கழிவு நிர்வகிப்பு சவால்களை சமாளிக்க யாழ்ப்பாணம் மற்றும் பதுளையில் புதிய பொருள் மீட்பு வசதிகள் நிறுவப்பட்டுள்ளன

Share

Share

Share

Share

நிலைத்தன்மைக்கான அவர்களின் அர்ப்பணிப்பை வலுப்படுத்தும் வகையில், Coca-Cola Foundation (TCCF), Eco-Spindles மற்றும் Janathakshan (GTE) ஆகியவை இலங்கையில் இரண்டு அதிநவீன பொருள் மீட்பு வசதிகளை (MRFs) பெருமையுடன் திறந்து வைத்தன. யாழ்ப்பாணத்தில் “Golden PET Company Pvt Ltd” என்றும், பதுளையில் “J.A.S. Fernando” என்றும் பெயரிடப்பட்ட இந்த வசதிகள், உள்ளூர் பிளாஸ்டிக் கழிவு சவால்களை எதிர்கொள்வதிலும், பிராந்தியங்களில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் குறிக்கின்றன.

பிளாஸ்டிக் மாசுபாடுகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான Global Movement Advocating நிறுவனத்தினால், இலங்கையில் இந்த பொருள் மீட்பு வசதி நிலையங்கள் அறிமுகப்படுத்துவது, உள்ளூர் பிளாஸ்டிக் கழிவு பிரச்சினைகளை தீர்ப்பதற்கான உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. இந்த நிலையங்கள் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் கழிவுகள் பதப்படுத்தும் முறைகளால் பொருத்தப்பட்டு இருப்பதால், இலங்கையில் நிலையான உற்பத்தி மற்றும் நுகர்வு நடைமுறைகளை மறுவரையறை செய்து, மாதம் 20 மெட்ரிக் தொன் கழிவுகளை பதப்படுத்தும் திறன் கொண்டவை.

யாழ்ப்பாணம் மற்றும் பதுளையில் புதிய மறுசீரமைப்பு பொருள் நிலையங்கள் (MRFs) ஸ்தாபனம் செய்வதற்கு தெரிவுசெய்யும் போது, தந்திரோபாய காரணிகள் கவனத்தில் கொள்ளப்பட்டன. பதுளை ஊவா மாகாணத்தின் பிரதான நகரமாக இருப்பதுடன், இங்கு 815,405 மக்கள் தொகை மற்றும் 17.2% ஆண்டுக்கு சுற்றுலாப்பயணிகள் தங்குவதனால் இந்த நகர்புற மையங்கள் மற்றும் போக்குவரத்து மையங்கள் ஆகியன பயனடைகிறது. 2012 ஆம் ஆண்டின் ஊவா மாகாணத்தின் மக்கள் தொகை மற்றும் வீடமைப்புக்கான சிறப்புக் கணக்கெடுப்பு மற்றும் 2021 ஆம் ஆண்டின் வருடாந்திர புள்ளிவிவர அறிக்கை ஆகியவற்றின் தரவுகள் இதன் முக்கியத்துவத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றன.

இதேபோல், யாழ்ப்பாணம், 583,882 மக்கள்தொகையுடன், சுற்றுலாத் திறனையும், வளர்ந்து வரும் ஹோட்டல் தொழில்துறையையும் கொண்டுள்ளது, பல்வேறு இடங்கள் மற்றும் கடற்கரைகள் மற்றும் துறைமுகங்களை ஒட்டிய ஒரு மூலோபாய இடம். இந்த காரணிகள் யாழ்ப்பாணம் மற்றும் பதுளை MRF களுக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன, திறம்பட கழிவு நிர்வகிப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான TCCF இன் அர்ப்பணிப்புடன் ஒத்துப்போகின்றன.

இந்த மறுசீரமைப்பு பொருள் நிலையங்கள் (MRFs) தாமாக முன்வந்து சமூக மையப்படுத்தப்பட்ட நெறிகளின் அடிப்படையில் இயங்குகின்றன. மீள்சுழற்சி செய்யக்கூடிய கழிவுகளை சிறப்பாக சேகரிப்பதற்காக தகவல் சாராத கழிவு சேகரிப்பு வலைப்பின்னல்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் தங்களை தனித்துவப்படுத்திக் கொள்கின்றன. இந்த நிலையங்கள் நவீன Balerகள் மற்றும் துண்டாக்கும் இயந்திரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி மீள்சுழற்சி செய்யக்கூடியவற்றை திறமையாக பிரித்தெடுத்து, சுருக்கி, துகள்களாகவும் மாற்றுகின்றன. இதில் பெரும்பாலும் PET பிளாஸ்டிக் மீது கவனம் செலுத்தப்படுகிறது. இதன் மூலம் அவற்றை சுருக்கமான தொகுப்புகளாகவும் பிற பிளாஸ்டிக்களை துகள்களாகவும் மாற்றுகின்றன. பின்னர் பதப்படுத்தப்பட்ட PET பிளாஸ்டிக் பொருட்கள் மேலும் பதப்படுத்தப்பட்டு மீள்சுழற்சி செய்ய Eco Spindles நிறுவனத்திற்கு அனுப்பப்படுகின்றன. இதன்மூலம் நிலையான கழிவுகள் முகாமைத்துவத்திற்கான மூடப்பட்ட சுழற்சி முறைமைக்கு பங்களிப்பு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

“இலங்கையில் நீடித்து நிலைத்திருப்பதற்கான எமது நீண்டகால உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் கழிவு சேகரிப்பு மற்றும் மீள்சுழற்சி முயற்சிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட செயற்பாடுகளுக்கு Coca-Cola அறக்கட்டளை தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது” என Coca-Cola அறக்கட்டளையின் தலைவர் Carlos Pagoaga தெரிவித்தார். “இந்த பொருள் மீட்பு வசதிகளின் துவக்கமானது பசுமையான எதிர்காலத்தை நோக்கிய நமது பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது. எங்கள் கூட்டாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம், கழிவு நிர்வகிப்பில் எங்கள் தாக்கத்தை விரிவுபடுத்துகிறோம், மீள்சுழற்சி கலாச்சாரத்தை வளர்ப்போம் மற்றும் தூய்மையான சூழலுக்கு பங்களிக்கிறோம். இவ்வாறான முன்முயற்சிகள் மூலம், இலங்கையில் சாதகமான மாற்றம் மற்றும் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கான எமது அர்ப்பணிப்பை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

தமது திட்டத்தின் தொடர்ச்சியான தாக்கம் குறித்த தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட Eco Spindles Pvt. Ltd. நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. பிரசாந்த மலிம்படகே அவர்கள், “இந்த மறுசீரமைப்பு பொருள் நிலையங்கள் திறப்பு விழா, நிலையான எதிர்காலத்தை நோக்கிய ஒரு முக்கியமான படியாகும். எமது பங்காளிகளுடன் சேர்ந்து, நாங்கள் தற்போதைய சவால்களை மட்டும் சமாளிக்கவில்லை; சிறந்த எதிர்காலத்தை வடிவமைத்து வருகிறோம். இந்த நிலையங்கள், வட்டப் பொருளாதாரம் என்ற எமது பகிரப்பட்ட தூரநோக்குப் பார்வையை உருவாக்கி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அர்ப்பணிப்பை வலியுறுத்துகின்றன.” என தெரிவித்தார்.

இந்தக் கருத்தை பிரதிபலிக்கும் விதமாக, Janathakshan GTE Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி ஜனக ஹேமதிலக்க அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில், இந்த மறுசீரமைப்பு பொருள் நிலையங்கள் வெறும் கட்டமைப்பு மட்டும் அல்ல; நிலையான மாற்றங்களுக்கான எமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகின்றன. வட்டப் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதன் மூலமும், புத்தாக்கத்தை கடைப்பிடிப்பதன் மூலமும், பிரகாசமான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை இடுகிறோம். எமது பங்காளிகளுடன் சேர்ந்து, நிலையான வளர்ச்சிக்கான பாதையையும் சுற்றுச்சூழல் தாக்குப்பிடிப்புத் திறனையும் உருவாக்கி வருகிறோம்.” என தெரிவித்தார்.

Golden PET கம்பனி பிரைவேட் லிமிடெட் மற்றும் ஜே ஏ எஸ் பெர்னாண்டோ ஆகிய நிறுவனங்கள் ‘மேம்பட்ட கழிவு நிர்வகிப்பிற்கான முறைசாரா துறை கழிவு சேகரிப்பு முறையை வலுப்படுத்துதல் மற்றும் இலங்கையில் திட்டத்திற்கு பங்களிக்கும் PET பிளாஸ்டிக்கை அதிகரித்தல் மற்றும் மீள்சுழற்சி செய்தல்’ ஆகியவற்றின் கீழ் நிறுவப்பட்ட ஐந்தாவது மற்றும் ஆறாவது பொருள் மீட்பு வசதிகளை (MRFs) அமைத்து நாடு முழுவதும் உள்ள MRFகளின் விரிவான நெட்வொர்க்கை மேம்படுத்துகிறது. The Coca-Cola Foundation மற்றும் Eco Spindles ஆகியவற்றின் ஆதரவுடன், Janathakshanனுடன் இணைந்து, இந்த முயற்சி பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது, சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு ஒரு செயலூக்கமான அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது மற்றும் இலங்கை பிளாஸ்டிக் மாசுபாட்டை நிவர்த்தி செய்வதில் Coca-Cola அறக்கட்டளையின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

The Coca-Cola Foundation தொடர்பாக

Coca-Cola நிறுவனம் இயங்கும் உலக சமூகங்களிலும், எங்கள் ஊழியர்கள் வாழ்ந்து பணியாற்றும் இடங்களிலும், நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதே, Coca-Cola அறக்கட்டளையின் நோக்கமாகும். சிக்கலான உலகளாவிய சவால்களை எதிர்த்துப் போராடும், மதிப்பிடத்தக்க மற்றும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் மாற்றக்கூடிய கருத்துகளையும் நிறுவனங்களையும் நாங்கள் ஆதரிக்கிறோம். பாதுகாப்பான குடிநீரை நிலையான முறையில் அனைவருக்கும் கிடைக்கச் செய்தமை, காலநிலை தாங்கு திறன் மற்றும் பேரிடர் அபாய தயார்நிலை மற்றும் மீட்பு நடவடிக்கைகள், வட்டப் பொருளாதாரம், பொருளாதார மேம்பாடு மற்றும் எமது சொந்த ஊர் சமூகத்தை பாதிக்கும் காரணங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறோம். 1984 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதிலிருந்து, உலக சமூகங்களை வலுப்படுத்துவதற்கான தனது பணியில், Coca-Cola அறக்கட்டளை 1.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் மேற்பட்ட மானியங்களை வழங்கியுள்ளது. Coca-Cola அறக்கட்டளை பற்றிய மேலும் தெரிந்து கொள்ள, தயவுசெய்து இங்கேயுள்ள லிங்கை கிளிக் செய்து பார்வையிடவும்: https://www.coca-colacompany.com/shared-future/communities/the-Coca-Cola-foundation

 

සුවහසක් සතුන්ගේ ජීවිත බේරා ගනිමින්...
Inovartic Leads UAE-Sri Lanka Breakthrough...
IFS Foundation takes on the...
Sunshine Foundation for Goodஇன் 20வது...
Kaushala Amarasekara wins prestigious Chartered...
සොෆ්ට්ලොජික් ලයිෆ් 2024 CA TAGS...
CEPA හි නව විධායක අධ්‍යක්ෂවරයා...
இலங்கை பெருந்தோட்டத் துறையின் ஒளிமயமான எதிர்காலம்
සොෆ්ට්ලොජික් ලයිෆ් 2024 CA TAGS...
CEPA හි නව විධායක අධ්‍යක්ෂවරයා...
இலங்கை பெருந்தோட்டத் துறையின் ஒளிமயமான எதிர்காலம்
இலங்கையர்களின் புன்னகைக்கு வலுவூட்டும் DENTA வின்...