• வீரர்களின் திறன்களை நீண்டகாலமாக மேம்படுத்துவதற்காக 550 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான முதலீடு
• கல்வி அமைச்சு, விளையாட்டு அமைச்சு, இலங்கை தேசிய ஒலிம்பிக் குழு, இலங்கை தடகள சங்கம் மற்றும் தடகள அபிவிருத்திக்கான இலங்கை ஒலிம்பிக்ஸ் சங்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய இலங்கையின் மிகப்பெரிய அரச-தனியார் ஒத்துழைப்பு
• 2028 மற்றும் 2032 ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்
எதிர்கால ஒலிம்பிக் விளையாட்டு வீர வீராங்கனைகளின் திறமைகளை மேம்படுத்துவதற்காக நிர்மாணிக்க திட்டமிடப்படட்டுள்ள இலங்கையின் முதலாவது மிகப் பெரிய அரச – தனியார் பங்காளித்துவமான MAS தளகள பயிற்சி அகாடமியை அமைப்பதற்காக MAS Holdingsக்கு அண்மையில் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் தனித்துவமான திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
550 மில்லியன் ரூபா பாரிய முதலீடான இந்த பயிற்சி அகாடமியின் ஊடாக 2028 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் 2032 ஆம் ஆண்டு பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இலங்கை விளையாட்டு வீர வீராங்கனைகள் இனங்காணப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு அவர்களுக்கு ஆதரவு வழங்கப்படவுள்ளது. 8 ஆண்டுகளுக்கு ஒரு ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டமாக செயல்படுத்தப்படும் வகையில், இந்த பயிற்சி அகாடமி, விளையாட்டு வீர வீராங்கனைகள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்களுக்கு எதிர்கால இலக்கு பயிற்சி, சர்வதேச அளவிலான தடகள உபகரணங்கள், சர்வதேச வாய்ப்புகள், ஊட்டச்சத்து மற்றும் கல்வி ஆதரவு மற்றும் நிதி மற்றும் உபகரணங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு நேரடியாக ஒத்துழைப்புகளை வழங்கவுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த MAS Holdings நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைவருமான திரு. மஹேஷ் அமலீன், “பல வருடங்களாக தடகள விளையாட்டு மூலம்தான் இலங்கை ஒலிம்பிக் பதக்கங்களை வென்றது. அதற்கான திறன் எங்களிடம் இருந்தாலும், பெரும்பாலான விளையாட்டு வீர வீராங்கனைகள் கிராமப்புறங்களில் இருந்து வருவதால் அவர்களுக்கு வழங்கப்படும் ஆதரவு மிகவும் குறைவாகவே உள்ளது. இலங்கையில் தடகளப் போட்டிகளில் அதிக கவனம் செலுத்தும் நாங்கள், இலங்கை தடகள விளையாட்டுகளின் எதிர்காலத்திற்காக மிகவும் பயனுள்ள முதலீட்டைச் செய்ய நடவடிக்கை எடுத்தோம். இதன் மூலம், இலங்கையில் உள்ள விளையாட்டு வீர வீராங்கனைகளின் திறன்களை அதிகரித்து, உலக அளவில் அவர்களின் சிறந்த திறமைகளை வெளிப்படுத்த அவர்களை தயார்படுத்தி, அவர்களின் சாதனைகளுக்கு தேவையான வழிகாட்டல் மற்றும் பயிற்சிகளை வழங்க நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.” என தெரிவித்தார்.
கல்வி அமைச்சு, விளையாட்டு அமைச்சு, தேசிய ஒலிம்பிக் கமிட்டி, இலங்கை தடகள சங்கம் மற்றும் இலங்கை ஒலிம்பிக் தடகள சங்கம் ஆகியவை இணைந்து ஆரம்பிக்கவுள்ள MAS தடகள அகாடமியின் ஊடாக திறமையான பாடசாலை மட்டத்திலுள்ள விளையாட்டு வீர வீராங்கனைகளை இனங்கண்டு அவர்களின் திறன்களை விருத்தி செய்யும் மாபெரும் செயலணியை ஆரம்பித்துள்ளன. மேலும், சிறப்பு தேர்வுகள் மற்றும் தேர்வு முகாம்கள் மூலம், சிறப்பாக செயல்படும் விளையாட்டு வீர வீராங்கனைகள் அடையாளம் காணப்படுகின்றனர். பயனாளி விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு நிதியுதவி, உபகரணங்கள், கல்வி ஆதரவு, மேலதிக ஊட்டச்சத்து, பயிற்சி கட்டணம் மற்றும் சர்வதேச பயிற்சி மற்றும் அவர்களின் தடகள வாழ்க்கைக்கான வாய்ப்புகளை வழங்குவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் போட்டியில் 200 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீர வீராங்கனைகள் மதிப்பீடு செய்யப்பட்டு 14 பெண் வீராங்கனைகள் மற்றும் 32 ஆண் வீரர்களுடன் 56 பேர் கொண்ட குழாம் இந்த அகாடமியின் முதல் அணியாக தெரிவு செய்யப்பட்டது. நாடு முழுவதும் உள்ள 9 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் விளையாட்டு வீர வீராங்கனைகள் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட தூர தடகள போட்டிகள் மற்றும் பல்வேறு போட்டிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த பயிற்சி அகாடமியில், அவர்களின் திறன்கள் மற்றும் பயிற்சி தரநிலைகள் ஒரு அதிநவீன டிஜிட்டல் செயலியின் (App) மூலம் கண்காணிக்கப்படும்.
இங்கு உரையாற்றிய இலங்கை ஒலிம்பிக் மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவர் திருமதி ஸ்ரீயானி குலவங்ச. “இலங்கை விளையாட்டு வீர வீராங்கனைகள் தடகள போட்டிகளில் சிறந்த திறமையையும் சிறந்த ஆற்றலையும் கொண்டுள்ளனர். கடந்த காலங்களில், எங்கள் விளையாட்டு வீர வீராங்கனைகள் பலர் அடிப்படை பயிற்சி மூலம் மட்டுமே பெரிய சாதனைகளை அடைய முடிந்தது. இந்த அகாடமி நமது இளம் விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு ஒரு மதிப்புமிக்க வாய்ப்பாக இருக்கும் என்பது உறுதி. அதன் மூலம், நவீன பயிற்சி தொழில்நுட்பம் மற்றும் ஆதரவுடன், பல சிறந்த விளையாட்டு வீர வீராங்கனைகளை உலகிற்கு அளிக்கும் திறன் எங்களிடம் உள்ளது. ஒரு முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனை என்ற முறையில், நாளைய சாம்பியன்களின் வளர்ச்சியை இலக்காகக் கொண்ட இந்த அகாடமிக்கு எனது ஆதரவை வழங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஒலிம்பிக் கனவை நனவாக்க, விளையாட்டு மீதான நாட்டின் நம்பிக்கையை உயர்த்த உழைத்த MAS க்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள இந்த தருணத்தில் விரும்புகிறேன்.” என தெரிவித்தார்.