ஒவ்வொரு இல்லத்திற்கும் அதிக சேமிப்பையும், உயர்ந்த சலுகைகளையும் வழங்கும் Samsung இன் “Go Save Today” திருவிழா

Share

Share

Share

Share

Samsung Sri Lanka நிறுவனம் தனது புதிய “Go Save Today” திருவிழா தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னணி நிறுவனமான Samsung, இலங்கை முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அதிரடி விலைக்குறைப்புடன் கூடிய இந்த சலுகைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் களியாட்டத் திருவிழாவின் மூலம், வாடிக்கையாளர்கள் உலகத்தரம் வாய்ந்த Samsung தயாரிப்புகளை குறைந்த விலையில் வாங்கி தங்கள் இல்லங்களை நவீனமயமாக்கிக் கொள்ள முடியும்.

குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நடைபெறும் இந்த சிறப்பு விற்பனைத் திருவிழாவில், தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள் மற்றும் குளிரூட்டிகளில் கவர்ச்சிகரமான விலைக்குறைப்பு மற்றும் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, வாடிக்கையாளர்களுக்கு வேறு எங்கும் கிடைக்காத அசாதாரண மதிப்பை இந்த சலுகைகள் வழங்குகின்றன.

அனைத்து மக்களுக்கும் அர்த்தமுள்ள புத்தாக்கங்களை வழங்கும் Samsung இன் உலகளாவிய தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, Go Save Today திருவிழாவானது உயர்தரத் தொழில்நுட்பத்தை அனைவரும் எளிதில் பெறக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், குடும்பங்கள் எந்தவித சமரசமுமின்றி ஸ்மார்ட் வாழ்க்கை முறையை அனுபவிக்க முடியும்.
Samsung இன் Go Save Today திருவிழாவில் அனைத்து தயாரிப்புகளிலும் கணிசமான விலைக்குறைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொலைக்காட்சிப் பிரிவில், 32 அங்குல HD தொலைக்காட்சிகள் 64,999 ரூபாவிலிருந்து 59,999 ரூபாவாகவும், 32 அங்குல ஸ்மார்ட் HD தொலைக்காட்சிகள் 74,999 ரூபாவிலிருந்து 64,999 ரூபாவாகவும், 43 அங்குல கிரிஸ்டல் UHD தொலைக்காட்சிகள் ரூ.134, 999-லிருந்து ரூ.129, 999 ரூபாவாகவும், மற்றும் 55 அங்குல கிரிஸ்டல் UHD தொலைக்காட்சிகள் ரூ.294, 999-லிருந்து ரூ.279, 999 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளன. வீட்டு உபகரணங்கள் பிரிவில், 253 லீட்டர் Inverter No Frost Double Door குளிர்சாதனப் பெட்டிகள் 164,999 ரூபாவிலிருந்து 149,999 ரூபாவாகவும், 275 லீட்டர் மாதிரிகள் 189,999 ரூபாவிலிருந்து ரூ.179, 999 ரூபாவாகவும் கிடைக்கின்றன. 13 கிலோ ஸ்மார்ட் Inverter Top Loader Washer சலவை இயந்திரங்கள் 119,999 ரூபாவிலிருந்து 109,999 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளன. அறைகளுக்கான குளிரூட்டிகளின் விலை 209,999 ரூபா முதல் ஆரம்பமாகிறது.

Samsung நிறுவனம் தனது குளிர்சாதனப் பெட்டிகளில் உள்ள டிஜிட்டல் Inverter compressor மற்றும் சலவை இயந்திரங்களின் டிஜிட்டல் Inverter Motor-களுக்கு 20 ஆண்டுகள் உத்தரவாதம் வழங்குகிறது. இந்த அசாதாரணமான உத்தரவாதக் காலம் தயாரிப்புகளின் உறுதித்தன்மை மீதான Samsung நிறுவனத்தின் நம்பிக்கையையும், வாடிக்கையாளர்களின் நீண்டகால திருப்தியை உறுதிசெய்வதில் Samsung இன் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது.

Samsung நிறுவனம் தொடர்ச்சியாக 19 ஆண்டுகளாக உலகளவில் முதன்மையான தொலைக்காட்சி உற்பத்தியாளராக தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதேபோல, இந்நிறுவனம் உலக மக்கள் பொழுதுபோக்கை அனுபவிக்கும் முறையை புதுப்பித்து வருகிறது. Samsung இன் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் சலவை இயந்திரங்களும் அவற்றின் சிறந்த செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மைக்காக பிரபலமானவை. இந்த உறுதிமொழியானது தொழில்துறையில் மிக நீண்ட உத்தரவாதத் திட்டங்களில் ஒன்றால் ஆதரிக்கப்படுகிறது.

இந்த முயற்சி பற்றி பேசிய Samsung Sri Lanka நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. SangHwa Song, “Samsung இல், புத்தாக்கம் என்பது சமுதாயத்தின் அனைத்து பிரிவினரையும் சென்றடைய வேண்டும் என்பது எங்கள் தாரக மந்திரம். Go Save Today திருவிழா, இலங்கை வீடுகள் உயர்தரமான, மின்சக்தி சேமிப்புத் தொழில்நுட்பத்தை குறைந்த விலையில் பெற உதவும் எமது அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. இது வெறும் பணச்சேமிப்பைத் தாண்டி, எமது வாடிக்கையாளர்களுக்கு புத்திசாலித்தனமான, நீடித்த வாழ்க்கை முறையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்று குறிப்பிட்டார்.

Go Save Today திருவிழாவின் சலுகைகளை Samsung இன் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களான Singer, Singhagiri, Damro மற்றும் Softlogic ஆகியவற்றின் மூலம் பெறலாம். இதன் மூலம் இலங்கை முழுவதும் உண்மையான Samsung தயாரிப்புகளை எளிதில் பெற முடியும். மேலும், இலங்கையின் முன்னணி வங்கிகளின் கடன் அட்டைகள் மூலம் வாடிக்கையாளர்கள் வசதியான தவணை முறை கொள்முதல் திட்டங்களையும் பயன்படுத்தி, எளிதாக Samsung இன் புத்தாக்கத் தொழில்நுட்பத்தை தங்கள் இல்லங்களுக்குக் கொண்டுவர முடியும்.

பாரம்பரியம் மற்றும் நிலைத்தன்மையுடன் முன்னேறும் Dunsinane...
Softlogic Life Celebrates “THE POWER...
ஒவ்வொரு இல்லத்திற்கும் அதிக சேமிப்பையும், உயர்ந்த...
සැම්සුන් ශ්‍රී ලංකා “Go Save...
Chocoholics Café Announces First International...
2025 ICC කාන්තා ලෝක කුසලානයේදී...
லபுக்கெல்ல தோட்டத்தின் கதை – பாரம்பரிய...
தெல்பெத்த எஸ்டேட் பாரம்பரியத்தையும் சிறப்பையும் ஒருங்கிணைக்கும்...
2025 ICC කාන්තා ලෝක කුසලානයේදී...
லபுக்கெல்ல தோட்டத்தின் கதை – பாரம்பரிய...
தெல்பெத்த எஸ்டேட் பாரம்பரியத்தையும் சிறப்பையும் ஒருங்கிணைக்கும்...
Closeup ලංකාවේ පළමු වරට ජනතා...