சுற்றுலா துறையில் புதிய பரிமாணங்களைத் திறக்கும் வகையில், Deepa Mehtaவுடன் இணைந்து ‘Signature Weekend’ நிகழ்ச்சியை வழங்கும் Cinnamon Signature Selection

Share

Share

Share

Share

சினிமாத்துறையின் ஒரு தனித்துவமான இலக்கான, இலங்கையின் அழகை உலகத்திற்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கை

Cinnamon Hotels & Resorts, தனது Signature Selection வர்த்தக நாமத்துடன் இணைந்து இலங்கையை சினிமாக்களுக்கான ஒரு கவர்ச்சிகரமான இடமாக மாற்றுவதற்கான வசதிகளை வழங்க தயாராக உள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஆஸ்கார் விருது பெற்ற திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான தீபா மேதாவை (Deepa Mehta) கௌரவிக்கும் வகையில், 2025 மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய திகதிகளில் ஒரு சிறப்பு “Signature Weekend” நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

Cinnamon Bentota Beach – Signature Selection மற்றும் Cinnamon Life at City of Dreams ஆகியவற்றின் விருந்தோம்பலுடன் இணைந்து, இலங்கையில் படமாக்கப்பட்ட தீபா மேதாவின் (Deepa Mehta) சிறப்பு திரைப்படங்களான Midnight’s Children, Water மற்றும் Funny Boy ஆகியவற்றை அந்த திகதிகளில் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது, இது இந்த நிகழ்வின் ஒரு தனித்துவமான அம்சமாகும்.

இந்த நிகழ்வின் சிறப்பம்சம், உலகளாவிய மற்றும் பிராந்திய திரைப்பட தயாரிப்பாளர்களை மீண்டும் இலங்கைக்கு வரவேற்று, மிகவும் வெற்றிகரமான திரைப்படங்களை அழகாக திரையிடுவதற்கான ஒரு தனித்துவமான இலக்காக இலங்கையை முன்வைப்பதாகும். Signature Selection மூலம், Cinnamon Life இலங்கையின் கலாச்சாரம், கதைசொல்லல் மற்றும் அழகான அனுபவங்களை வழங்குவதற்காக அர்ப்பணித்துள்ளது. இதன் மூலம், இலங்கையை சுற்றுலாப் பயணிகளுக்கும், கலைஞர்களுக்கும் ஒரு மையமாக மாற்றுவதில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

தீபா மேதாவின் (Deepa Mehta) இலங்கைக்கான மீண்டும் வருகை மிகவும் சிறப்பானதாகும், ஏனெனில் இது திரைப்படத் தயாரிப்பாளருக்கும் படப்பிடிப்பு இடத்திற்கும் இடையேயான ஆக்கபூர்வமான இணைப்பை மேலும் வெளிப்படுத்துகிறது. பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்ட பல திரைப்படங்களை படமாக்கிய பெருமையுடன், அவர் இலங்கைக்கு மீண்டும் வருகை தருவது திரைப்படத்துறை மற்றும் இலங்கையின் சினிமா சுற்றுலாத்துறை இரண்டிலும் புதிய துவக்கத்திற்கு வழிவகுக்கும்.

Signature Weekend நிகழ்ச்சி நிரல்
2025 மே 31 – Cinnamon Bentota Beach – Signature Selection
10.00 AM – Book Reading & Screening: Midnight’s Children
3.00 PM – Panel Discussion & Screening: Water

2025 ஜூன் 01 – Cinnamon Life at City of Dreams
3.00 PM – Screening & Round Table: Funny Boy, followed by cocktails and an afterparty with the cast and crew
திரைப்பட ரசிகர்களுக்கும், தனித்துவமான அனுபவங்களைத் தேடும் சுற்றுலாப் பயணிகளுக்கும், புகழ்பெற்ற திரைப்படங்கள் உருவான இடங்களில் நேரடியாக அந்த சினிமா அனுபவங்களை சுவைக்க ஒரு சிறந்த வாய்ப்பை இந்த நிகழ்வு வழங்குகிறது.

அனுமதிச்சீட்டுகள் மற்றும் பெக்கேஜ்
Single Screening Ticket: LKR 10,000
Signature Stay Package (Cinnamon Bentota Beach Signature Selection): LKR 75,000
Funny Boy Screening + Event (Cinnamon Life City of Dreams): LKR 12,500
நுழைவுச் சீட்டுகள் வரையறுக்கப்பட்டுள்ளன! இந்த சிறப்பு நிகழ்வுக்கு உங்கள் இடத்தை உடனடியாக முன்பதிவு செய்யவும். பதிவு செய்ய www.cinnamonhotels.com/signature-events என்ற இணைப்பைக் கிளிக் செய்து பிரவேசிக்கவும்.

மேலதிக தகவல்களுக்கு 0112 161 161 என்ற எண்ணுடன் தொடர்புகொள்ளவும் அல்லது [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தகவல் ஒன்றை அனுப்பவும்

nVentures Emerges as Sri Lanka’s...
Sri Lanka’s Textile and Apparel...
Sunshine Holdings reports 11.6% YoY...
C Rugby තරඟාවලියට සියල්ල සූදානම්...
நிலையான வணிகத்தை வலுப்படுத்த, ஐரோப்பிய ஒன்றியத்தின்...
இலங்கையின் ஜவுளி மற்றும் ஆடைத் துறையானது...
மீளவும் C Rugby சுற்றுத்தொடர்! கோலாகலத்திற்கு...
Bring home Samsung’s 32-inch HD...
இலங்கையின் ஜவுளி மற்றும் ஆடைத் துறையானது...
மீளவும் C Rugby சுற்றுத்தொடர்! கோலாகலத்திற்கு...
Bring home Samsung’s 32-inch HD...
HNB Finance இன் “திரியென் தியுனுவட்ட...