சமையல் கலையின் புத்தாக்கப்படுத்தலை ஊக்குவிக்கும் வகையில் CAFE 2025க்கு Diamond அனுசரணை வழங்கும் Asriel

Share

Share

Share

Share

இலங்கையின் சமையல் கலைத் துறையின் முன்னணி நிறுவனமான Asriel Marketing Pvt Ltd, தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக Culinary Art Food Expo (CAFE 2025) இன் Diamond அனுசரணையாளராக இணைவதாக அண்மையில் அறிவித்துள்ளது. தெற்காசியாவின் முன்னணி உணவு கண்காட்சியும், இலங்கையின் மிகப்பெரிய உணவு கண்காட்சியுமான CAFE 2025 இன் 22வது பதிப்பு இந்த ஆண்டு நடைபெற உள்ளது.

இந்தக் கண்காட்சி 2025 ஜூன் 13 முதல் 15 வரை சிறிமாவோ பண்டாரநாயக்க நினைவு கண்காட்சி மையத்தில் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. சமையல் கலையின் கலைநயம், தொழில் துறை புத்தாக்கங்கள் மற்றும் நிலைத்தன்மை வாய்ந்த உணவுத் தீர்வுகள் குறித்த பல்வேறு அம்சங்களைக் கண்டறியவும், உள்நாட்டு மற்றும் சர்வதேச சமையல் திறமைகளைக் காணவும் CAFE 2025 வாய்ப்பை வழங்குகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த Asriel நிறுவனத்தின் தலைவர் ஷிரான் பீரிஸ் அவர்கள், “CAFE 2025 கண்காட்சியின் Diamond அனுசரணையாளராக தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆதரவளிக்க முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஒவ்வொரு ஆண்டும் சமையல் கலைத் துறையின் புதிய பரிமாணங்களை வெளிக்கொணரும் இந்த தனித்துவமான கண்காட்சி, ஆண்டுதோறும் அதிகரித்த வெற்றியுடன் முன்னேறி வருகிறது. இதன் வெற்றிக்கு பங்களித்த ஏற்பாட்டாளர்கள், பங்கேற்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 2025 கண்காட்சி, சமையல் கலைஞர்களின் திறமைகள், சாதனைகள் மற்றும் புத்தாக்கமான உணவு கருத்துகளின் ஒரு தனித்துவமான கொண்டாட்டமாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என தெரிவித்தார்.

இந்தக் கண்காட்சியில் நடைபெறவிருக்கும் நேரடி சமையல் போட்டிகள், நடைமுறை பயிற்சிப்பட்டறைகள் மற்றும் இத்துறையில் பெயர் பெற்ற நிபுணர்கள் வழிநடத்தும் அறிவுறுத்தல் நிகழ்ச்சிகளில் ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்கும் வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். மேலும், சமையல் கலையின் புத்தாக்கங்கள் மற்றும் தொழில்நுட்ப சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் சமையல்காரர்கள் தங்களின் உச்சத் திறமைகளை வெளிக்காட்டும் ‘Battle of the Chefs’ போட்டியும் இங்கு நடைபெறும். இப்போட்டியை WACS சான்றிதழ் பெற்ற சர்வதேச நிபுணர்களைக் கொண்ட நடுவர் குழு ஒன்று மதிப்பீடு செய்ய உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த Asriel நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திமுத் பீரிஸ் அவர்கள் “பல ஆண்டுகளாக சமையல் கலையில் இலங்கையர்கள் காட்டும் ஆர்வத்தையும் திறமைகளையும் நாங்கள் கண்கூடாகக் கண்டுள்ளோம். அத்திறமைகளை மேலும் முன்னேற்றும் இந்தப் பயணத்தின் ஒரு பங்காளியாக இருக்க முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். CAFE உறவு எப்போதுமே ஒரு கண்காட்சிக்கு அப்பாற்பட்டது – இது கற்றல் மற்றும் வளர்ச்சிக்கான ஒரு பெரும் வாய்ப்பாகும். சமையல் கலையின் சிறப்பை மேலும் உயர்த்துவதற்காக இத்துறையில் உள்ள அனைவரும் மீண்டும் ஒன்றிணைவதைக் காண்பதே எங்கள் எதிர்பார்ப்பு.” என தெரிவித்தார்.

மேலும், CAFE 2025 கண்காட்சி வலையமைப்பு (networking), அறிவு பகிர்வு மற்றும் ஒத்துழைப்புக்கான ஒரு மையமாக விளங்கும். உணவு மற்றும் விடுதித் துறையின் முன்னணித் தலைவர்களை ஒரே இடத்தில் ஒன்றிணைக்கும் இந்த நிகழ்வு, Asriel நிறுவனத்தின் Diamond அனுசரணையாளர் பங்களிப்புடன், சமையல் கலையின் சிறப்பு, தொழில் துறை புத்தாக்கங்கள் மற்றும் பல்வேறு உணவு பண்பாடுகளை வளர்ப்பவர்களை ஊக்குவிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Asriel தொடர்பாக
இலங்கையின் உணவுத் தீர்வுகள் துறையில் முன்னணி நிறுவனமாக செயல்படும் Asriel Holdings, HORECA, QSR, பேக்கரி உணவுப்பொருட்கள், SMMT மற்றும் பால் தொழில்துறைக்கான வசதிகளை வழங்குகிறது. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் ஏற்றுமதி உற்பத்திகள் மற்றும் அதிநவீன வசதிகளுடன், தரம் மற்றும் புத்தாக்கமான தீர்வுகள் மூலம் முன்னிலை வகிக்கும் Asriel, இலங்கையர்களுக்கு உயர்தர உணவுப் பொருட்களை வழங்குவதற்கான உத்தியாக்க பங்காளியாகவும் செயல்படுகிறது.

ලංකා වැවිලිකරුවන්ගේ සංගමයේ 171 වන...
මගී සුවපහසුව වෙනුවෙන් කවදත් මුල්තැන...
Huawei Unveils Three-step “ACT” Pathway...
Reclaim Your Home’s Aesthetics: Samsung...
Ceylon Specialty Estate Tea Awards...
Sumathi IT Introduces Sri Lanka’s...
Cinnamon Life ශ්‍රී ලංකාවේ වෙරළ...
ශ්‍රී ලාංකේය තාරුණ්‍යයේ අධ්‍යාපනය, ගවේෂණය...
Sumathi IT Introduces Sri Lanka’s...
Cinnamon Life ශ්‍රී ලංකාවේ වෙරළ...
ශ්‍රී ලාංකේය තාරුණ්‍යයේ අධ්‍යාපනය, ගවේෂණය...
HNB மற்றும் TVS Lanka இணைந்து...