சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான “Adopt a Bin” திட்டத்தை விரிவுபடுத்த கொழும்பு துறைமுக நகரத்துடன் கைகோரக்கும் Coca-Cola

Share

Share

Share

Share

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நிறுவன சமூக பொறுப்புணர்வின் ஒரு புதிய அத்தியாயமாக, Coca-Cola Beverages Sri Lanka Ltd. நிறுவனம், கொழும்பு துறைமுக நகரத்துடன் இணைந்து “Adopt a Bin” என்ற முன்னோடித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. இலங்கையில் இதுபோன்ற முதல் முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம், PET பிளாஸ்டிக் கழிவுகளை மேலாண்மை செய்வதில் வணிக நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது.

அந்தவகையில் கொழும்பு துறைமுக நகரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான அதன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், PET பிளாஸ்டிக் கழிவுகளை சுழற்சி முறையில் மேலாண்மை செய்வதற்கான முக்கிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், கடற்கரை நடைபாதை மற்றும் பொது மணற்பரப்பு உட்பட அனைத்து பகுதிகளிலும் PET சேகரிப்புத் தொட்டிகள் வைக்கப்படும். இதன் மூலம் உள்ளூர் பார்வையாளர்களும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளும் பிளாஸ்டிக் கழிவுகளை பொறுப்புடன் அகற்ற ஊக்குவிக்கப்படுவார்கள். இது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான அவர்களின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறது.

Coca-Cola நிறுவனம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு “Give Back Life” என்ற PET பிளாஸ்டிக் சேகரிப்பு மற்றும் மறுசுழற்சி திட்டத்தைத் தொடங்கியது. இது ஆரம்பத்தில் உள்ளூர் திட்டமாக இருந்தாலும், Coca-Cola-வின் உலகளாவிய packaging தொலைநோக்குப் பார்வைக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டது. இந்த முயற்சி மூலம், Coca-Cola நிலையான கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சியை ஊக்குவித்து, தூய்மையான எதிர்காலத்திற்கு பங்களிக்கிறது.

இந்த கூட்டாண்மையின் கீழ், ஒவ்வொரு சேகரிப்புத் தொட்டியும் பயிற்சி பெற்ற ஊழியர்களால் கண்காணிக்கப்படும். சேகரிக்கப்படும் PET பிளாஸ்டிக் கழிவுகள் அங்கீகரிக்கப்பட்ட மறுசுழற்சி நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கு அவை துடைப்பங்கள், தூரிகைகள் மற்றும் ஆடைகளுக்கான நூல் போன்ற பயனுள்ள பொருட்களாக மாற்றப்படும்.

இந்த மறுசுழற்சி பொருட்கள் 15க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இத்திட்டம் சுற்றுச்சூழல் நிலைபேறாண்மை மட்டுமல்லாமல், பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், முழு செயல்முறையும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதிப்படுத்த கண்காணிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்படும்.

Coca-Cola நிறுவனம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக “Adopt a Bin” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் அலுவலக வளாகங்களில் PET பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக அகற்றுதல் மற்றும் மறுசுழற்சி செய்வதை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஊழியர்களிடையே பொறுப்பான கழிவு மேலாண்மை கலாச்சாரத்தை வளர்க்க முடியும். இத்திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்மாதிரியாக திகழ்வதோடு, பல்வேறு நிறுவனங்களுடனான கூட்டுறவின் மூலம் கழிவு மேலாண்மையில் பெரு நிறுவனங்களின் பங்கு முக்கியமானது என்பதையும் வலியுறுத்துகிறது.

இந்தத் திட்டம் நிறுவன ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்களை அலுவலகங்களிலும், அருகிலுள்ள பொது இடங்களிலும் வைக்கப்பட்டுள்ள “Adopt a Bin” சேகரிப்புத் தொட்டிகளைப் பயன்படுத்தி நிலையான கழிவு அகற்றல் முறைகளை பின்பற்ற ஊக்குவிக்கிறது. மேலும், PET பிளாஸ்டிக் கழிவுகள் சரியான வழிகளில் மறுசுழற்சி செய்யப்படுவதை உறுதிசெய்ய, ஊழியர்கள் வீட்டிலிருந்து கழிவுகளை கொண்டுவரவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இத்திட்டத்தின் சிறப்பைப் பற்றி Coca-Cola Beverages Sri Lanka நிறுவனத்தின் முகாமைத்துவப் பிரதீப் பாண்டே கருத்து தெரிவிக்கையில், ‘கொழும்பு துறைமுக நகரத்துடனான எமது கூட்டுறவு எங்களின் நிலைபேறாண்மை பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். கொழும்பு துறைமுக நகரம் இலங்கையின் வணிக மற்றும் முதலீட்டு வளர்ச்சிக்கு உந்துசக்தியாக அமையும் ஒரு முக்கிய திட்டமாகும். இது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும்.

“Give Back Life” போன்ற திட்டங்களின் மூலம், சுழற்சி பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் திட்டங்களில் ஒத்துழைக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். Coca-Cola நிறுவனத்தில், நாங்கள் வெறுமனே பானங்களை மட்டுமே போத்தலில் அடைக்கவில்லை. நாங்கள் நோக்கத்தையும், அக்கறையையும், மேலும் நிலைபேறாண எதிர்காலத்திற்கான தொலைநோக்குப் பார்வையையும் போத்தலில் அடைக்கிறோம்’ என்று தெரிவித்தார்.

இதுதொடர்பில் CHEC Port City Colombo (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் Xiong Hongfeng கருத்து தெரிவிக்கையில், “Coca-Cola நிறுவனத்துடன் இணைந்து PET சுழற்சி பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தக் கூட்டுறவு அவர்களின் நிலைபேறாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை வெளிப்படுத்துகிறது. கடற்கரை நடைபாதை மற்றும் அனைத்து பொது இடங்களிலும் PET சேகரிப்புத் தொட்டிகள் வைக்கப்படும். இதன் மூலம் பொறுப்பான கழிவு அகற்றல் மற்றும் PET கழிவு மேலாண்மை கலாச்சாரத்தை ஊக்குவிக்க நாங்கள் எதிர்பார்க்கிறோம். 91 ஹெக்டேருக்கும் அதிகமான பொது இடங்களுடன், நல்வாழ்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இலங்கைக்கான தூய்மையான எதிர்காலத்திற்கு பங்களிக்கும் இந்த முயற்சிக்கு ஆதரவளிப்பதில் நாங்கள்
Coca-Cola நிறுவனத்தின் முதன்மை சுற்றுச்சூழல் திட்டமான “Give Back Life” (GBL) புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. இத்திட்டம் 2035 ஆம் ஆண்டிற்குள் நிறுவனம் விற்பனை செய்யும் ஒவ்வொரு போத்தல் அல்லது கேனுக்கும் நிகராக ஒன்றை சேகரித்து மறுசுழற்சி செய்வதை இலக்காகக் கொண்டுள்ளது. இதுவரை “Give Back Life” திட்டத்தின் கீழ் 650க்கும் மேற்பட்ட PET பிளாஸ்டிக் சேகரிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொன்றும் சுமார் 5000 கிலோ பிளாஸ்டிக் சேகரிக்கும் திறன் கொண்ட 21 பெரிய அளவிலான கூடாரங்கள், 28 சேகரிப்பு மையங்கள் மற்றும் 11 பொருள் மீட்பு வசதிகள் அடங்கும். மேலும், “Adopt a Beach” என்ற துணைத் திட்டத்தின் கீழ் 8 கடற்கரைகள் மற்றும் நீர்வழிகள் தத்தெடுக்கப்பட்டு தினமும் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.

Coca-Cola நிறுவனத்தின் “Adopt a Bin” திட்டம் இலங்கை முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் சிந்தனை கொண்ட பல்வேறு நிறுவனங்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விரிவாக்கம் சுற்றுச்சூழல் நிலைபேறாண்மைக்கான Coca-Cola-வின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.

99x Expands Its Malaysian Initiative...
துணி காயவைக்கும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி: Samsung...
Sampath Bank and Micro Cars...
HNB සහ Plantchem හවුල්කාරීත්වයෙන් Lovol...
மொறட்டுவையில் புதிய காட்சியறை மற்றும் BYD...
காப்புறுதி துறையின் எதிர்கால வளர்ச்சியை முன்னெடுக்கும்...
HBO Max global expansion hits...
ශ්‍රී ලංකාවේ සහ මාලදිවයිනේ Coca-Cola...
காப்புறுதி துறையின் எதிர்கால வளர்ச்சியை முன்னெடுக்கும்...
HBO Max global expansion hits...
ශ්‍රී ලංකාවේ සහ මාලදිවයිනේ Coca-Cola...
මොරටුව නව ප්‍රදර්ශනාගාරය සහ BYD...