ஏப்ரல் 2025ல் இலங்கையின் ஆடை ஏற்றுமதி வலுவான செயல்திறனை பதிவு செய்துள்ளது, மொத்த ஏற்றுமதிகள் கடந்த ஆண்டு அதே மாதத்துடன் ஒப்பிடும்போது 15.14% அதிகரித்துள்ளன. இந்த வளர்ச்சிக்கு அமெரிக்கா (6.83% அதிகரிப்பு), ஐரோப்பிய ஒன்றியம் (UK – ஐக்கிய இராஜ்சியம் தவிர) (27.04% அதிகரிப்பு), மற்றும் ஐக்கிய இராஜ்சியம் (7.45% அதிகரிப்பு) உள்ளிட்ட முக்கிய சந்தைகளில் இருந்து வந்த உறுதியான தேவை காரணமாகும். பிற சந்தைகளுக்கான ஏற்றுமதிகளும் 21.18% அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனவரி முதல் ஏப்ரல் 2025 வரை, மொத்த ஆடை ஏற்றுமதி 1.66 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இது 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தை விட 12.4% அதிகரிப்பைக் காட்டுகிறது. குறிப்பா\க, ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி 18.13%, அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 10.06%, மற்றும் பிற சந்தைகளுக்கான ஏற்றுமதி 13.56% அதிகரித்துள்ளன. அதே நேரத்தில், இங்கிலாந்து சந்தை 6.26% வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்த முடிவுகள் தற்போதைய உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் இலங்கையின் ஆடைத் துறையின் தாங்கும் திறனையும், தொடர்ச்சியான போட்டித்தன்மையையும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. மேலதிகத் தகவல்களுக்கும், கடந்த ஐந்து ஆண்டுகளின் தரவு ஒப்பீடுகளுக்கும் இணைக்கப்பட்டுள்ள விரிவான அட்டவணைகளைப் பார்க்கவும்.
இந்த முடிவுகள், உலகளாவிய சவால்கள் நீடிக்கும் இந்தக் காலகட்டத்திலும் இலங்கையின் ஆடைத் தொழில்துறையின் உறுதிப்பாடு மற்றும் போட்டித்தன்மையை ஏற்பட்டுள்ளது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. இதுதொடர்பான தரவுகள் தம்மிடம் உள்ளதாக கூட்டு ஆடைச் சங்கங்களின் மன்றம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பபிடத்தக்கது.