சுற்றுச்சூழல், உடல்நலம் மற்றும் பாதுகாப்பு கொள்கைகளுக்கான அதன் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

Share

Share

Share

Share

இது நிறுவனத்தில் பணிபுரியும் 1,700க்கும் மேற்பட்ட ஊழியர்களின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது

இலங்கையில் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ், அதன் சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு (Environmental, Health and Safety – EHS) ஆகிய கொள்கைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. சன்ஷைன் ஹோல்டிங்ஸின் செயல்பாடுகளில் ஆழமாகப் பதிந்துள்ள பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்தும் வகையில், அண்மையில் Sunshine Safety Forumஇல் இந்த அறிவிப்பு செய்யப்பட்டது. தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனத்தின் (National Institute of Occupational Safety and Health – NIOSH) பணிப்பாளர் நாயகம் டொக்டர் சம்பிகா அமரசிங்க இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், இந்த நிகழ்விற்கு சன்ஷைன் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷியாம் சதாசிவம், சன்ஷைன் ஹோல்டிங்ஸின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஊழியர்களின் சுகவாழ்வை உறுதிப்படுத்தவும், சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கவும், பாதுகாப்பு மற்றும் பொறுப்புணர்வு கலாச்சாரத்தை மேம்படுத்தவும் இன்று நிறுவனங்களுக்கு EHS கொள்கைகள் முக்கியமானவை. மேலும் இது பணியிட விபத்துக்களில் இருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்கவும், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், விபத்து தொடர்பான செலவுகளைக் குறைக்கவும் மற்றும் நிலையான செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் உதவுகிறது. இந்த சூழ்நிலையில், சன்ஷைன் ஹோல்டிங்ஸ், பாதுகாப்பான மற்றும் அதிக பொறுப்பான பணிச்சூழலை உறுதி செய்வதற்காக அதன் EHS கொள்கைகளை புதுப்பிப்பதன் மூலம் பொறுப்பான வணிக நடைமுறைகளுக்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. புதுப்பிக்கப்பட்ட EHS கொள்கைகள், அங்கு பணிபுரியும் 1,700க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்குப் பொருந்தும் நவீன பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் தரங்களை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சன்ஷைன் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. ஷியாம் சதாசிவம் இந்தக் கொள்கைகளின் முக்கியத்துவம் குறித்து கருத்து தெரிவிக்கையில், “எங்கள் வெற்றிக்கு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணிச்சூழல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். எங்களின் புதுப்பிக்கப்பட்ட EHS கொள்கையானது ஊழியர்களின் நல்வாழ்வு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான எங்கள் அர்ப்பணிப்புக்கு ஒரு சிறந்த சான்றாகும். ஒன்றாக செயற்படுவதன் மூலம் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வில் கவனம் செலுத்தும் பணியிட கலாச்சாரத்தை உருவாக்க முடியும்.” என தெரிவித்தார்.

புதிய EHS இலச்சினை மற்றும் பாதுகாப்புக் கொள்கை சன்ஷைன் பாதுகாப்பு மன்றத்தில் வெளியிடப்பட்டதுடன் பணியிடத்தில் விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்வு கலாச்சாரத்தை உருவாக்குவதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை இது தெளிவாக நிரூபித்தது. இது தவிர, சன்ஷைன் குழுமத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்ற அமைப்புகளின் பாதுகாப்பு, தீயணைப்பு மற்றும் முதலுதவி குழுக்களும் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த மேம்படுத்தப்பட்ட EHS நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்வதற்கு இந்தக் குழுக்கள் பொறுப்பாகும், மேலும் பணியிடத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் தாங்கள் வகிக்கும் முக்கியப் பங்கைக் காட்ட இந்த அணிகள் ஒவ்வொன்றுக்கும் பாதுகாப்பு உடைகள் வழங்கப்படுகின்றன.

தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிப்பதில் Sunshine Holdings இன் அர்ப்பணிப்பைப் பாராட்டிய கலாநிதி சம்பிக்க அமரசிங்க குறிப்பிடுகையில், “சன்ஷைன் ஹோல்டிங்ஸின் EHS கொள்கையை மேலும் வலுப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு சிறப்பானது. புதிய பாதுகாப்புக் கொள்கைகளுடன் புதுப்பிக்கப்பட்ட இந்த EHS கொள்கை, ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் வணிக நோக்கங்களை எவ்வாறு வெற்றிகரமாக அடைய முடியும் என்பதற்கு ஒரு முக்கிய உதாரணமாகக் குறிப்பிடலாம். மேலும் சன்ஷைன் ஹோல்டிங்ஸின் வணிக மாதிரி, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது, வலுவான மற்றும் நிலையான வணிக நடைமுறைகளை உருவாக்குவதற்கான சிறந்த மாதிரியை வழங்குகிறது. இந்த முறைகள் நிறுவனம் தொடர்ந்து வெற்றிகரமாகச் செயல்படவும் அதன் பங்குதாரர்களின் நம்பிக்கையைப் பெறவும் உதவுகிறது.” என்றார்.

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் தொடர்பாக
சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. என்பது இலங்கையின் பொருளாதாரத்தின் முக்கியத் துறைகளான சுகாதாரம், நுகர்வுப் பொருட்கள் மற்றும் விவசாய வணிகத்தில் பெறுமதியை உருவாக்குவதன் மூலம் “தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு” பங்களிக்கும் பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனமாகும்.
1967 இல் ஸ்தாபிக்கப்பட்ட குழுவானது, தற்போது இலங்கையின் முன்னணி வர்த்தக நாமங்களான Zesta Tea, Watawala Tea, Ran Kahata, Daintee Confectionary மற்றும் Healthguard Pharmacy போன்றவற்றின் தாயகமாக உள்ளது, 2,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் 52 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. மேலும் அந்த துறைகள் 2023 இல் “வேலை செய்வதற்கான சிறந்த இடம்” என்று சான்றளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

FitsAir தற்போது வணிக வகுப்பு சேவைகளையும்...
Samsung නවතම 12KG Front Load...
Shaping Tomorrow’s Tech as 99x...
RIUNIT புறநகர் சொத்து சந்தை அறிக்கை:...
සංජීව් හුලුගල්ල මහතා Cinnamon Life...
ශ්‍රී ලාංකේය ඇඟලුම් ක්ෂේත්‍රය තිරසාර...
Bespoke AI சலவைத் தயாரிப்புகளை புதிய...
Samsung Sri Lanka Expands Bespoke...
ශ්‍රී ලාංකේය ඇඟලුම් ක්ෂේත්‍රය තිරසාර...
Bespoke AI சலவைத் தயாரிப்புகளை புதிய...
Samsung Sri Lanka Expands Bespoke...
தனது வணிக விரிவாக்கத்தை மேற்கொள்ளும் முகமாக...