சிறந்த சில்லறை விற்பனையாளர்களை கௌரவிக்கும் Retailer Summit 2026ஐ ஜூலை 29இல் நடத்தும் Samsung Sri Lanka

Share

Share

Share

Share

Samsung Sri Lanka நிறுவனம், தனது நாடு தழுவிய சில்லறை மற்றும் விநியோகஸ்தர் வலையமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களை ஒன்றுதிரட்டி, Retailer Summit 2026 நிகழ்வை எதிர்வரும் ஜூலை 29 ஆம் திகதி பிரம்மாண்டமாக நடத்தவுள்ளது.

சில்லறை விற்பனையாளர்கள், வர்த்தகப் பங்காளிகள் மற்றும் Samsung ஊழியர்கள் என சுமார் 460 பேர் பங்கேற்கவுள்ள இந்தச் சிறப்புமிக்க மாலைப் பொழுதில், இலங்கை முழுவதும் Samsung வர்த்தக நாமத்தின் இருப்பை வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் செயல்பட்ட விற்பனையாளர்களின் அர்ப்பணிப்பு மனஉறுதி மற்றும் பங்களிப்பு ஆகியவை கௌரவிக்கப்படவுள்ளன.

இம்முயற்சியின் மூலம், Samsung நிறுவனத்தின் தலைவர்கள், வணிகப் பங்குதாரர்கள் மற்றும் தேசிய விநியோகஸ்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, 2025 ஆம் ஆண்டில் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் சிறந்த விற்பனைச் சாதனைகளையும் அவர்களின் அர்ப்பணிப்பையும் கௌரவிக்கவுள்ளனர். இலங்கையில் விற்பனையாகும் ஒவ்வொரு Samsung சாதனத்திற்கும் பின்னாலிருந்து, வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு சரியான தேர்வைச் செய்ய உதவும் சில்லறை விற்பனைப் பங்குதாரர்களே இந்த நிகழ்வின் முக்கிய கதாநாயகர்கள் ஆவர். ஒரு தசாப்தத்திற்கும் மேலாகத் தொடரும் இந்த கூட்டுப் பங்கான்மைகள், மாறிவரும் சந்தை நிலவரங்கள் மற்றும் பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் வலுவாக நிலைத்து நின்றுள்ளதால், அவர்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பிற்கு Samsung தெரிவிக்கும் அர்த்தமுள்ள நன்றியாக இம்மாநடு அமைகிறது.

இந்த நிலையில், Retailer Summit 2026 குறித்து Samsung Sri Lanka-வின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. சங்ஹ்வா சோங் கருத்து தெரிவிக்கையில், “இலங்கை முழுவதும் Samsung நிறுவனத்தின் பாகமாக இருப்பவர்கள் எமது சில்லறை விற்பனைப் பங்காளிகளே ஆவர். வாடிக்கையாளர்களைப் பற்றிய அவர்களின் புரிதல், மாறிவரும் சந்தை நிலைமைகளுக்கு ஏற்பச் செயல்படும் திறன் மற்றும் நம்பகமான சேவைகளை வழங்குவதில் உள்ள அர்ப்பணிப்பு ஆகியவை நாடு முழுவதும் எமது இருப்பை தொடர்ந்து வலுப்படுத்தி வருகின்றன. அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கவும், நமது கூட்டு வெற்றியை முன்னெடுத்துச் செல்லும் இந்தப் பங்களிப்புகளைக் கொண்டாடுவதற்கும் இந்த மாநாடு ஒரு சிறந்த வாய்ப்பாகும்.” என்று கூறினார்.

நாடு தழுவிய விதத்திலும் மற்றும் பிராந்திய அளவிலும் சிறந்து விளங்கிய 57 விற்பனையாளர்களின் சிறந்த சாதனைகளை கௌரவிப்பதன் மூலம், ஒட்டுமொத்த சில்லறை மற்றும் விநியோகஸ்தர் சமூகத்திற்கான தனது அர்ப்பணிப்பை Samsung Sri Lanka மீண்டும் உறுதிப்படுத்தவுள்ளது. நாடு தழுவிய அங்கீகாரத்தில் கொழும்பு – Buyzone Mobile Pvt Ltd, கொழும்பு – The Smartphone Shop Pvt Ltd, கொழும்பு மெட்ரோ – Celltronics Pvt Ltd மற்றும் கம்பஹா – Thilakawardhana Cellular ஆகிய நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன. இவர்களின் பங்களிப்பானது Samsung வர்த்தக நாமத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு பின்னால் உள்ள கூட்டு முயற்சியைப் பிரதிபலிக்கிறது.

நடைபெறவுள்ள இந்த நிகழ்வு குறித்த எதிர்பார்ப்பும் உற்சாகமும் Samsung இன் நாடு தழுவிய ரீதியில் சில்லறை வலையமைப்பு முழுவதும் எதிரொலித்து வருகிறது. கொண்டாட்டம், அங்கீகாரம் மற்றும் பெருமிதம் நிறைந்த ஒரு நேர்த்தியான மாலைப் பொழுதிற்கு குழுக்கள் தயாராகி வருகின்றன. இந்த வலையமைப்பிற்கு ஆண்டின் மிக மறக்கமுடியாத நிகழ்வுகளில் ஒன்றாக அமையவுள்ள இந்நிகழ்வு, அதன் பிரம்மாண்டத்தையும் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கும் சூழலை உறுதி அளிக்கிறது.

இந்தக் பிரமாண்டமான மாலைப் பொழுதிற்காக Samsung இன் நாடு தழுவிய ரீதியில் சில்லறை விற்பனை வலையமைப்பு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. விருது வழங்கும் நிகழ்வாக மட்டுமன்றி, பங்குதாரர்ககளிடையேயான உறவை வலுப்படுத்தவும், பகிர்ந்தளிக்கப்பட்ட வளர்ச்சியைக் கொண்டாடவும், அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி இணைந்து பயணிக்கவும் இந்த மாநாடு வழிவகுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறு மற்றும் நடுத்தர அளவிலான ஆடைத்...
Carnage அறக்கட்டளையின் ஆதரவோடு சர்வதேச விளையாட்டரங்கில்...
First Capital Treasuries, மூலதனச் சந்தை...
A Little Love for Every...
BYD, කුඩා පරිමාණ වාහන වෙළෙඳපොළට...
එල්නිනෝ තත්වයෙන් ඔබ්බට – දේශගුණික...
Sophos, කළමනාකරණය කළ සයිබර් අවදානම්...
Vision AI තාක්ෂණයෙන් යුත් නවතම...
එල්නිනෝ තත්වයෙන් ඔබ්බට – දේශගුණික...
Sophos, කළමනාකරණය කළ සයිබර් අවදානම්...
Vision AI තාක්ෂණයෙන් යුත් නවතම...
ITC Ratnadipa Presents Weddings Above...