக்கு வந்துள்ளது
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8 ஆம் திகதி உலகளவில் அனுசரிக்கப்படும் உலகப் பெருங்கடல் தினமானது, பூமியில் உயிர்களைத் தக்கவைப்பதில் பெருங்கடல்களின் முக்கிய பங்கை நினைவூட்டுகிறது. ஒக்சிஜனை உற்பத்தி செய்தல், காலநிலையை ஒழுங்குபடுத்துதல் முதல் பல்லுயிர் பெருக்கம் மற்றும் வாழ்வாதாரங்களை ஆதரிப்பது வரை கடலின் பங்கு அளப்பரியது. இலங்கையின் அடையாளத்துடன் கடல் ஆழமாகப் பின்னிப்பிணைந்துள்ளதால், எதிர்கால சந்ததியினருக்காக கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பது மிகவும் இன்றியமையாததாக மாறியுள்ளது.

இலங்கையின் முன்னணி இளைஞர் அமைப்பான The Pearl Protectors கடல் மாசுபாட்டைக் குறைத்தல், பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாத்தல் மற்றும் சமூகங்கள் மற்றும் இளைஞர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற தாக்கமிக்க திட்டங்களின் மூலம் இந்த இயக்கத்தில் முன்னணியில் திகழ்கிறது.

The Shoppes மற்றும் The Pearl Protectors ஆகியன இணைந்து, கல்விசார்ந்த, அதிவேக மற்றும் மறக்கமுடியாத உலகப் பெருங்கடல் தினக் கொண்டாட்டத்தை உருவாக்க இலக்கு வைத்துள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை குறித்த உரையாடல்களையும் முழு குடும்பத்திற்குமான ஒரு சுவாரஸ்யமான, ஆக்கப்பூர்வமான நிகழ்வாக மாற்ற முடியும் என்பதை இது நிரூபிக்கிறது.

பதிவு விபரங்கள்:
ஓவியப் போட்டியில் பதிவு செய்ய: https://bit.ly/WODART26
பயிற்சிப்பட்டறையில் பதிவு செய்ய: https://bit.ly/wod26workshop

BYD ඉතිහාසයේ ප්‍රථම වරට මෝටර්...
TikTok හරහා මැණික් ගැන ලෝකෙටම...
எல்.பி.எல் 2026: உள்ளூர், சர்வதேச நட்சத்திர...
Samsung Sri Lanka Celebrates the...
Father’s Day Special: Meet the...
ජනශක්ති ෆිනෑන්ස් සමාගම ලාභදායීත්වය වැඩිදියුණු...
MAS Linea Intimo විසින් නිර්මාණය...
Sri Lanka’s IMF review: Stabilisation...
ජනශක්ති ෆිනෑන්ස් සමාගම ලාභදායීත්වය වැඩිදියුණු...
MAS Linea Intimo විසින් නිර්මාණය...
Sri Lanka’s IMF review: Stabilisation...
පසුගිය වසරේදී ආයතනවලින් 71%කට අවම...