ஏற்றுமதித் துறையில் முன்னணியில் உள்ள Joint Agri Products Ceylon (Pvt) Ltd நிறுவனத்தின் 75 சதவீத பங்குகளைக் கையகப்படுத்தும் சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

Share

Share

Share

Share

இலங்கையின் பல்வேறு துறைகளில் தடம் பதித்துள்ள முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி (SUN), ஏற்றுமதித் துறையில் முன்னணியில் திகழும் Joint Agri Products Ceylon (Private) Limited – JAPC நிறுவனத்தின் 75 சதவீத பங்குகளைக் கையகப்படுத்தும் தனது விருப்பத்தை அறிவித்துள்ளது. 2026 ஜனவரி 21 ஆம் திகதி கையெழுத்திடப்பட்ட பங்கு கொள்முதல் ஒப்பந்தத்தில் (Share Purchase Agreement – SPA) உள்ள நிபந்தனைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இந்த பங்கு கொள்முதல் ஒப்பந்தம் (SPA) கையெழுத்திடப்பட்டது. இது சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சிப் பயணத்தில் ஒரு மூலோபாய மைல்கல்லாக அமைந்துள்ளது.

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனம், உலகளாவிய ரீதியிலான தமது வணிகத்தை விரிவுபடுத்தல் மற்றும் நுகர்வோர் துறையை (Consumer sector) மேம்படுத்தல் பணிகளை மேற்கொள்ளும் அதேநேரம், இந்த கையகப்படுத்தல் ஊடாக தமது வணிக இலாகாவை மேலும் பன்முகப்படுத்தும் மூலோபாயத்துடன் இணைந்து செயலாற்றுகின்றது. உயர் ரக ஏற்றுமதித் துறையில் பிரவேசிப்பதன் மூலம், அதிக மதிப்புமிக்க சர்வதேச சந்தைகளில் தனது இருப்பை வலுப்படுத்துவதிலும், நெகிழ்ச்சியான மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற வருமான வழிகளை உருவாக்குவதிலும் சன்ஷைன் ஹோல்டிங்ஸ் (SUN) இலக்கு வைத்துள்ளது.

இந்தக் கையகப்படுத்தல் குறித்து சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷியாம் சதாசிவம் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த முதலீடானது, நெகிழ்வு, விரிவாக்க வாய்ப்பு மற்றும் சந்தைக்குப் பொருத்தமான வலுவான தன்மையைக் கொண்ட வணிகங்களின் ஊடாக, சன்ஷைன் ஹோல்டிங்ஸின் உலகளாவிய ரீதியிலான வணிகத் தடத்தை விரிவுபடுத்துவதற்காக எடுக்கப்பட்ட ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாகும். Joint Agri Products Ceylon (JAPC) நிறுவனம், வலுவான சர்வதேச உறவுகள் மற்றும் செயல்பாட்டு நேர்த்தி ஆகியவற்றுடன், உயர்தர இயற்கை உற்பத்திப் பொருட்களுக்கென ஏற்றுமதித் துறையில் ஒரு நம்பகமான தளத்தை உருவாக்கியுள்ளது. இந்தக் கூட்டாண்மையானது அந்த வணிகத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு வழிவகுக்கும் என நாங்கள் நம்புகின்றோம். அத்துடன், இலங்கைக்கு நீண்டகால மதிப்பினை பெற்றுத்தரக்கூடிய, ஏற்றுமதியை மையமாகக் கொண்ட நிறுவனங்களைக் கட்டியெழுப்புவதற்கான எமது அர்ப்பணிப்பை இது மேலும் உறுதிப்படுத்துகிறது,” எனத் தெரிவித்தார்.

கையகப்படுத்தப்படவுள்ள இந்த நிறுவனம், இயற்கை வாசனைத் திரவியங்கள் மற்றும் ஏனைய விவசாய உற்பத்திப் பொருட்களைப் பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி செய்தல் ஆகிய பணிகளில் மேற்கொள்வதுடன், சர்வதேச சந்தையின் உயர்தரப் பிரிவுகளுக்கான தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. இதன் செயல்பாடுகள் இரண்டு வெவ்வேறு வணிகப் பிரிவுகளாகப் பரந்து விரிந்துள்ளன: முதலாவதாக, சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விநியோகிக்கும் B2B விற்பனையை மையமாகக் கொண்ட ‘பொது ஏற்றுமதி’ (General Exports) பிரிவு; இரண்டாவதாக, தற்போது ஆரம்பக் கட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்யும் B2C சில்லறை விற்பனைப் பிரிவு.

முறையான மற்றும் சுமூகமான நிர்வாக மாற்றத்தை உறுதி செய்வதற்காக, சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழு, தற்போதுள்ள நிர்வாகக் குழுவுடன் இணைந்து கூடுதல் ஒத்துழைப்புடன் பணியாற்றும், வர்த்தக செயற்பாடுகள் எவ்விதத் தடையின்றி முன்னெடுக்கப்படும் அதேநேரம், இந்த வணிகத்தை மேலும் வலுப்படுத்தவும், விரிவுபடுத்தவும் (scale) சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் தனது ஆளுமை (governance), செயல்பாட்டு மேன்மை மற்றும் மூலோபாய வளர்ச்சி ஆகியவற்றில் கொண்டுள்ள நிபுணத்துவத்தைப் பங்களிப்பாக வழங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறு மற்றும் நடுத்தர அளவிலான ஆடைத்...
Carnage அறக்கட்டளையின் ஆதரவோடு சர்வதேச விளையாட்டரங்கில்...
First Capital Treasuries, மூலதனச் சந்தை...
A Little Love for Every...
BYD, කුඩා පරිමාණ වාහන වෙළෙඳපොළට...
එල්නිනෝ තත්වයෙන් ඔබ්බට – දේශගුණික...
Sophos, කළමනාකරණය කළ සයිබර් අවදානම්...
Vision AI තාක්ෂණයෙන් යුත් නවතම...
එල්නිනෝ තත්වයෙන් ඔබ්බට – දේශගුණික...
Sophos, කළමනාකරණය කළ සයිබර් අවදානම්...
Vision AI තාක්ෂණයෙන් යුත් නවතම...
ITC Ratnadipa Presents Weddings Above...