சர்வதேச மகளிர் தினத்தை பெருமையுடன் கொண்டாடிய HNB FINANCE

Share

Share

Share

Share

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC, 2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்தை கடந்த மார்ச் 8ம் திகதி, தனது சக பெண் பணியாளர்களை மதித்து பாராட்டும் வகையில் ஒரு நிகழ்வினை “பெண்களின் வளர்ச்சியில் முதலீடு செய்து முன்னேற்றத்தை விரைவுபடுத்துங்கள்” (Invest in Women. Accelerate Progress) என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்தது.

இவ் நிகழ்வானது நிறுவனத்தின் தலைமை அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் ஏனைய கிளைகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஏராளமான பெண் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

இவ் நிகழ்வினை மேலும் சிறப்பிக்கும் வகையில், இலங்கை மற்றும் லெபனானில் உள்ள தொலைக்காட்சி தொகுப்பாளினியும் , முன்னணி பேஷன் மொடலும், சர்வதேச அழகுப் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதிபடுத்தும் திருமதி ஸ்டெபானி சிறிவர்தன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். திருமதி ஸ்டெபானி சிறிவர்தன அவர்கள், வாடிக்கையாளர்களை கையாளும் ஆளுமை, பொதுத் தொடர்புகளைப் பேணுதல் மற்றும் தொடர்பான கருத்துரை அங்கிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததுடன், இவ் அமர்வு 5 முக்கிய விடயங்களான நல்ல மன ஆரோக்கியம், தன்னம்பிக்கையை வளர்ப்பது, நேர்மறை மற்றும் உணர்திறன் நுண்ணறிவு, தகவல் தொடர்பு திறன் அதன் நெறிமுறைகள் மற்றும் சமூக நடத்தை ஆகியவை வளர்க்கும் வகையில் கருத்திற்கொண்டு நடத்தப்பட்டது.

நிகழ்வின் கலந்து கொண்ட சிறப்பு அதிதிகள் மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் விசேட புகைப்பட அமர்வொன்று இடம்பெற்றதுடன், கலந்துகொண்ட அனைவருக்கும் பெறுமதியான பரிசில்கள் வழங்கப்பட்டன.

HNB FINANCE இன் சர்வதேச மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்ட HNB FINANCE இன் முகாமைத்துவப் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத், “பெண்களின் வளர்ச்சியில் முதலீடு செய்வதால் எவ்வாறு சமூக முன்னேற்றத்தை துரிதப்படுத்தும் என்பதை விளக்கினார். சர்வதேச மகளிர் தினம், அவர்கள் செய்யும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வாய்ப்பை வழங்குகிறது, அதே நேரத்தில் பணியிடத்தில் அவர்களை மேம்படுத்துவதற்கான எங்கள் முடிவில்லாத பயணத்தை மேம்படுத்துகிறது.” என தெரிவித்தார்.

 

සම්පත් බැංකුවේ තිරසාර නායකත්වය, ශ්‍රී...
The Impossible Shot – வனவிலங்கு...
Samsung Sri Lanka Celebrates International...
GenAI இன் தொழில்நுட்பக் குறைபாடுகள் நிறுவனங்களின்...
නවතම Samsung Galaxy S25 මාදිලිය...
JAAF, ඇඟලුම් කර්මාන්තය මුහුණ දෙන...
ඇඟලුම් කර්මාන්තයේ උන්නතිය කාන්තාවන්ගේ කැපවීමයි
She shapes the fabric: Women...
JAAF, ඇඟලුම් කර්මාන්තය මුහුණ දෙන...
ඇඟලුම් කර්මාන්තයේ උන්නතිය කාන්තාවන්ගේ කැපවීමයි
She shapes the fabric: Women...
2024 ජාතික විකිණුම් සම්මාන උළෙලේදී...