கழிவு நிர்வகிப்பில் பெண்களுக்கு அதிகாரம் அளித்து சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய Coca-Cola Beverages Sri Lanka

Share

Share

Share

Share

Coca-Cola Beverages Sri Lanka, இம்முறை சர்வதேச மகளிர் தினத்தை கொழும்பு மாநகர பகுதியல் உள்ள கழிவு வள சேகரிப்பாளர்களின் அளப்பரிய பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சியுடன் கொண்டாடியது.

கொழும்பில் உள்ள ஜே.ஆர். ஜயவர்தன மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சுற்றுச்சூழல் நிலைபேறாண்மை, சமூக நலன் மற்றும் நகர்ப்புற தூய்மையில் அவர்களின் முக்கிய பங்கை கௌரவிக்க 100 கழிவு வள சேகரிப்பாளர்கள் ஒன்று கூடினர். நாட்டின் மறுசுழற்சி முயற்சிகளுக்கும், சுழற்சி பொருளாதாரத்திற்கும் அவர்களின் பங்களிப்புகள் நிலையான எதிர்காலத்திற்கான முக்கிய இயக்கிகளாக சிறப்பித்துக் காட்டப்பட்டன.

இந்நிகழ்வு தலைமைத்துவம், தொழில்முனைவு மற்றும் பரிந்துரை மூலம் பெண்களை வலுப்படுத்தும் அர்ப்பணிப்புள்ள அமைப்பான Women in Management இன் ஒத்துழைப்போடு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் சுற்றாடல் அமைச்சின் மேலதிக செயலாளரான பத்மா அபேகோன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். அவர் கழிவு நிர்வகிப்பில் கழிவு வள சேகரிப்பாளர்கள் ஆற்றும் விலைமதிப்பற்ற பங்களிப்புகளைப் பாராட்டி, சுத்தமான சுற்றுச்சூழலைப் பேணுவதிலும், பொது சுகாதாரத்தை ஊக்குவிப்பதிலும் அவர்களின் பங்கினை வலியுறுத்தினார். மேலும், அவர்கள் தங்களது தொழில் மற்றும் சொந்த வாழ்க்கையில் தலைமைப் பொறுப்பை ஏற்க ஊக்கமளித்து, அதிகாரப்படுத்துதல், மீள்திறன் மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சியின் முக்கியத்துவத்தை அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான சமூகத்தை உருவாக்குவதில் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் இந்த அர்ப்பணிப்புள்ள பெண்களின் ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் அதிகாரமளித்தலை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு செயல்பாடுகள் இடம்பெற்றன. இந்த நாள் Coca-Cola Beverages Sri Lanka நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரதீப் பாண்டே அவர்களின் அன்பான வரவேற்புரையுடனும், ஊக்கமளிக்கும் உரையுடனும் ஆரம்பமாகியது. இதில் பேசிய அவர், பங்கேற்பாளர்களின் விலைமதிப்பற்ற பணிக்கான உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பை பாராட்டினார்.

அமெரிக்க தூதரகத்தின் சிறப்பு அழைப்பாளர்களான பொருளாதார மற்றும் வணிக அதிகாரி டேனியல் ஜாக்சன் மற்றும் வணிக மற்றும் பொருளாதார உதவியாளர் திலோமா அபயநாயக ஆகியோரின் பங்கேற்பு இந்நிகழ்விற்கு அர்த்தமுள்ள மதிப்பை சேர்த்து, அதன் முக்கியத்துவத்தை மேலும் உயர்த்தினர்.

பங்கேற்பாளர்களுக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் ஒரு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட பலர் மருத்துவ பரிசோதனை மூலம் தங்களது உடல்நிலையை சரிபார்த்து, முழுமையான நலத்திற்குத் தேவையான ஆலோசனைகளைப் பெற்றனர். இந்தச் சேவைகள், அவர்கள் முழுமையான நலத்திற்குப் பெரிதும் உதவியாக அமைந்தன.

இதனைத் தொடர்ந்து, பெண்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் பற்றிய ஒரு மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவ நிபுணர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில், பங்கேற்பாளர்கள் தங்களது உடல்நிலை தொடர்பான சந்தேகங்களை நேரடியாகக் கேட்டு, மருத்துவரிடம் ஆலோசனை பெறும் வாய்ப்பைப் பெற்றனர். மேலும், குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய முக்கியமான மருத்துவ அனுபவங்கள் மற்றும் தகவல்களும் கலந்துரையாடப்பட்டன. எனவே, இந்த மருத்துவ முகாம் ஹேமாஸ் மருத்துவமனையின் (Hemas Hospitals) ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டதுடன், அதற்காக Coca-Cola Beverages Sri Lanka பாராட்டுகளையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கழிவு நிர்வகிப்பில் தங்களது உழைப்பை மூன்றாம் தரமாகக் கருதாமல், சமூகத்திற்கு முக்கிய பங்காற்றும் பெண்களைப் பாராட்டும் விதமாக, அவர்களுக்கு அத்தியாவசிய உலர் உணவுப்பொருட்கள், மருத்துவம் மற்றும் தூய்மை பாதுகாப்பு பொருட்கள் அடங்கிய பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன. இது, சுற்றுச்சூழல் மற்றும் சமூக நிலைபேறாண்மைக்காக அவர்கள் செய்யும் பங்களிப்பை அங்கீகரிக்கும் ஒரு சிறப்பு முயற்சியாக அமைந்தது.

சமூகத்தில் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படாத இந்த கடின உழைப்பாளிகளான பெண்களுடன் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடுவதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். இன்று, நாங்கள் அவர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்புகளை அங்கீகரிப்பதோடு மட்டுமல்லாமல், சுகாதார சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மூலம் உறுதியான ஆதரவையும் வழங்கினோம்,’ என்று Coca-Cola Beverages Sri Lanka நிறுவனத்தின பொது விவகாரங்கள், தகவல் தொடர்புகள் மற்றும் நிலைபேறாண்மை பணிப்பாளர் தமரி சேனாநாயக்க தெரிவித்தார்.

‘பெண்களின் வலிமை மற்றும் நெகிழ்திறன், மற்றும் அவர்களுக்கு எல்லா வழிகளிலும் அதிகாரம் அளிப்பதன் முக்கியத்துவம் பற்றிய நினைவூட்டலாக இந்த நிகழ்வு அமையும் என்று நம்புகிறோம்.’ என்று குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வு உறுதியான பங்கேற்பு, உணர்வுபூர்வமான கதைகள் மற்றும் அர்த்தமுள்ள ஈடுபாட்டுடன் வெற்றிகரமாக நடைபெற்றது. Coca-Cola Beverages Sri Lanka நிறுவனம் நிலைபேறாண்மை மற்றும் சமூக நலன் கொண்ட சமூகத்தை உருவாக்குவதற்காக, பயனுள்ள திட்டங்களை முன்னெடுக்க தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது.

Michelin Sri Lanka ජාත්‍යන්තර කාන්තා...
Sampath Bank Tees Up for...
Samsung Electronics Marks 19 Consecutive...
Sampath Bank Adjudged Best Commercial...
உலகளாவிய தொலைக்காட்சி சந்தையில் தொடர்ந்து 19...
Sunshine Holdings embarks on a...
Sampath Bank Tees Up for...
John Keells CG Auto இலங்கைக்கு...
Sunshine Holdings embarks on a...
Sampath Bank Tees Up for...
John Keells CG Auto இலங்கைக்கு...
HNB වෙතින් මේ අවුරුදු සමයේ...