சவாலான காலங்களில் விற்பனை நடவடிக்யை மேம்படுத்த ‘Project Delta’வை அறிமுகம் செய்யும் Sunshine Consumer

Share

Share

Share

Share

Sunshine Consumer Lanka (SCL), சன்ஷைன் ஹோல்டிங்ஸின் நுகர்வோர் பிரிவான இலங்கையின் பல்வகைப்பட்ட நிறுவனங்களின் குழுவானது, சவாலான பெரிய பொருளாதார நிலைமைகளை எதிர்கொண்டு வெற்றிகரமாக முன்னேறுவதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கையாக ‘Project Delta’ என்ற புதிய புரட்சிகரமான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம், நிறுவனத்தின் விநியோக வலையமைப்பு, சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனையை மிகவும் திறமையாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுவதும், மாறிவரும் சந்தை நிலைமைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து, கோவிட் தொற்றுநோய்க்குப் பிந்தைய காலத்தில் வாடிக்கையாளர்களின் தேவைகளை சிறப்பாகப் பூர்த்தி செய்யும் நிறுவனமாக Sunshine Consumer ஐ உருவாக்குவதும் ஆகும்.

இந்நிறுவனம் தனது அனைத்து வருவாய் ஈட்டும் நடவடிக்கைகளையும் கையாளும் விதத்தை மாற்றுவதற்கான ஒரு விரிவான முயற்சியாக ‘Project Delta’ ஏப்ரல் 2023 இல் ஆரம்பிக்கப்பட்டது. Sunshine Consumer தனது விற்பனை நடவடிக்கைகளில் புரட்சியை ஏற்படுத்துவதற்காக சிரேஷ்ட சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை நிபுணர் நந்தன விக்கிரமகேயின் வழிகாட்டுதலின் கீழ் Project Deltaஇன் முதல் கட்டத்தை ஆரம்பித்தது. அங்கு, தற்போதுள்ள விற்பனை அமைப்பு, விற்பனை அமைப்புகள் மற்றும் விற்பனை பணியாளர்கள் பற்றிய விரிவான மதிப்பீடு செய்யப்பட்டது.

முதல் கட்டத்தில் சேகரிக்கப்பட்ட சிறப்பு அறிவின் அடிப்படையில் இரண்டாம் கட்டத்தில் புரட்சிகர முன்மொழிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் நிறுவனத்தின் விற்பனை செயல்பாடுகளை மறுவடிவமைப்பதில் ஆர்வம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வாடிக்கையாளர் கவனம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை முன்மொழிவுகள் வலியுறுத்துகின்றன. மேலும், இரண்டாம் கட்டம் நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்கும், மதிப்புமிக்க தகவல்கள் மற்றும் பகுப்பாய்வுகளிலிருந்து பெறப்பட்ட அறிவைப் பயன்படுத்துவதற்கும், மேலும் ஆற்றல்மிக்க வணிகச் சூழலில் வெற்றிபெறத் தேவையான திறன்கள் மற்றும் கருவிகளுடன் அதன் விற்பனைப் பணியாளர்களை வடிவமைப்பதற்கும் வழி வகுக்கிறது.

“Sunshine Consumerஇல் நாங்கள் சவாலான பொருளாதார நிலைமைகளில் முன்னேறும்போது புத்தாக்கம் மற்றும் சூழலுக்கு ஏற்றவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதிபூண்டுள்ளோம். எமது ஒட்டுமொத்த விற்பனை நடவடிக்கையில் மேற்கொள்ளப்படும் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு நந்தன விக்கிரமகே தலைமை தாங்கியதனால், எந்தவொரு வணிகச் சூழலிலும் வெற்றிபெறக்கூடிய வலுவான மற்றும் நெகிழ்ச்சியான விற்பனைப் பணியாளர்களை உருவாக்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என Sunshine Consumer நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஷியாம் சதாசிவம் தெரிவித்தார்.

‘Project Delta’வின் கீழ் செயல்படுத்தப்பட்ட மூலோபாய நடவடிக்கைகள் ஏற்கனவே Sunshine Consumerக்கு விதிவிலக்கான வளர்ச்சி மற்றும் செயல்திறனைக் காட்டியுள்ளன. இதன்படி, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், நுகர்வோர் பிரிவின் வருமானம் 21% கணிசமான அளவு அதிகரித்து FY24 முதல் காலாண்டில் 4.7 பில்லியன் ரூபாவைப் பதிவுசெய்ததுடன், குழுமத்தின் வருமானத்தில் 35% பங்களிப்பை அதற்கமைய காலப்பகுதியில் வழங்கியுள்ளது. இலங்கையின் முன்னணி வர்த்தக நாமங்களான Zesta, Watawala, Ran Kahata மற்றும் Daintee ஆகியவற்றுடன் நுகர்வோர் பிரிவில் நிறுவனம் வலுவான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது.

Sunshine Consumer புதிதாக வளர்ந்து வரும் உணவு மற்றும் பான பிராண்ட் நிறுவனமாகும், இது தேயிலை மற்றும் தின்பண்டத் துறையில் சந்தைத் தலைமையைக் கொண்டுள்ளது. எங்கள் பிராண்டுகள் Zesta (தேயிலை), Watawala Tea, Ran Kahata (தேயிலை), Daintee (டோஃபி & சாக்லேட்டுகள்), Milady (மிட்டாய்) மற்றும் Xtra (லோசெஞ்சஸ் & பப்பில்கம்). எங்கள் மூன்று தேயிலை பிராண்டுகளும் சேர்ந்து 50%க்கும் அதிகமான சந்தைப் பங்கைக் கொண்டுள்ளன. மேலும் இந்நிறுவனம் டோஃபி மற்றும் ஸ்வீட்ஸ் துறையில் 40% சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது.

Sunshine Holdings PLC என்பது இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பல்வகைப்பட்ட உள்ளூர் நிறுவனங்களின் குழுவாகும். இது சுகாதாரம், நுகர்வுப் பொருட்கள் மற்றும் விவசாய வணிகம் உள்ளிட்ட இலங்கைப் பொருளாதாரத்தின் முக்கியமான துறைகளில் மதிப்பை உருவாக்குகிறது. 1967 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த குழுமமானது இலங்கையின் முன்னணி வர்த்தக நாமங்களான Zesta Tea, Watawala Tea, Ran Kahata, Daaintee, Milady மற்றும் Healthguard Pharmacy போன்றவற்றின் தாயகமாக உள்ளது, 1500 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் 51 பில்லியன் ரூபா வருவாயைக் கொண்டுள்ளது. குழுமத்தின் வணிக பிரிவுகளில் Sunshine Healthcare Lanka, Sunshine Consumer Lanka மற்றும் Watawala Plantations PLC ஆகியவை அந்தந்த துறைகளில் முன்னோடிகளாக உள்ளன. அந்த நிறுவனங்கள் 2023ல் “Great Place to Work” சான்றிதழைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

JAAF මෙරට ඇඟලුම් ක්ෂේත්‍රයේ රැකියා...
ஹோமாகம ஜனாதிபதி கல்லூரியில் “Yalu Daskam”...
Renowned Global Experts to Inspire...
Sri Lanka Apparel achieves 5%...
Softlogic Life to introduce AI...
සිය කටහඬ භාවිත කරමින් TikTok...
TikTok ஊடாக சமூகத்தை விழிப்பூட்டும் Saasha...
‘වත්මන් පොල් අර්බුදය විසඳීම සඳහා...
සිය කටහඬ භාවිත කරමින් TikTok...
TikTok ஊடாக சமூகத்தை விழிப்பூட்டும் Saasha...
‘වත්මන් පොල් අර්බුදය විසඳීම සඳහා...
நாட்டின் ஆடைத் துறையில் வேலைவாய்ப்புக்காக மாற்றுத்திறனாளிகளை...