குழந்தைகளுக்காக நிதி திரட்டும் ‘Country Roads’ இசை நிகழ்ச்சி ஒக்டோபர் 19இல் Cinnamon Life இல் நடைபெறவுள்ளது

Share

Share

Share

Share

இலங்கை மற்றும் தெற்காசியாவில் நடைபெறும் மிகவும் பழமையான குழந்தைகளுக்கான ஆதரவு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியான “Country Roads” தனது 37ஆவது ஆண்டு நிறைவு விழாவை இவ்வாண்டு கொண்டாடுகிறது.
அந்த வகையில், Country Music Foundation (CMF) அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆண்டுக்கான Country Roads இசை நிகழ்ச்சி, தெற்காசியாவின் முதல் ஒருங்கிணைந்த சுற்றுலா விடுதியான Cinnamon Life வளாகத்தில் உள்ள “The Forum” அரங்கில் எதிர்வரும் ஒக்டோபர் 19ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த இசை நிகழ்ச்சி தொடர்பில் Country Music Foundation இன் தலைவர் பைசால் ஸமத் கருத்து தெரிவிக்கையில், “இலங்கையில் புதிதாக திறக்கப்பட்ட Cinnamon Life at City of Dreams ஒரு அற்புதமான கட்டிடக்கலை சாதனை ஆகும். மேலும், 2025 Country Roads நிகழ்ச்சிக்கான எங்களின் அதிகாரப்பூர்வ விருந்தோம்பல் பங்காளராக அவர்களை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் விசுவாசமான ரசிகர்களும், புதிய ரசிகர்களும் இந்த அழகான புதிய இடத்தில் அற்புதமான நேரத்தை அனுபவிப்பார்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. அதே நேரத்தில், தங்கள் முழு மனதையும் இசைக்க அர்ப்பணிக்கும் உள்ளூர் மற்றும் சர்வதேச கலைஞர்களின் “all-star lineup” நிகழ்ச்சியையும் அவர்கள் ரசிப்பார்கள்.” என்று கூறினார்.

Country Roads இசை நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ விருந்தோம்பல் பங்காளராக Cinnamon Life கைகோர்த்துள்ளதுடன், அனுசரணையாளர்களாக Dilmah, LOLC, Cargills மற்றும் Firefly ஆகிய நிறுவனங்கள் மீண்டும் இணைந்துள்ளன. அதேபோல, 37ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு LankaPay நிறுவனமும் முதல் முறையாக இணைந்து கொண்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்த நிலையில், Country Roads இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டுகளை 3,000 ரூபா மற்றும் 4,000 ரூபாய் ஆகிய விலைகளில் கிருலப்பனை, கொஹுவெல (Bernards), Majestic City மற்றும் Staples Street ஆகிய இடங்களில் உள்ள Cargills Food City கிளைகளில் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த ஆண்டு நடைபெறும் இசை நிகழ்ச்சியில் ஜெர்மனியின் Mavericks இசைக்குழு முக்கிய கலைஞர்களாக பங்கேற்கவுள்ளனர். இவர்கள் தங்கள் சிறப்பான பாடல்களையும் அழகான நிகழ்ச்சிகளுடன் மீண்டும் ஒருமுறை ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளார்கள். அத்துடன், இந்நிகழ்ச்சியில் புகழ்பெற்ற Cosmic Rays, Feizal மற்றும் Country Revival குழு ஆகியன உள்ளூர் கலைஞர்களாக பங்கேற்கிறார்கள். இது தவிர, திலான் விஜேசிங்க மற்றும் பிரபல கிட்டார் இசைக்கலைஞர் Allan Outschoorn ஆகியோரும் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சி சர்வதேச மற்றும் உள்ளூர் இசைக் கலைஞர்களின் சிறந்த கலவையாக அமையவுள்ளது.

இந்த இசை நிகழ்ச்சியில் பங்குபற்றுவது தொடர்பில் Allan Outschoorn கருத்து தெரிவிக்கையில், “Cinnamon Life இன் அழகிய மேடையில் பாட மிகவும் ஆவலாக உள்ளேன். அதேபோல, 2025 Country Roads இசை நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள ஏனைய கலைஞர்களுடன் இணைவதில் பெருமைப்படுகிறேன். Country Music Foundation நடத்தும் இந்த இசை நிகழ்ச்சி குழந்தைகள் அறக்கட்டளைகளுக்கு நிதி திரட்டுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, எதிர்வரும் ஒக்டோபர் 19ஆம் திகதி நீங்களும் வந்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.” என்று தெரிவித்தார்.

இதனிடையே, இந்த ஆண்டு Country Roads இசை நிகழ்ச்சியில் முக்கிய அம்சமாக முதன்முறையாக இளம் இசைக் கலைஞரும் YouTube பிரபலமுமான Manethree பங்கேற்கவுள்ளதுடன், அவர் இது தொடர்பில் கருத்து தெரிவித்த போது,
“சிறு வயதிலிருந்தே, இசை எனது சுய வெளிப்பாட்டின் மொழியாகவும், மற்றவர்களுடன் உறவை வளர்க்கும் பாலமாகவும் இருந்தது. ஏழு வயதில் பாடத் தொடங்கி, பத்து வயதில் கிட்டார் வாசிக்க ஆரம்பித்தேன். கொரோனா காலத்தில் சமூக வலைதளங்களில் பிறர் பாடல்களை பாடி பதிவேற்றினேன். நான் பெற்ற நேர்மறையான கருத்துகள் நேரடி நிகழ்ச்சிகளை செய்ய என்னை ஊக்குவித்தன. மக்களை உணர்ச்சிவசப்படுத்தி ஆழமாக உணர வைக்கும் இசையை உருவாக்குவதை நான் எப்போதும் நேசித்து வந்தேன். இலங்கை முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு மாற்றத்தை ஏற்படுத்தி, அன்பு, மகிழ்ச்சி மற்றும் ஆதரவை வழங்க இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதில் நான் பெருமைப்படுகிறேன்,” என அவர் கூறினார்.

Country Roads இசை நிகழ்ச்சி என்பது முற்றிலும் தன்னார்வலர்களால் நடத்தப்படும் ஒரு தொண்டு நிகழ்ச்சி ஆகும். கடந்த 37 ஆண்டுகளாக, 1988 முதல், இந்த நிகழ்ச்சி தனது வருமானத்தில் 100% தொகையை குழந்தைகள் நல அமைப்புகளுக்கு வழங்கி வருகிறது. இதுவரை பல மில்லியன் ரூபா மதிப்புள்ள உதவிகள் குழந்தைகளின் அத்தியாவசிய தேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Huawei Commercially Verifies the World’s...
MAS Holdings, වේගවත් තිරසාර ඇඟලුම්...
Colombo Comedy Show 2025 to...
MAS ஹோல்டிங்ஸினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘Plan for...
JAAFஇன் ஆடை ஏற்றுமதி செயல்பாடு குறித்த...
BYD நிறுவனத்தின் வாகனங்கள் மீள் அழைப்பு:...
Evolution Auto opens Sri Lanka’s...
எவல்யூஷன் ஒட்டோ, இலங்கையின் முதல் பல்வகைப்பட்ட...
BYD நிறுவனத்தின் வாகனங்கள் மீள் அழைப்பு:...
Evolution Auto opens Sri Lanka’s...
எவல்யூஷன் ஒட்டோ, இலங்கையின் முதல் பல்வகைப்பட்ட...
Social Media’s Role in STEM...