சர்வதேச சிறுவர்கள் தினத்தை மகிழ்ச்சியுடன் மற்றும் படைப்பாற்றலுடன் கொண்டாடிய Sunshine Holdings PLC

Share

Share

Share

Share

Sunshine Holdings PLC அண்மையில் Battaramullaவில் உள்ள Ape Gama வளாகத்தில் சர்வதேச சிறுவர்கள் தினத்தை கொண்டாடியது. இந்த நிகழ்வு 16 வயதுக்குட்பட்ட SUN ஊழியர்களின் குழந்தைகளுக்கு ஒரு அன்பான சந்தோஷம் தந்த தருணமாக இருந்தது, அவர்கள் நாள் முழுவதும் வேடிக்கை, படைப்பாற்றல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.

Sunshine Holdings PLC குழந்தைகளின் திறன் மற்றும் வாக்குறுதியின் மீது வலுவான நம்பிக்கை கொண்டுள்ளது, அவர்களை ஒரு ஆசீர்வாதமாகவும் பிரகாசமான எதிர்காலத்திற்கான நம்பிக்கையாகவும் கருதுகிறது. சர்வதேச சிறுவர்கள் தின கொண்டாட்டம் இந்த உறுதிப்பாட்டிற்கான ஒரு சான்றாக இருந்தது, பெற்றோர்களுடன் சேர்ந்து குழந்தைகள் உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியால் நிரப்பப்பட்ட நாளில் பங்கேற்க கூடினர்.

இந்த நிகழ்வு பல்வேறு வகையான நடவடிக்கைகளை உள்ளடக்கியிருந்ததுடன், ஒவ்வொரு குழந்தையும் விரும்பும் ஏதாவது ஒன்றைக் கண்டறியும் வகையில் உறுதி செய்தது. வண்ணமயமான முகச் சித்திரம் வரைதல் அமர்வுகளில் இருந்து மிகவும் கவனத்தை ஈர்க்கும் கலை, நடனம் மற்றும் பாட்டு போட்டிகள், உற்சாகமூட்டும் விளையாட்டுக்கள், ஒரு கவர்ச்சிகரமான மாயாஜால நிகழ்ச்சி மற்றும் ஒரு Fancy Dress போட்டி வரை, குழந்தைகள் பல்வேறு பொழுதுபோக்கு உலகை அனுபவித்து மகிழ்ந்தனர்.

இந்த சிறுவர் தின கொண்டாட்டத்தின் இறுதி நிகழ்வாக கலை, பாடல் மற்றும் நடனப் போட்டிகளின் வெற்றியாளர்களை தெரிவு செய்து அவர்களுக்கு பரிசில் வழங்குதல் நடைபெற்றது, அங்கு திறமையான சிறுவர்கள் அவர்களது திறமைகள் மற்றும் படைப்பாற்றலுக்காக கௌரவிக்கப்பட்டனர்.

Sunshine Holdings PLC இல் இந்த சிறுவர்கள் தின கொண்டாட்டம், குழந்தைகளுக்கு ஆதரவான மற்றும் ஊக்கமளிக்கும் சூழலை உருவாக்கி, ஊழியர்களுடனான உறவை வலுப்படுத்த அமைப்பின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியது. இது உன்னதமான நினைவுகளை உருவாக்கி, எதிர்காலம் இந்த இளம், நம்பிக்கைக்குரிய தனிநபர்களுக்கு சொந்தமானது என்ற நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்த ஒரு நாளாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

nVentures Emerges as Sri Lanka’s...
Sri Lanka’s Textile and Apparel...
Sunshine Holdings reports 11.6% YoY...
C Rugby තරඟාවලියට සියල්ල සූදානම්...
நிலையான வணிகத்தை வலுப்படுத்த, ஐரோப்பிய ஒன்றியத்தின்...
இலங்கையின் ஜவுளி மற்றும் ஆடைத் துறையானது...
மீளவும் C Rugby சுற்றுத்தொடர்! கோலாகலத்திற்கு...
Bring home Samsung’s 32-inch HD...
இலங்கையின் ஜவுளி மற்றும் ஆடைத் துறையானது...
மீளவும் C Rugby சுற்றுத்தொடர்! கோலாகலத்திற்கு...
Bring home Samsung’s 32-inch HD...
HNB Finance இன் “திரியென் தியுனுவட்ட...